Shri ADHINATHAR JAIN TEMPLE - ஸ்ரீ ஆதிநாதர் ஜிநாலயம்
Location lies
on the map in the coordination of (12.58159, 79.27285) put the latitude,
Longitude on the search box
Map for Jain pilgrimage centres: Click THATCHUR
(Tamil nadu / Kerala)
சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் : தச்சூர் கிளிக் செய்யவும்
(தமிழ்நாடு / கேரளா )
ROUTE:-
Tindivanam → Gingee → Chetpet → Polur road → Devikapuram → Thatchur = 75 kms.
chetpet → Polur road → Devikapuram → Thatchur = 23 kms.
Arni → Devikapuram road → thatchur → Thatchur = 12 kms.
Villupuram → Gingee → Chetpet → Polur road →Devikapuram → Thatchur = 89 kms.
Tiruvannamalai → Polur → Chetpet road → Devikapuram → Thatchur = 59 kms.
Vandavasi → Chetpet → Polur road → Devikapuram → Thatchur = 52 kms.
செல்வழி:-
திண்டிவனம் → செஞ்சி → சேத்பட் → போளுர் சாலை → தேவிகாபுரம் → தச்சூர் = 75 கி.மீ.
சேத்பட் → போளுர் சாலை → தேவிகாபுரம் → தச்சூர் = 23 கி.மீ.
ஆரணி → தேவிகாபுரம் சாலை → தச்சூர் → தச்சூர் = 12 கி.மீ.
விழுப்புரம் → செஞ்சி → சேத்பட் → போளுர் சாலை → தேவிகாபுரம் → தச்சூர் = 89 கி.மீ.
திருவண்ணாமலை → போளுர் → சேத்பட் சாலை → தேவிகாபுரம் → தச்சூர் = 59 கி.மீ.
வந்தவாசி →சேத்பட் → போளுர் சாலை → → தேவிகாபுரம் → தச்சூர் = 52 கி.மீ.
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ விருஷப தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ
அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா
ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து அயோத்தியா நகரத்து இக்ஷூவாகு வம்சத்து நாபி மஹாராஜாவிற்கும், மருதேவி க்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும், பொன் வண்ணரும் 500 வில் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 84 லக்ஷ்ம் பூர்வம் ஆயுள் உடையவரும், விருஷப லாஞ்சனத்தை உடையவரும், கோமுக யக்ஷ்ன், சக்ரேஸ்வரி யக்ஷி யர்களால் சேவிக்கப்பட்டவரும் விருஷப சேனர் முதலிய 84 கணதர பரமேட்டிகளை உடையவரும் 14 நாட்கள் உபவாசத்துடன் பல்லியங்காசனமாக இருந்து கைலாசகிரியில் மாக மாத கிருஷ்ண சதுர்தசியில் ஆயிரம் முனிவர்களுடன் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீவிருஷப தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!
************
தச்சூர்
என்னும் கிராமம், ஆரணி‡தேவிகாபுரம் சாலையின் இடையில்,
திருவண்ணாமலை மாவட்டத்தில், அமைந்துள்ள சமண ஸ்தலமாகும். பல நூற்றாண்டுகளாக சமணர்கள்
இத்தலத்தில் குடியிருந்தாலும் கி.பி. 16ம் நூற்றாண்டில் ஸ்ரீஆதிநாதருக்கான ஒரு ஜிநாலயத்தை
நிறுவியுள்ளனர். அதனை தற்போது அங்கு வசித்து வரும் அனைத்து சமணர்களும் ஒன்று சேர்ந்து
புதுப்பிக்கும் பணியில் சில மாதங்களாக தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர். அதனால் மூலவர் சிலை முகமண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளது. சீரமைப்பு பணிகள் முடிவடைந்து பஞ்சகல்யாண வைபோகம்
நடத்திய பிறகு கருவறையில் அச்சிலை நிறுவப்படும்.
கிழக்கு
நோக்கிய அவ்வாலயம் கருப்பக் கிருஹம், அர்த்தமண்டபம், மகாமண்டபம் மற்றும் முக மண்டபத்துடன்
பாரம்பரிய திராவிட ஆலய அமைப்பைக் கொண்டுள்ளது. ஆலய நுழைவு வாயில் திருச்சுற்று மதிற்சுவருடன்
இணைக்கப்பட்டு ஆலயம் பாதுகாப்பான கதவுகளுடன் உள்ளது.
