Saturday, December 6, 2014

TIRUMALAI (Neminathar Jinalayam) - (திருமலை (ஸ்ரீ நேமிநாதர் ஜிநாலயம்)


Shri NEMINATHAR  JINALAYAM  -  ஸ்ரீ நேமிநாதர்  ஜிநாலயம்Map for Jain pilgrimage centres:   Click TIRUMALAI
(Tamil nadu / Kerala)

சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் :  திருமலை கிளிக் செய்யவும் 
(தமிழ்நாடு / கேரளா )ROUTE:-

Tindivanam → Gingee → Chetpet → Polur road → Mandakulathur road → Tirumalai = 78 kms.

chetpet → Polur road → Mandakulathur road → Tirumalai = 25 kms.

Arni → Polur road → Vadamathimangalam → Tirumalai = 20 kms.

Villupuram → Gingee → Chetpet → Polur road → Mandakulathur road → Tirumalai = 93 kms.

Tiruvannamalai  → Polur  → Arni road → Vadamathimangalam → Tirumalai = 48 kms.

Vandavasi → Chetpet → Polur road → Mandakulathur road → Tirumalai = 55 kms.


செல்வழி:-

திண்டிவனம் → செஞ்சி  → சேத்பட் → போளுர் சாலை → மண்டகுளத்தூர் சாலை → திருமலை = 78 கி.மீ.

சேத்பட் → போளுர் சாலை → மண்டகுளத்தூர் சாலை → திருமலை = 25 கி.மீ.

ஆரணி → போளுர் சாலை   → வடமாதிமங்கலம் → திருமலை = 20 கி.மீ.

விழுப்புரம் → செஞ்சி →  சேத்பட் → போளுர் சாலை → மண்டகுளத்தூர் சாலை → திருமலை = 93 கி.மீ.

திருவண்ணாமலை  → போளுர் → ஆரணி  சாலை → வடமாதிமங்கலம் → திருமலை = 49 கி.மீ.

வந்தவாசி →சேத்பட் → போளுர் சாலை →  மண்டகுளத்தூர் சாலை → திருமலை = 55 கி.மீ.
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ நேமி தீர்த்தங்கராதி சகல முனி  கணேப்யோ அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா     ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து துவாரகாவதி  நகரத்து ஹரி வம்சத்து  சமுத்திர விஜய மகாராஜாவிற்கும் சிவதேவி தேவிக்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மகா புருடரும், இந்திர நீலம் (கருப்பு) வண்ணரும் 10 வில் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் ஓரு ஆயிரம் வருடம் ஆயுள் உடையவரும்  சங்கம் (சங்கு) லாஞ்சனத்தை உடையவரும் சர்வான்ன யக்ஷன் கூஷ்மாண்டி (தர்மதேவி)  யக்ஷியர்களால் சேவிக்கப்பட்டவரும் வரதத்தர்  முதலிய 11  கணதர பரமேட்டிகளை உடைய வரும் ஒரு மாதம் பிரதிமா யோகம் கொண்டவரும் ஊர்ஜெயந்தகிரியில் ஆஷாட  சுக்ல சப்தமியில் 72 கோடி 700    முனிவர்களுடன்  பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீ நேமி தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து! 
தமிழ்நாட்டிலுள்ள வரலாற்று சிறப்புமிக்க ஜிநாலயங்களில் ஒன்றாக திகழும் திருமலை திருவண்ணாமலை மாவட்டத்தில், போளூரிலிருந்து ஆரணிசெல்லும் வழியில் உள்ள வடமாதிமங்கலத்திலிருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ள ஊராகும். அவ்வூர் குகைக்கோவில், பாறைச்சிற்பக்கோவில் மற்றும் கட்டடக் கோவில் மூன்றும் ஒருசேர அமைந்துள்ள சமண புண்ணியத் தலமாகும். மேலும் பாறைச்சிற்பங்கள், குகைப்பாழிகள், ஓவியங்கள், வரலாற்று கல்வெட்டுகள் அனைத்தும் உள்ள மிகவும் பழமையான மலைத்தொடராகும். சோழர், பல்லவர், சேரர், ஹொய்சளர், சம்புவராயர் போன்ற மன்னர்களின் வரலாற்றை கொண்டுள்ள கல்வெட்டுகளும் உள்ள ஒரு சமண நினைவகம்.

கி.பி. 7 ம் நூற்றாண்டிலிருந்தே சமணர்கள் வாழ்ந்துள்ளதற்கான சான்றுகள் உள்ளன. பழங்காலத்தில் சமணம் தழைத்திருந்த போது அப்பகுதி வைகாவூர், ஸ்ரீசைலபுரம் என்றும், மலைப்பகுதிக்கு திருமலை என்றும் வழங்கப்பட்டுள்ளது. பின்னர் அனைத்தும் திருமலை என அழைக்கப்பட்டுள்ளது.  திருமலை என்னும் மலைத்தொடரில் அடிவாரத்தில் இரு ஜிநாலயங்களும், மலைமீது ஸ்ரீநேமிநாதரின் 16 அடி பாறை சிற்பக்கோவிலும், ஸ்ரீபார்ஸ்வநாதர் ஜிநாலயமும், பாதச்சுவடுகளும்  உள்ள சிறப்பான சமண ஸ்தலமாகும்.

