Tuesday, June 24, 2014

MELATHIPAKKAM - மேலத்திபாக்கம்


Shri ANANTHANATHAR JAIN TEMPLE  -  ஸ்ரீ அனந்தநாதர் ஜினாலயம் 












Location:   lies on the Google map in the coordination of (12.31991, 79.54067) ie put the latitude, Longitude on the search box


Map for Jain pilgrimage centres:   Click    MELATHIPAKKAM on the list.
(Tamil nadu / Kerala)
(Not fully updated) 

சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் :  கிளிக் செய்யவும் 
(தமிழ்நாடு / கேரளா )

Route:-

 Tindivanam Vellimedupettai Melathipakkam - Total = 19 k.m.

 GingeeNattarmangalam Veeranamur Melathipakkam - Total = 28 k.m.

 Chetpet MelkalavaiBoonthai Veeranamur Melathipakkam - Total = 41.5 k.m.

 Vandavasi Vellimedupettai Melathipakkam - Total = 28 k.m. 



 செல்வழி:- 

திண்டிவனம் வெள்ளிமேடுபேட்டைமேல் அத்திப்பாக்கம் - 19 கி.மீ. 

வந்தவாசி வெள்ளிமேடுபேட்டைமேல் அத்திப்பாக்கம் - 28 கி.மீ. 

 செஞ்சி நாட்டார்மங்கலம்வீரனாமூர்மேல் அத்திப்பாக்கம் - 25 கி.மீ.

 சேத்பெட் மேல்கலவைபூந்தைவீரனாமூர்மேல அத்திப்பாக்கம் - 41.5 கி.மீ. 




Shri ANANTHANATHAR  MAIN DEITY  -  ஸ்ரீ ஆனந்தநாதர்  மூலவர் 



ஓம் ஹ்ரீம் ஸ்ரீ அனந்த தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ
அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா



ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து அயோத்தியா நகரத்து இக்ஷ்வாகு வம்சத்து சிம்மசேன மஹாராஜாவிற்கும், ஜயஸ்யாமா மஹாதேவிக்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும், பொன் வண்ணரும்  50 வில் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 30 லக்ஷம் வருடம் ஆயுள் உடையவரும், வல்லூகம் (கரடி) லாஞ்சனத்தை உடையவரும், பாதாள யக்ஷ்ன், அனந்தமதி யக்ஷியர்களால் சேவிக்கப்பட்டவரும் ஜெயராதி முதலிய 50 கணதர பரமேட்டிகளை உடையவரும் ஒரு மாதம் ப்ரதிமா யோகம் கொண்டவரும் சம்மேத கிரியில் சைத்ர அமாவாசை  திதியில் 96 கோடா கோடி 70 லட்சத்து 70 ஆயிரத்து 700 முனிவர்களுடன் ஸ்வயம்பிரப கூடத்தில் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீஅனந்த தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!



Circuitous Corridor  -  திருச்சுற்று தோற்றம் 





The Jain temple was built in the early Dravidian style of 9 a.d. or 10 a.d. Shri Anandhanatha thirthankar was holy-fastened in the sanctum sanctorum. A two stage viman was built over the sanctum having 12 thirthankar mortar made statues in the sitting posture on four directions. A padmam and Kalash on the peak.

Inside the sanctum plinth granite plate base relief of shri Anandha Jinar was installed. Two samara maids and tri-umbrella also engraved on it.  In the arthamandap got metal idols of important Jinars, Navadevatha, 24 clusters, Mahameru, Nandeeswara dweep model and some Yaksha, Yakshies are exhibit on platforms on either side. Marble made shri Anandha Jinar and shri Mahaveerar also on the center platform.

Southern side of the Mugamandap (inside of the temple) a Shri Brahmadevar was made of stone sitting on a  lime mortar elephant with a small viman; also prove the ancient. Northern side Shri Kooshmandini was in sitting posture on a Lion also installed. 

A circuitous open corridor has an altar and garden inside the compound structure. The east facing entrance way has no tower called as Kudagarai.

ஸ்ரீஅனந்தநாதரை மூலவராக கொண்டுள்ள இவ்வாலயம் அடிக்கடி சீரமைக்கப்பட்டு வந்துள்ளதால் அதன் பழமைக்கான ஆதாரங்கள் பல மறைக்கப்பட்டுள்ளன.

