Wednesday, June 25, 2014

NALLAVANPALAYAM - நல்லவன்பாளையம்


SHRI ADHEESWARAR JINALAYA - ஸ்ரீ ஆதீஸ்வரர் ஜினாலயம் 




Location  lies on the map in the coordination of (12.20102, 79.04738) put the latitude, Longitude on the search box 

Map for Jain pilgrimage centres:   Click   NALLAVANPALAYAM on the list.
(Tamil nadu / Kerala)
(Not fully updated) 

சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் :  கிளிக் செய்யவும் 
(தமிழ்நாடு / கேரளா )

Route:-

Tindivanam→ Gingee→ Tiruvannamalai -Nallanvanpalayam - Total = 71 k.m. 


Villupuram→Vettavalam→ Tiruvannamalai -
Nallanvanpalayam - Total =70 k.m. 

Ulundurpet→ Tirukovilur→ Tiruvannamalai -
Nallanvanpalayam - Total = 82 k.m. 

Vandavasi→ Chetpet→Avalurpet→Tiruvannamalai -
Nallanvanpalayam - Total = 82 k.m.



செல்வழி:- 

திண்டிவனம்→ செஞ்சி→திருவண்ணாமலை - நல்லவன் பாளையம் - 71 கி.மீ. 


விழுப்புரம்→ வேட்டவலம்→திருவண்ணாமலை - 
நல்லவன் பாளையம்- 70 கி.மீ. 

உளுந்தூர்பேட்டை→ திருக்கோவிலூர்→திருவண்ணாமலை - 
நல்லவன் பாளையம் -80கி.மீ. 

வந்தவாசி→ சேத்பட்→அவலூர்பேட்டை→திருவண்ணாமலை -
நல்லவன் பாளையம் - 82கி.மீ.






SHRI ADHINATHAR  -  ஸ்ரீ ஆதிநாதர் 


ஓம் ஹ்ரீம் ஸ்ரீ விருஷப தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ
அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா


ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து அயோத்தியா நகரத்து இக்ஷூவாகு வம்சத்து நாபி மஹாராஜாவிற்கும், மருதேவி- க்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும், பொன்- வண்ணரும் 500 வில் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 84 லக்ஷ்ம் பூர்வம் ஆயுள் உடையவரும், விருஷப லாஞ்சனத்தை உடையவரும், கோமுக யக்ஷ்ன், சக்ரேஸ்வரி யக்ஷி யர்களால் சேவிக்கப்பட்டவரும் விருஷப சேனர் முதலிய 84 கணதர பரமேட்டிகளை உடையவரும் 14 நாட்கள் உபவாசத்துடன் பல்லியங்காசனமாக இருந்து கைலாசகிரியில் மாக மாத கிருஷ்ண சதுர்தசியில் ஆயிரம் முனிவர்களுடன் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீவிருஷப தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து! 




TEMPLE FIRST FLOOR  -  ஆலய முதல் தளம் 













Shri Adhinathar , three feet Black marble statue is the sanctum sanctorum of North facing Jain temple of Nallavanpalayam is on the first floor. There is little and fine tower is on the temple.

Daily pooja of twice is conducted in the 50 year old temple. The ground floor is very useful for meditation and festival activities.


வடதிசை நோக்கிய இந்த ஆலயத்தின் முலவர் ஸ்ரீஆதிநாதர் மூன்றடி உயர கருமை நிற பளிங்குக் கல்லால் ஆனது. மாடியின் மேல் அமைந்த இவ்வாலயம் சிறிய அழகான கோபுர சிகரம் உள்ளது. பல உலோகச் சிற்பங்களும் உள்ளன.
 

இருவேளை நித்ய பூஜை நடைபெறும் இவ்வாலயத்தில் கீழே பெரிய கூடம் தியான மண்டபமாகவும், விழாக்காலங்களில் பயன்படும் படி அமைந்துள்ளது. சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது.

==========

No comments:

Post a Comment