Shri Adhinathar Jain Temple -- ஸ்ரீஆதிநாதர் ஜிநாலயம்
Location:
lies on the map in the coordination of (12.66954, 79.27852) put the latitude, Longitude on the search box
Map for Jain pilgrimage centres: Click KOSAPALAYAM
lies on the map in the coordination of (12.66954, 79.27852) put the latitude, Longitude on the search box
Map for Jain pilgrimage centres: Click KOSAPALAYAM
(Tamil nadu / Kerala)
சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் : கொசப்பாளையம் கிளிக் செய்யவும்
(தமிழ்நாடு / கேரளா )
ROUTE:-
Tindivanam → Vandavasi → Arni → Kosapalayam = 78 kms.
Kanchipuram → Arcot → Arani → Kosapalayam = 72 kms.
Vellore → Arni → Kosapalayam = 31 kms.
Villupuram → Gingee → Chetpet → Arni → Kosapalayam = 93 kms.
Tiruvannamalai → Polur → Arni → Kosapalayam = 60 kms.
Vandavasi → Arni → Kosapalayam = 44 kms.
செல்வழி:-
திண்டிவனம் → வந்தவாசி → ஆரணி → கொசப்பாளையம் = 78 கி.மீ.
காஞ்சிபுரம் → ஆற்காடு → ஆரணி → கொசப்பாளையம் = 72 கி.மீ.
வேலூர் → ஆரணி → கொசப்பாளையம் = 31 கி.மீ.
விழுப்புரம் → செஞ்சி → சேத்பட் → ஆரணி → கொசப்பாளையம் = 93 கி.மீ.
திருவண்ணாமலை → போளுர் → ஆரணி → கொசப்பாளையம் = 60 கி.மீ.
வந்தவாசி → ஆரணி → கொசப்பாளையம் = 44 கி.மீ.
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ விருஷப தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ
அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா
ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து அயோத்தியா நகரத்து இக்ஷூவாகு வம்சத்து நாபி மஹாராஜாவிற்கும், மருதேவி க்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும், பொன் வண்ணரும் 500 வில் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 84 லக்ஷ்ம் பூர்வம் ஆயுள் உடையவரும், விருஷப லாஞ்சனத்தை உடையவரும், கோமுக யக்ஷ்ன், சக்ரேஸ்வரி யக்ஷி யர்களால் சேவிக்கப்பட்டவரும் விருஷப சேனர் முதலிய 84 கணதர பரமேட்டிகளை உடையவரும் 14 நாட்கள் உபவாசத்துடன் பல்லியங்காசனமாக இருந்து கைலாசகிரியில் மாக மாத கிருஷ்ண சதுர்தசியில் ஆயிரம் முனிவர்களுடன் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீவிருஷப தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!
Kosapalayam
is a locality in Arani town. Many Jain families are living from ancient time in
that area. They built a Jinalaya and
dedicate to Shri Adhinatha Thirthankar. Frequent renovation and repair works
are hidden the antiques of the temple. In olden days it was called as
Thirumalai samuthram.
South
facing Jinalaya has all Dravidian temple art features like Garbahirha, Overhead
Viman, Arthamandap, Mahamandap and Mugamandap. It has Gudaharai ie entranceway
and surrounded wall enclosures like 600 years old Jinalayas in the zone. ....
ஆரணி
நகரின் பகுதியான கொசப்பாளையம் ஒரு அழகிய ஜிநாலயத்தையும், அருகில் பல சமணக் குடும்பங்களையும்
கொண்டுள்ளது. பழங்காலத்தில் இப்பகுதி திருமலைசமுத்திரம் என வழங்கப்பட்டுள்ளது. ஸ்ரீஆதிநாதரை
மூலவராக கொண்டுள்ள இவ்வாலயம் அடிக்கடி சீரமைக்கப்பட்டு வந்துள்ளதால் அதன் பழமைக்கான
ஆதாரங்கள் பல மறைக்கப்பட்டுள்ளன.