அதன் குடவரை மதிற்சுவரின் அமைப்பைக் காணும் போதும், திராவிட பாரம்பரிய முறையில் கர்ப்பக்கிருஹம், உள்ளாலை, அர்த்தமண்டபம், மகாமண்டபம், முகமண்டபம் போன்ற கட்டிட அமைப்பைக்காணும் போது 900-1000 ஆண்டுகளைக் கடந்து நிற்கும் என தோன்றுகிறது.
அதன் கருவறையை அலங்கரிப்பவர் ஸ்ரீஅனந்தநாதர் ஆவார். அவருடைய திருவுருவம் கற்பலகையில் புடைப்புச்சிலை உருவமாக செதுக்கப்பட்டு மேடையில் நிறுவப்பட்டுள்ளது. அமைதியாக பத்மாசன நிலையில் வேதிகையை அலங்கரிக்கின்றார். இருபுறமும் சாமரதாரிகள், முக்குடையுடன், லாஞ்சனமின்றி அமர்ந்த நிலையில் வடிக்கப்பட்டுள்ளதைக் காணும்போது 600 ஆண்டுகளைக் கடந்து வாழும் சிலையாக தெரிகிறது. கருவறையின் மேற்புறம் அழகிய துவிதள விமானத்தின் இரண்டு அடுக்குகளிலும் நாற்திசைகளில் கீழ்தளத்திலும், மேல்தளத்திலும்; கிரீவப் பகுதியிலும் பன்னிரண்டு தீர்த்தங்கரர் சிலைகள் அமர்த்தப்பட்டுள்ளன. விமான உச்சி பத்ம சிகர கலசத்துடன் உள்ளது.

அதனை அடுத்து உள்ளாலையும், அர்த்த்மண்டபத்தின் மத்தியில் தின பூஜை மேடையும் அமைக்கப்பட்டு அதில் அவ்வப்போது உள்ள வழிபாட்டிற்குரிய உலோகச் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் கீழ்மேல் திசைகளில் உள்ள மேடையில்  உலோகச் சிலைகளான முக்கிய தீர்த்தங்கரர் சிலைகள் பிரபாவளியுடனும், நவதேவதா, பஞ்சபரமேஷ்டி, ஸ்ருதஸ்கந்தம், மகாமேரு, நந்தீஸ்வர தீபம் போன்றவையும், முக்கிய யக்ஷன், யக்ஷியர்களின் உருவ சிலைகளும் அலங்கரிக்கின்றன. வெண்பளிங்கினால் ஆன அனந்தநாதர் சிலையும், மஹாவீரர் சிலையும் உள்ளன.

கருங்கல்லினால் ஆன ஸ்ரீபிரம்மதேவர், சுதையினால் செய்யப்பட்ட யானைமீதுள்ள விமானத்தில் நிறுவப்பட்டுள்ளார். வடபுறம் ஸ்ரீதர்மதேவி கற்சிலையும்  நிறுவப்பட்டுள்ளது.
மகாமண்டபத்தில் முகமண்டபம் பிரிக்கப்பட்டுள்ளது. நடுவே இரும்பு தட்டிகள் கொண்டு பாதுகாக்கப் பட்டுள்ளது. மகாமண்டபத்தின் முடிவில் நுழைவு வாயிலின் இருபுறமும் சுதையினாலான துவார பாலகர்கள் அழகாக அமைக்கப்பட்டுள்ளது.
ஆலயத்தின் கீழ்புற நுழைவு வாயிலின் முன்னர் திறந்த வெளி திருச்சுற்றில் பலிபீடமும், வடபுறம் நந்தவனமும் அமைத்துள்ளனர்.

அனைத்து சமணர் ஆலயங்களிலும் நடைபெறும் தினபூஜை, காலாண்டிற் கொருமுறை வரும் பூஜைகள், ஆண்டிற்கொரு முறை வரும் விசேஷங்கள், சடங்குகள் அனைத்தும் வளமைபோல் இந்த ஜிநாலயத்திலும் நடைபெறுகிறது.

ஜிநாலயத்திற்கு தென்புறம் தனியாலயம் ஒன்றுள்ளது. சதுரமாக அமைக்கப் பட்டுள்ள மண்டபத்தில் நீண்ட மேடையில் ஜினவாணி உருவமும், அதன் இருபுறமும் ஜினஆகம வடிவமும், ஸ்ருதஸ்கந்தமும் கற்சிலையாக வடிக்கப்பட்டு நிறுவப்பட்டுள்ளது.


அன்பர்கள் அனைவரும் அவ்விரு வாலயங்களுக்கும் சென்று தரிசித்தால் நலமுண்டாகும்.



INTERIOR VIEWS  -  உட்புறதோற்றம் 








JINAVANI ALAYAM  -  ஜினவாணி ஆலயம் 



 





A  new building was built on the old Mahaveerar temple on the south of the Ananthanathar temple. Inside Jinaahama (Jain literature form), Jina vani, Jinasrutham was worshipped in a Preaching Hall.


ஆலயத்தின் தெற்கில் முன்பிருந்த கோவிலில் தற்போது ஜினஆகமம். ஜினவாணி, ஜினஸ்ருதம் கற்சிலைகளை பெரிய கூடத்தில் நிறுவி வணஙகி வருகின்றனர். 


Photos on 15-08-2022














































No comments:

Post a Comment