Thursday, December 18, 2014

SEVOOR - சேவூர்


Shri ADHINATHAR  JAIN TEMPLE  --  ஸ்ரீ ஆதிநாதர் ஜிநாலயம்


Location:


lies on the map in the coordination of (12.68539, 79.2673) put the latitude, Longitude on the search box

Map for Jain pilgrimage centres:   Click SEVOOR
(Tamil nadu / Kerala)

சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் :  சேவூர் கிளிக் செய்யவும் 
(தமிழ்நாடு / கேரளா )


ROUTE :

Tindivanam → Vandavasi → Arni → sevoor = 81 kms.

Kanchipuram → Arcot → Arani → sevoor = 75 kms.

Vellore  → Arni → sevoor = 34 kms.

Villupuram → Gingee → Chetpet → Arni → sevoor = 96 kms.

Tiruvannamalai  → Polur → Arni → sevoor = 62 kms.

Vandavasi → Arni → sevoor = 47 kms.செல்வழி:-

திண்டிவனம் → வந்தவாசி  → ஆரணி → சேவூர் = 81 கி.மீ.

காஞ்சிபுரம் → ஆற்காடு → ஆரணி → சேவூர் = 75 கி.மீ.

வேலூர் → ஆரணி → சேவூர் = 34 கி.மீ.

விழுப்புரம் → செஞ்சி →  சேத்பட் → ஆரணி → சேவூர் = 96 கி.மீ.

திருவண்ணாமலை  → போளுர் → → ஆரணி → சேவூர் = 62 கி.மீ.

வந்தவாசி → ஆரணி → சேவூர் = 47 கி.மீ.

 ஓம் ஹ்ரீம் ஸ்ரீ விருஷப தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ 
 அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா 


ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து அயோத்தியா நகரத்து இக்ஷூவாகு வம்சத்து நாபி மஹாராஜாவிற்கும், மருதேவி க்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும், பொன் வண்ணரும் 500 வில் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 84 லக்ஷ்ம் பூர்வம் ஆயுள் உடையவரும், விருஷப லாஞ்சனத்தை உடையவரும், கோமுக யக்ஷ்ன், சக்ரேஸ்வரி யக்ஷி யர்களால் சேவிக்கப்பட்டவரும் விருஷப சேனர் முதலிய 84 கணதர பரமேட்டிகளை உடையவரும் 14 நாட்கள் உபவாசத்துடன் பல்லியங்காசனமாக இருந்து கைலாசகிரியில் மாக மாத கிருஷ்ண சதுர்தசியில் ஆயிரம் முனிவர்களுடன் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீவிருஷப தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!
Sevoor is an extension area of new Arani town. A beautiful Jinalaya was built in early of 20th Century AD. But an old Jinalaya was there before Arni Jahir extant was gifted (Jahir was gifted by Shahjee, father of Shivaji, Maratha king, in the Year 1640 AD). The Govt record of Arni Jahir mentiond as an Old Jain temple was there in that extant. Also a tiny Moolavar statue with 8 inches high of Shri Adhinathar belongs to that period is in the present temple.

The Jinalaya has Garbhagriha, Arthamandap, Mahamandap, Mugamandap chambers like old Dravidian temple design. East facing entrance was attached with surrounded wall of the temple. An altar and newly installed Manasthamp are in the open corridor. A newly constructed shrine room and a Navagraha shrine also at the end of the corridor.

The Garbhagriha contains Shri Adinathar white marble statue of more than 3 feet was placed on a beautiful plinth. The chamber was bifurgated and secured by glass doors. Next to the Idainazhi portion, a platform has daily pooja statues. The pavilion of that Arthamandap has two platforms on either side of aisle. On southern side Thirthankars metal statues and two moolavars of predecessor are placed. On the northern part Yaksha, Yakshies of alloy metal, Shri Brahmadevar stone idol upon an Elephant and Shri Kooshmandini stone statue are seated properly. The whole pavilion was secured well by doors and two windows.

ஆரணி நகரத்தின் விரிவாக்கப்பகுதியாகியுள்ளது சேவூர் என்னும் கிராமம். அங்கு 20ம் நூற்றாண்டைச் சார்ந்த அழகான ஜிநாலயம் ஒன்று நன்கு பராமரிப்பில் உள்ளது. ஆனால் ஆரணி ஜாகீர் பகுதியில் ஒரு பழைய ஜிநாயலம் இருந்துள்ளது. (அந்த ஜாகீர் பகுதி மன்னர் சிவாஜியின் தந்தையான வீரர் ஷாஜி அவர்களால் சன்மானமாக அக்காலத்தில் வழங்கப்பட்ட பகுதியாகும்) அதன் ஆவணங்களில் ஓரு பழைய சமணர் ஆலயம் இருந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தற்போதைய ஜிநாயலத்தில் உள்ள 8 அங்குல உயரமுள்ள ஸ்ரீஆதிநாதர் மூலவர் கற்சிலையும் அதன்தொன்மையை தெரிவிக்கும்.