மேலும் நேமிநாதரின் சாசன யக்ஷியான ஸ்ரீதர்மதேவி தனது முற்பிறவியில் சமண முனிவருக்கு பணிவிடைகள் செய்து ஆகாரமளித்ததின் காரணமாக கணவனால் வஞ்சிக்கப்பட்டு தனியே பிரிந்து தனது இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தாள் என்றும், இறந்த பின்னர் அடுத்த பிறவியில் தர்மதேவி யக்ஷியாக பிறந்து திருமலையில் தனது குழந்தைகள் மற்றும் பணிப்பெண்ணுடன் வாழ்ந்து வந்தாள் எனவும் வரலாறு பகர்கின்றது. மேலும் அவள் முற்பிறவிக்கணவன் யக்ஷியான செய்தி யறியாமல் அவளை நெருங்கவும்,  அவள் தான் தற்போது யக்ஷியானதைச் சொல்லி தனது  சொரூபத்தை காட்டியதும்,  அதன் ஒளியைக்கண்டு மயங்கி மடிந்ததும்; பின்னர் அவன் சிங்க வாகனமாக மாறியதன் வரலாற்றை சித்தரிக்கும் தத்ரூபமான சிற்ப வடிவத்தினை கொண்டுள்ள மலையாகும். அச்சிற்பத்தொகுப்பு கி.பி. 10 ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக ஆராய்ச்சி யாளர்கள் கருதுகின்றனர்.

 தற்போது அத்தலப்பகுதி இந்திய தொல்லியல் துறையினரால் பாதுகாக்கப்படுகிறது.


Tirumalai is small village is an historical importance place for jains, which is situated 4 kms from Vadamathimangalam (a spot in Arni-Polur road), Polur taluk, Tiruvannamalai dist., Tamilnadu. It has jain heritages of all category ie cavern, rock and structured temples. And remarkable for Jain-pallies (learning center), caves, mural paintings and stone inscriptions. The inscriptions reveal the rule of Cholas, Pallavas, Cheras, Hoysalas and Sampuvarayar kings had always given partronage to the monuments. So many research scholars coming regularly for analyse the memorable events. 

Since 7th Century AD jains has been living this village. Anciently it was called as Vaigavur, Srisailapuram and the hill area is Tirumalai. Tirumalai, range of mountains, consists of two Jinalayas at the bottom and 16 feet high Shri Neminathar stone carving and Shri Parswanathar shrines at the top with holy foot-prints.

The protector goddess of Shri Neminatha thirthankar, called as Shri Kooshmandini (Dharmadevi) freezes with the hill. On the previous birth, she was abandoned by her husband with two daughters for devoutness among Jain munis. After getting demise she became an Yakshi named as Shri Kooshmandini, on her rebirth. But the previous birth husband wants to resume his married life with her. Then she explained that she acquired the state of Yakshi. After heard the story, he was unconscious and demised. Suddenly he got rebirth as lion and become a seat for the Yakshi. A beautiful carving of Shri Dharmadevi on the rock influences the story. It belongs to 10th Century AD art.


All are safeguarded and maintained by Archeology survey of India.  திருமலை அடிவாரக் கோயிலிலிருந்து மேற்புறம் சென்றால் மலைக்கு மேற்புறம் செல்ல படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. அதன் வழியே சென்றால் ஸ்ரீநேமிநாதர் பாறைச்சிற்ப ஆலயமும்,  ஸ்ரீ பார்ஸ்வநாதர் சிறிய ஆலயமும் உள்ளது.

அப்பகுதிக்கு செல்ல அமைக்கப்பட்டுள்ள படிகள் சென்ற நூற்றாண்டில் குடந்தை ஸ்ரீசாத்தண்ணா செட்டியார் துணைவியார் திருமதி ஜெயவதியம்மாள் அவர்கள் பொருளுதவியுடனும், திருமலை தேவஸ்தான பூபால உபாத்தியாயர் அவர்கள் பொருளுதவியுடனும் கட்டப்பட்டதாக கல்வெட்டுகள் பகர்கின்றன.

அங்கு அமைக்கப்பட்டுள்ள மதிற்சுவரின் நுழைவாயிலுக்குள் உட்சென்றவுடன் தெற்கு நோக்கி அமைந்துள்ள ஸ்ரீசிகாமணிநாதர் என்று அழைக்கப்படும் ஸ்ரீநேமிநாதரின் திருமேனி நின்ற நிலையில் சுமாராக 17 அடி உயரத்தில் புடைப்புச் சிற்பமாக கம்பீரமாக செதுக்கப்பட்டுள்ளது நம் கண்களில் படும். கண்டவுடன் சிரவணபெலகோலாவின் ஸ்ரீகோமதீஸ்வரின் நெடிதுயர்ந்த கற்சிலையை நினைவுறுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அச்சிற்பம் சோழர் காலத்தை சேர்ந்ததாகும். அதனால் க்ஷத்திரிய சிகாமணி ஸ்ரீராஜராஜசோழனை நினைவுறுத்தும் வகையில் ஸ்ரீகுந்தவை பிராட்டியாரால் அமைக்கப்பட்டது தெளிவாகும். இந்தியாவிலேயே உயரமான நேமிநாதர் சிற்பமாக இதனை கொள்ளலாம். பிற்காலத்தில் அதனைச் சுற்றிலும் சுவர் அமைத்து சன்னதியாக மாற்றப்பட்டுள்ளது.