அதன்
குடவரை மதிற்சுவரின் அமைப்பைக் காணும் போதும், திராவிட பாரம்பரிய முறையில் கர்ப்பக்கிருஹம்,
உள்ளாலை, அர்த்தமண்டபம், மகாமண்டபம், முகமண்டபம் போன்ற கட்டிட அமைப்பைக்காணும் போது
600 ஆண்டுகளைக் கடந்து நிற்கும் என தோன்றுகிறது. ....
In the sancturm white marble made Shri Adhinathar, absolutely incised idol, was established on a heautiful tall plinth. Half-opened eye-lid idol is in padmasana yoga posture on a lotus. The old Moolavar stone plate carving was in the temple. It has eight features of Samavasaran Jinar and might be the age of more than 500 years. The sanctum was crowned by two tiers Viman with shikhar and kalash on the peak. And four thirthankar idols in sitting posture at the bottom tier and four idols in the standing posture at the top tier are placed beautifully.
Next Pavilion consists of daily pooja platform with images of metal made. On either side platforms have metal idols of important thirthankars, Nava devatha, Panchaparameshti, Shruthaskandam, Mahameru, Nandheeswara dheeba model and some Yaksha, Yakshis are exhibited appropriately. A white marble made Shri Parshwanathar idol, granite stone made Shri Brahmadevar and Shri Kooshmadini was also arranged on it. All are secured tightly with doors.
The Mugamandap porch has beautiful painting of Jinar life events, samavasaran circular layout and pilgrimage places of Jains. Three gallerys on the fore-top has Shri Adhinathar flanked by Shri Mahaveerar and shri Parshwanathar lime mortar statues and also two Yakhies of shri Padmavathy devi and Shri Dharmadevi idols. ...
அதன் கருவறையை அலங்கரிப்பவர் ஸ்ரீஆதிநாதர் ஆவார். அவருடைய வெண்பளிங்குச் சிலை முழு உருவமாக செதுக்கப்பட்டு பத்ம மேடையில் நிறுவப்பட்டுள்ளது. அரைக்கண்களைத் திறந்து அமைதியாக பத்மாசன நிலையில் வேதிகையை அலங்கரிக்கின்றார். அங்குள்ள பழைய மூலவர் கருங்கல் பலகையில் சமவசரண ஜினரின் எட்டு அம்ச சிறப்புகளுடன் சிங்காதனத்தில் அமர்ந்த நிலையில் வடிக்கப்பட்டுள்ளதைக் காணும்போது 500 ஆண்டுகளைக் கடந்து வாழும் சிலையாக தெரிகிறது. கருவறையின் மேற்புறம் அழகிய துவிதள விமானத்தின் இரண்டு அடுக்குகளிலும் நாற்திசைகளில் அமர்ந்த நிலையில் கீழ்தளத்திலும், நின்ற நிலையில் மேல்தளத்திலும் தீர்த்தங்கரர்கள் சிலைகள் அமர்த்தப்பட்டுள்ளனர். விமானம் உச்சியில் பத்ம சிகர கலசத்துடன் உள்ளது.
அதனை அடுத்து உள்ளாலையும், பின்னர் உள்ள மண்டபத்தின் மத்தியில் தின பூஜை மேடையும் அமைக்கப்பட்டு அதில் அவ்வப்போது உள்ள வழிபாட்டிற்குரிய உலோகச் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் கீழ்மேல் திசைகளில் உள்ள மேடையில் உலோகச் சிலைகளான முக்கிய தீர்த்தங்கரர் சிலைகள் பிரபாவளியுடனும், நவதேவதா, பஞ்சபரமேஷ்டி, ஸ்ருதஸ்கந்தம், மகாமேரு, நந்தீஸ்வர தீபம் போன்றவையும், முக்கிய யக்ஷ்ன், யக்ஷியர்களின் உருவ சிலைகளும் அலங்கரிக்கின்றன. வெண்பளிங்கினால் ஆன பார்ஸ்வநாதர் சிலையும், கருங்கல்லினால் ஆன ஸ்ரீபிரம்மதேவர், ஸ்ரீதர்மதேவியும் சிலைகளும் அமர்த்தப்பட்டுள்ளன. அப்பகுதி முழுவதும் பாதுகாப்பான கதவுகளுடன் உள்ளன.