In
between Arani-Devikapuram road in Tiruvannamalai dist, Thatchur Jain pilgrimage
village situated. However many centuries back Jains has been living in the
village, they built a Jinalaya for Shri Adhinathar in 16th Century
AD. Now they proposed and commence the repair and renovation work for the
temple. The cement works are taking place since few months. So the Moolnayak
is placed at the Mugamandap temporarily. After finishing the Panchakalyan it
should be seated on the sanctum plinth.
The
East facing Jinalaya consists of Garbagriha, Arthamandap, Mahamandap &
Mugamandap pavilions. It is like a typical Dravidian temple layout. The open
corridor around the vedi-block is enclosed by compound wall and entranceway
(Kudavarai).
சமவசரண ஜிநரின் எட்டு அம்சங்களுடன் உள்ள ஸ்ரீஆதிநாதரின் மூலவர் உருவம், கற்பலகை புடைப்புச் சிலையாக அழகாக வடிக்கப்பட்டுள்ளது. அவற்றில் முக்குடை, சாமரதாரிகள் மற்றும் சிங்காதனம் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. ஆலயத்தின் தென்மேற்கு மூலையில் ஸ்ரீபிரம்மதேவரின் சிலை மேடையில் நிறுவப்பட்டு சன்னதியாக காட்சி தருகிறது. வடபுற திருச்சுற்றில் நவக்கிரஹ மேடை அமைக்கப்பட்டு மேற்புறம் மூடப்பட்டுள்ளது. திருச்சுற்றின் தென்புலத்தில் இரு மேடைகளில் காலடிச் சுவடுகள் உள்ளன. ஒன்று புனிதர் ஸ்ரீமாணிக்க நைனார் என்னும் உள்ளூர் சமணர் துறவு ஏற்று வட இந்தியா சென்று சல்லேகனா நோன்பு இருந்து உயிர் நீத்த நிகழ்வை நினைவுறுத்தும் முகமாகவும்; மற்றொன்று மேல்சித்தாமூர் ஜினகஞ்சி மடாதிபதியாக இருந்த புனிதர் ஸ்ரீபாலவர்ணீ, பவ்யரின் நினைவாகவும் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இவ்வூரைச் சார்ந்த டாக்டர். எம்.கே. மாணிக்க சாஸ்திரியார் என்பவர் ஸ்ரீபத்மபுராணம் என்னும் வடமொழி நூலை பதிப்பித்தும் வெளியிட்டும் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற உலோகச் சிலைகளும், கற்சிலைகளும் தனியறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
அனைத்து ஆலய பூஜைகள், விழாக்கள் மற்றும் பண்டிகைகள் பஞ்சகல்யாணத்திற்கு பின்னர் தொடர்ந்து நடைபெறும் என கூறப்படுகிறது.
தொடர்புக்கு: ஸ்ரீசுகுமாரன் - +91 9677965158
தொடர்புக்கு: ஸ்ரீசுகுமாரன் - +91 9677965158
The present Moolavar shri Adhinathar, stone plate engraving has eight features itches indicate samavasaran Jinar, esp. Mukkudai, Shamara maids & singathana. At the southwest corner Shri Brahmadevar shrine is there. Navagraha platform was also constructed in the northern corridor. Two sets of foot-prints are laid in the southern corridor. One is to commemorate Shri Manicka nainar, native Jain, Sullak, demise on Sallehana virat, ie continuous fasting upto death. Another set is for shri Shripalavarniji, Madathipathy (Abbot) of Jain mutt, Melsitthamoor, who was the follower of ascetic life for promoting the Jainism in tamilnadu during his tenure. In addition to the two scholars, Dr.T.K.Manicka sasthri, a notable person of native, dedicate the “Shri Padmapuranam” by reprinting and publishing the myth.
All poojas and rituals like, daily pooja, quartly conducted Nandheeswara pooja, annual ceremonies of Mukkudai, Navarathiri and Jain important festivals would be resume after the Panchakalyan Festival celebrations.
Contact No. Shri Sugumaran - +91 9677965158
Contact No. Shri Sugumaran - +91 9677965158
Jai Jinendra,
ReplyDeletePlease Change the Contact Person details as Mr.K.P.Nirmal Kumar Jain - President - 09865929005, Mr.M.Tamizhmaran Jain - Treasurer - 09790967458, 09600994729