அருகிலுள்ள ஸ்ரீஅரஹந்தகிரி மடத்தின் உதவியுடன் தினமும் பூஜையும் மற்றும் ஆண்டுதோறும் தை மாதத்தில் சிறப்பு பூஜைகளும் நடைபெறுகிறது. அச்சமயத்தில் அனைத்து மதத்தினரும் கலந்து கொள்வது மேலும் சிறப்பாகும்.

On the western side of the Tirumalai hill few steps are with hand rails to reach the top, which was made by the donations given by Shrimathi Jayavathi ammal w/o Sathanna chettiar, Kumbakonam and Shri Bhoobala Upathiyayar, endowment board member, was known by two inscriptions incised near the steps and adjacent to the hill-spring. There, a carving statue of Shri Nemenathar in a shrine and Shri Parswanathar mini Jinalaya were present.
  

 We have seen a 17 feet tall gigantic stone carving of Shri Neminathar facing south called as Shri Sigamaninathar in a standing posture while entering the gate of compound wall. The statue cited the graven image of Shri Gometeshwara at Shrevanabelagola, Karnataka. It was made to commemorate the Emperor Rajaraja Chola awarded as Kshathriya Sigamani by his sister Shrimathi Kunthavai Biratiyar. This is the tallest stone carving statue in India. 

Daily Pooja is run by the assistance given by Shri Ariganthagiri Mutt. Also a special Pooja and ritual has been celebrated in the tamil month of Thai. The nearby people of Tirumalai of all sects are attending the function every year regularly.
அங்கிருந்து கிழக்கு நோக்கிய படிகளில் செல்லும் போது இடதுபுறம் ஒரு நீர்சுனையைக் காணலாம். அதன் உச்சிக்கு செல்லும் வழியில் ஸ்ரீபார்ஸ்வநாதர் ஆலயம் ஒன்றைக் காணலாம். அவ்வாலயம் சிறிய கருவறை மற்றும் சிகர கலசத்துடனும், மேல் விமானத்தில் நாற்திசையிலும் தீர்த்தங்கரர் சிலைகளுடனும் காணப்படுகிறது. கருவறையில் ஸ்ரீபார்ஸ்வநாதரின் நின்ற கோலத்தினாலான கற்சிலை தலையில் ஐந்து தலை நாகத்துடன் நிறுவப்பட்டுள்ளது.


After raising few steps in the east direction we seen the Shri Parswanathar small temple, which consists of Sanctum, shikhara and Kalash. And Thirthankar idols are seated in four directions on the Viman. A Stone plate curving of Shri Parshwanatha, in standing posture and a five headed snake is upon the head, was established incide the Sanctum plinth.அதனைக்கடந்து சென்றால் உச்சியில் மூன்று ஜோடி திருவடிகள் வெவ்வேறு திசைகளில் செதுக்கப்பட்டுள்ளன. மேலும் ஒரு கல்வெட்டும் நடுவில் உள்ளது. மேற்கில் உள்ளது ஸ்ரீவிருஷபசேனருக்கும், கிழக்கில் உள்ளது ஸ்ரீசமந்தபத்ர கணதர பகவருக்கும், வடக்கில் ஸ்ரீவரதத்தாச்சாரியார் என்பவருக்கும் அமைக்கப்பட்டுள்ளதாக கல்வெட்டு தெரிவிக்கின்றது.

மேலும் உச்சியில் உள்ள தேவஅலரி  மரங்கள் அழகுக்கு அழகு சேர்ப்பதாக அமைந்துள்ளது. அங்கிருந்து தரைப்பகுதியை காண்பதில் அருகில் உள்ள ஸ்ரீமடமும், வைகை ஏரியும் நன்கு தெரியும்.

அப்பகுதி வழியே செல்பவர்கள் அவசியம் சென்று காணவேண்டிய ஸ்தலமாகும். அதனால் அந்த நினைவு சின்னங்களும் பாதுகாக்கப் படுகிறது.

There are three sets of foot-prints on the peak of the Hill.  On the west is for Shri Virushabasenar, on east is for Shri Samanthapadra Ganadharabahavar and on north is for Shri Varathatthachariar, engraved to commemorate the saints.

A beautiful scenary is around the hill. The Shri Mutt and Vaigai lake are looking very clearly on the northern plain. A rare variety of Devaalari tree is present on the peak have a grand look.


It is not only worth visiting, but our regular visits will keep the rich heritage alive.

No comments:

Post a Comment