Shri SHANTHINATHAR JAIN TEMPLE - ஸ்ரீ சாந்திநாதர் ஜினாலயம்
Location lies on the map in the coordination of (12.23873, 79.15439)ie put the latitude, Longitude on the
search box
(Tamil nadu / Kerala)
(Not fully updated)
சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் : கிளிக் செய்யவும்
(தமிழ்நாடு / கேரளா )
Tindivanam→ Gingee→ Somasipadi - Total = 56 k.m.
Villupuram→ Gingee → Somasipadi - Total = 66 k.m.
Tiruvannamalai → Somasipadi - Total = 10 k.m.
செல்வழி:-
திண்டிவனம்→ செஞ்சி→சோமாசிபாடி - 56 கி.மீ.
விழுப்புரம்→ வேட்டவலம்→சோமாசிபாடி - 56 கி.மீ.
திருவண்ணாமலை→சோமாசிபாடி - 10 கி.மீ.
shri Santhinathar Main deity - ஸ்ரீ சாந்திநாதர் மூலவர்
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ சாந்திநாத
தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ
அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா
ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத
க்ஷேத்திரத்து ஹஸ்திநாபுர நகரத்து குரு வம்சத்து விஸ்வசேன மஹாராஜாவிற்கும், ஜரா
மஹாதேவிக்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும், பொன் வண்ணரும் 40
வில் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் ஒரு லக்ஷம் வருடம் ஆயுள்
உடையவரும், ஹரினம் (மான்) லாஞ்சனத்தை உடையவரும், கருட யக்ஷ்ன், மஹாமாலை
யக்ஷியர்களால் சேவிக்கப்பட்டவரும் சக்ராயுதராதி முதலிய 36 கணதர பரமேட்டிகளை
உடையவரும் ஒரு மாதம் ப்ரதிமா யோகம் கொண்டவரும் சம்மேத கிரியில் ஜேஷ்ட க்ருஷ்ண
சப்தமி திதியில் 9 கோடா கோடி 9 லட்சத்து 9 ஆயிரத்து 999 முனிவர்களுடன் சுப்ரபாச
கூடத்தில் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீசாந்தி தீர்த்தங்கர பரம ஜிநேந்திர
சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!
TEMPLE INTERIOR VIEWS - ஜிநாலய உட்தோற்றம்
சிலைகள் IDOLS
In the
corridor in the south-west Shri
Padmavathy devi, North- west Shri Dharmadevi, North Navagra idols are situated.
Above the
front mandap Shri Adhinathar lime mortar
statue is seated. Around the Inner fortified wall 24 thirthangar statues are
mounted.
பல நூற்றாண்டுகளை கடந்துள்ள இவ்வாலயம், தொடக்கம் முதலே சோமாசிபாடி ஜிநாலயம் என்றே அழைக்கப்பட்டிருக்கிறது.
ஸ்ரீசாந்தநாதரை மூலவராக கொண்ட கிழக்கு நோக்கிய இந்த ஜிநாலயத்தில்,1946 ‡ல் பீடத்துடன் ஒரே கல்லில் செய்யப்பட்ட 4 அடி உயரமுள்ள அழகான மூலவருடன் பல உலோகப்படிமங்களான மகாமேரு, ஸ்ரீபார்ஸ்வநாதர் நவதேவதா, பஞ்சபரமேஷ்டி, யக்ஷ, யக்ஷியர்கள் போன்றவைகளும் அர்த்த மண்டபத்தை அலங்கரிக்கின்றன.
வெளியே முன்மண்டபத்தில் இரு துவார பாலகர்கள்,வடக்கில் நவக்கிரக சன்னதியும், திருச்சுற்றின் தென் மேற்கில் ஸ்ரீபத்மாவதி, வடமேற்கில் ஸ்ரீதர்மதேவி சன்னதிகளும் உள்ளன.
நுழைவு வாயிலின் உச்சியில் ஸ்ரீஆதிநாதரின் சுண்ணச்சிலை, சாமரர்களுடன் அமைத்துள்ளனர். மதிற்சுவரின் உடபுறம் 2 அடி உயரமுள்ள தீர்த்தங்கரர் சிலைகள் நிறுவப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment