Shri CHANDRANATHAR JAIN TEMPLE - ஸ்ரீ சந்திர நாதர் ஜிநாலயம்
LOCATION MAP :
KANNALAM lies on the map
in the coordination of (12.33232, 79.37961) ie put the latitude, Longitude on the search box
Map for Jain pilgrimage centres: Click KANNALAM on the list.
(Tamil nadu / Kerala)
(Not fully updated)
சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் : கிளிக் செய்யவும்
(தமிழ்நாடு / கேரளா )
ROUTE:
Tindivanam → Gingee → Kannalam- 39 k.m.
Villupuram → Gingee →Kannalam – 59 k.m
Tiruvannamalai → kilpennathur →melmalaiyanur→ Kannalam- 47 k.m.
Vandavasi → Chetpet →Kannalam- 45 k.m.
செல்வழி:
திண்டிவனம் → செஞ்சி → கன்னலம் - 39 கி.மீ..
விழுப்புரம் → செஞ்சி → கன்னலம்- 59 கி.மீ..
திருவண்ணாமலை → கிழ்பென்னாதூர் → மேல்மலையனூர் → கன்னலம் – 47 கி.மீ.
வந்தவாசி → சேத்பட் → கன்னலம்- 45 கி.மீ..
Shri CHANDRNATHAR MAIN DEITY - ஸ்ரீ சந்திரநாதர் மூலவர்
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ சந்திரபிரப தீர்த்தங்கராதி சகல முனி
கணேப்யோ
அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா
ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத
க்ஷேத்திரத்து சந்திரபுர நகரத்து இக்ஷ்வாகு வம்சத்து மஹாசேன மஹாராஜாவிற்கும், லக்ஷ்மணை
மஹாதேவிக்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும், வெள்ளை வண்ணரும் 150
வில் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 10 லக்ஷம் பூர்வம் ஆயுள்
உடையவரும், சந்திரன் லாஞ்சனத்தை உடையவரும், சாம யக்ஷ்ன், ஜ்வாலாமாலினி
யக்ஷியர்களால் சேவிக்கப்பட்டவரும் உத்திராதி முதலிய 99 கணதர பரமேட்டிகளை உடையவரும் ஒரு மாதம் ப்ரதிமா
யோகம் கொண்டவரும் சம்மேத கிரியில் பால்குண சுக்ல சப்தமி திதியில் 2 கோடி 80 லக்ஷத்து 4 ஆயிரத்து 595 முனிவர்களுடன்
லலித கூடத்தில் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீசந்திரபிரப தீர்த்தங்கர பரம
ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!
TEMPLE CORRIDOR - ஆலய திருச்சுற்று
At the bottom of Konnot hill, this Shri Chandraprabha Jain temple is situated. Triangular shape of the Image in the sanctum sanctorum is made of lime mortar, which belongs to 10-11 th century A D.. While marble thirthankar idols, 24 Jinars big and small stone icons is also there.
The 2 feet Shri Dharmadevi and Shri Brahmadevar statues are very old one. Goddess Shri Jwalamalini shrine room is on the left side of the corridor.
ஸ்ரீசந்திரப்பிரப நாதரை மூலவராக
கொண்ட இவ்வாலயம் கோன்னாட்டு மலையின் பின்னனியில் அழகாக அமைந்துள்ளது. முக்கோண வடிவில்
மண் சுதையால் செய்யப்பட்டுள்ள முக்குடையுடன் கூடிய 4 அடி உயர மூலவரின் அழகினைக் காணும்
போது கி.பி. 10-11 ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக தெரிகிறது.
மேலும் 2 அடி உயர ஸ்ரீதர்மதேவியின்
உருவச்சிலையும், ஸ்ரீபிரம்மதேவரின் சிலையும்
மிகவும் பழமையானவை. ஸ்ரீஜ்வாலாமாலினிக் கென்று
தனி சன்னதியும் உள்ளது. வெண்பளிங்கு ஜினர் சிலைகளும், 24 தீர்த்தங்கரர் கற்சிலை பெரியது,
சிறியதும், உலோகச் சிலைகளும் உள்ளன.
IDOLS -- சிலைகள்
No comments:
Post a Comment