முகமண்டபத்தின் சுவர்களில் ஜினரின் வாழ்க்கை நிகழ்வுகளும், சமவ சரண வரைபடமும், சமணர்களின் முக்கிய தீர்த்தங்களின் படங்களும் ஓவியங்களாக தீட்டப்பட்டுள்ளன. அம் மண்டப முகப்பின் மேற்புறம் ஸ்ரீஆதிநாதரின் சுதைச் சிலையும், இருபுறமும் ஸ்ரீமகாவீரர் மற்றும் ஸ்ரீபார்ஸ்வ ஜினரின் சிலைகளும் அழகிய மூன்று மாடங்களில் அமர்த்தப்பட்டுள்ளன. மேலும் ஸ்ரீபத்மாவதி தேவி மற்றும் ஸ்ரீதர்மதேவி யர்களின் சுதைச் சிலைகளும் அவ்விடத்தில் அலங்கரிக்கின்றன. ....
On the north-east side opening a newly arranged white morble twenty four Vimans with Present Thirthankars in squared layout is additional beauty of the temple. It resembles like Sammedh Sigarji holy Tonks in the Parshwanath range at Madhuvan. And a miniature of small size Vinthiagiri Mountain at Shravanabelagola with while marble Bahubali statue also in the new annexture.
All Jain poojas and rituals are conducted and festivals are celebrated regularly. Have a visit when we are travelling on the enroute.
Thanks to Mr. Padmaraj Vasubalan.
Thanks to Mr. Padmaraj Vasubalan.
----
ஆலயத்தின் வடகிழக்கு மூலைக்கு வெளியே உள்ள விரிவாக்கப் பகுதியில் சம்மேத சிகர தீர்த்தங்கரர்கள் பாத விமானங்களை நினைவுறுத்தும் முகமாக 24 தீர்த்தங்கரர்களின் அமர்ந்த நிலை வெண்பளிங்குச் சிலைகளைக் கொண்ட சலவைக்கல் விமானங்கள் தனித்தனி மேடைகளில் நிறுவப்பட்டுள்ளன. அருகில் சரவண பெலகொலாவில் உள்ள விந்திய கிரிமலை போன்றும் பகவான் பாகுபலியின் தனிச்சிலையைப் போன்று, சலவைக்கல்லில் செதுக்கப்பட்ட, நின்ற நிலை சிலையொன்றும் அதில் நிறுவப்பட்டுள்ளது. அவ்விடத்திற்கு மதுவன் எனவும் பெயரிட்டுள்ளனர்.
ஆலயத்தின் தென்புற நுழைவு வாயில் அதன் சுற்றுச்சுவருடன் இணைக்கப்பட்டுள்ளது. திறந்த வெளி திருச்சுற்றில் பலிபீடமும், அழகிய மனத்தூய்மைக் கம்பமும், நவக்கிரக தீர்த்தங்கரர்களின் நின்ற நிலை கற்சிலைகள் கொண்ட மேடையும், 16 கற்தூண்களைக் கொண்ட கலச மண்டபமும் அவ்வாலயத்தின் சிறப்பாகும்.
அனைத்து சமணர் ஆலயங்களிலும் நடைபெறும் தினபூஜை, காலாண்டிற் கொருமுறை வரும் பூஜைகள், ஆண்டிற்கொரு முறை வரும் விசேஷங்கள், சடங்குகள் அனைத்தும் வளமைபோல் இந்த ஜிநாலயத்திலும் நடைபெறுகிறது. ஆரணிக்கு அருகில் செல்லும் அன்பர்கள் அனைவரும் அவ்வாலயத்திற்கும் சென்று தரிசித்தால் நலமுண்டாகும்.
நன்றி திரு. பத்மராஜ் வசுபாலன்.
நன்றி திரு. பத்மராஜ் வசுபாலன்.
No comments:
Post a Comment