அவ்வாலயம் திராவிட பாரம்பரிய கலைப்பாணியை ஒத்தே கருப்பக்கிரஹம், அர்த்தமண்டபம், மகாமண்டபம், முகமண்டபம் போன்ற வற்றுடன் அமைக்கப்பட்டுள்ளது. கிழக்கு நோக்கிய நுழைவு வாயிலுடன் அதன் சுற்று சுவர் இணைக்கப்பட்டுள்ளது. பலிபீடம் மற்றும் மனத்தூய்மைக் கம்பம் ஆகிய அம்சங்களும் ஆலய திருச்சுற்றில் உள்ளன. மேலும் புதிதாக கட்டப்பட்டு வரும் சன்னதியும், நவக்கிரஹ மேடையும் திருச்சுற்றின் முடிவில் அமைக்கப்பட்டுள்ளது. 

கர்ப்பக்கிரஹ வேதிகையில் ஸ்ரீஆதிநாதரின் வெண்பளிங்குச் சிலை 3 அடியில் நிறுவப்பட்டுள்ளது. கருவறை இடைநாழியாக பிரிக்கப்பட்டு கண்ணாடி கதவுகளால் தடுக்கப்பட்டுள்ளது. அடுத்துள்ள அர்த்தமண்டப பகுதியில் நடுமேடையில் ஆலய தின பூஜைக்கான பிம்பங்களும், இருபுறமும் உள்ள மேடையில் தீர்த்தங்கரர்கள் உலோக சிலைகளும், பழைய மூலவர்களின் கற்சிலைகளும் ஒரு மேடையிலும், மற்றொரு மேடையில் யக்ஷ, யக்ஷிகளின் உலோகச் சிலைகளும், ஸ்ரீபிரம்மதேவர் யானையில் அமர்ந்த கற்சிலையும், ஸ்ரீகூஷ்மாண்டினி கற்சிலையும் அலங்கரிக்கின்றன.  அனைத்தும் இரும்புக் கதவுகளாலும், ஜன்னல்களாலும் பாதுகாக்கப்பட்டுள்ளன.

Next in Mahamandap consists of two Dwalabalagar standing postured cement statues are placed on two platforms individually. The pavilion also safeguarded by iron grill and gates. The Mugamandap porch is in the fore of the vedi-block. On the top the porch three galleries of semicircular top contains Shri Adhinathar, Shri Mahaveerar and Shri parshwanathar.

The Navagraha stone statues are established on a Dias and are facing to same direction is unique feature of the temple.


All daily, Quarterly and annual poojas, rituals and festivals of Jain relious are conducted and celebrated at the appropriate times. 

Contact No. Shri Baskaran  -  +91 9788265395


அடுத்துள்ள மகாமண்டபத்தில் வழியின் இருமருங்கிலும் இரு துவாரபாலகர்கள் சுதை சிலைகள் மேடையில் நிறுவப்பட்டுள்ளன. அம் மண்டபம் இரும்புக்கதவுகளாலும், தட்டிகளாலும் பாதுகாக்கப்பட்டுள்ளது.  அடுத்துள்ள முகமண்டப பகுதியின் மேற்புறம் அரைவட்ட மாடங்களில் ஸ்ரீஆதிநாதர், ஸ்ரீமகாவீரர் மற்றும் ஸ்ரீபார்ஸ்வநாதர் சுதைசிலைகள் அழகாக அமர்த்தப்பட்டுள்ளன.

மேலும் அவ்வாலயத்தில் உள்ள நவக்கிரஹ சிலைகள் அனைத்தும் ஒரே திசையை நோக்கி நிறுவப்பட்டுள்ளன. இவ்வமைப்பு இவ்வாலயத்தின் சிறப்பாகும்.

சமணர் ஆலயங்களில் நடைபெறும் அனைத்து தினம், மூன்றுமாதம் மற்றும் ஆண்டுக்கொருமுறை நடைபெறும் அனைத்து பூஜைகளும், சடங்குகளும், பண்டிகைகளும் அந்தந்த தருணங்களில் செவ்வனே நடைபெற்று வருகிறது. 

தொடர்புக்கு: ஸ்ரீபாஸ்கரன் -  +91 9788265395 No comments:

Post a Comment