Thursday, June 26, 2014

VALATHY - வளத்தி


  SHRI ADHINATHAR JAIN TEMPLE --  ஸ்ரீ ஆதிநாதர் ஜிநாலயம் 



JINALAYA FRONT VIEW  --  ஜினாலய முன் தோற்றம்



Location Map : click here

Map for Jain pilgrimage centres:   Click    VALATHY on the list.
(Tamil nadu / Kerala)
(Not fully updated) 

சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் :  கிளிக் செய்யவும் 
(தமிழ்நாடு / கேரளா )

ROUTE:

Tindivanam →  Gingee → Valathy- 15 k.m.

Villupuram  Gingee →Valathy – 62 k.m

Tiruvannamalai →  kilpennathur →melmalaiyanur Valathy - 44 k.m.

Vandavasi  Chetpet →Valathy – 42 k.m.


செல்வழி:

திண்டிவனம் → செஞ்சி  வளத்தி - 15கி.மீ..

விழுப்புரம்  செஞ்சி  வளத்தி- 62கி.மீ..

திருவண்ணாமலை   கிழ்பென்னாதூர்    மேல்மலையனூர்   வளத்தி  –44 கி.மீ.

வந்தவாசி → சேத்பட் → வளத்தி- 42கி.மீ..







                     

ஓம் ஹ்ரீம் ஸ்ரீ விருஷப தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ
அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா


ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து அயோத்தியா நகரத்து இக்ஷூவாகு வம்சத்து நாபி மஹாராஜாவிற்கும், மருதேவி க்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும், பொன் வண்ணரும் 500 வில் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 84 லக்ஷ்ம் பூர்வம் ஆயுள் உடையவரும், விருஷப லாஞ்சனத்தை உடையவரும், கோமுக யக்ஷ்ன், சக்ரேஸ்வரி யக்ஷி யர்களால் சேவிக்கப்பட்டவரும் விருஷப சேனர் முதலிய 84 கணதர பரமேட்டிகளை உடையவரும் 14 நாட்கள் உபவாசத்துடன் பல்லியங்காசனமாக இருந்து கைலாசகிரியில் மாக மாத கிருஷ்ண சதுர்தசியில் ஆயிரம் முனிவர்களுடன் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீவிருஷப தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!



CIRCUITOUS CORRIDOR  -  ஆலய திருச்சுற்று 





A four feet Shri ADHINATHAR granite statue was adorn the East facing valathy temple. A rectangular pedestal fastened image belongs to 11-12 th century A D made. Front wall of the sanctum sanctorum  thirthangar figure is engraved.

Shri Dharmadev, Shri Padmavathy shrines and altar is there.  A tall Holy post with Shri Adhinathar, Shri Ajithanathar, Shri sambavanathar and Shri Abinanthana nathar icons were engraved from East to North. Daily twice Pooja and festival celebration are conducted regularly. 

On the southern part of the Village Shri Parswanathar icon is on a rock, called as NUL GNANA GUNDRU ( Right Knowledge Rock).  It reveals us Jainism was there in the tenth century.

----------------

கீழ் திசை நோக்கிய இவ்வாலயத்தில் நான்கடி உயரம் உள்ள ஸ்ரீஆதிநாதர் திருஉருவம் அலங்கரிக்கிறது. நீண்ட சதுர மேடையில் அமர்ந்துள்ள அச்சிலையின் அமைப்பினைக் காணும் போது கி.பி. 11-12 ம் நூற்றாண்டைச் சார்ந்தது எனத் தெரிகிறது. கருவறைக்கு முன் தீர்த்தங்கரர் உருவம் செதுக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீதர்மதேவி, ஸ்ரீபத்மாவதிக்கு எனதனி சன்னதிகள் உள்ளன. பலிபீடமும் மற்றும் உயரமான மானஸ்தம்பமும், அதன் கிழக்கில் ஸ்ரீஆதிநாதர், தெற்கில் ஸ்ரீஅஜிதநாதர், மேற்கில் ஸ்ரீசம்பவநாதர் மற்றும் வடக்கில் அபிநந்தன நாதர் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
தினமும் இருவேளை பூஜையும். மற்றும் அனைத்து சமண விழாக்களும்  சிறப்பு வழிபாட்டுடன் நடைபெறுகிறது.

ஊருக்கு தெற்கில் ஸ்ரீபார்ஸ்வநாதர் நின்ற நிலையில் புடைப்பு சிற்பமாக பாறையில் வடிக்கப்பட்டு , அவ்விடம் நல்ஞான குன்று என்றும் வழங்கப்பட்டு வருகிறது. அதிலிருந்து கி.பி. 10 நூற்றாண்டில் சமணம் நன்கு வளர்ச்சியுற்று இருந்தது என்பதை அறியலாம்.

IDOLS     -    சிலைகள் 




2 comments: