Thursday, December 11, 2014

KUNNATHUR - குன்னத்தூர்

Shri ADHINATHAR  JAIN TEMPLE -  ஸ்ரீ ஆதிநாதர் ஜிநாலயம் 








Location:   

lies on the Google map in the coordination of (12.53663, 79.1352) ie put the latitude, Longitude on the search box

Map for Jain pilgrimage centres:   Click KUNNATHUR
(Tamil nadu / Kerala)

சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் :  குன்னத்தூர் கிளிக் செய்யவும் 
(தமிழ்நாடு / கேரளா )



ROUTE:-

Tindivanam → Gingee → Chetpet → Polur →  Kunnathur = 80 kms.

chetpet → Polur →  Kunnathur = 28 kms.

Arni →  Polur road →  Kunnathur = 25 kms.

Villupuram → Gingee → Chetpet →  Polur →  Kunnathur = 95 kms.

Tiruvannamalai  → Polur  → Arni road → Kunnathur = 37 kms.

Vandavasi → Chetpet → Polur →  Kunnathur = 57 kms.



செல்வழி:-

திண்டிவனம் → செஞ்சி  → சேத்பட் → போளூர் → குன்னத்தூர் = 80 கி.மீ.

சேத்பட் → போளூர் → குன்னத்தூர் = 28 கி.மீ.

ஆரணி → போளூர் சாலை → குன்னத்தூர் = 25 கி.மீ.

விழுப்புரம் → செஞ்சி →  சேத்பட் → போளூர் → குன்னத்தூர் = 95 கி.மீ.

திருவண்ணாமலை  → போளுர் → ஆரணி  சாலை  → குன்னத்தூர் = 37 கி.மீ.

வந்தவாசி →  சேத்பட் →  போளூர் → குன்னத்தூர் =57 கி.மீ.






 ஓம் ஹ்ரீம் ஸ்ரீ விருஷப தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ 
 அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா 


ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து அயோத்தியா நகரத்து இக்ஷூவாகு வம்சத்து நாபி மஹாராஜாவிற்கும், மருதேவி க்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும், பொன் வண்ணரும் 500 வில் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 84 லக்ஷ்ம் பூர்வம் ஆயுள் உடையவரும், விருஷப லாஞ்சனத்தை உடையவரும், கோமுக யக்ஷ்ன், சக்ரேஸ்வரி யக்ஷி யர்களால் சேவிக்கப்பட்டவரும் விருஷப சேனர் முதலிய 84 கணதர பரமேட்டிகளை உடையவரும் 14 நாட்கள் உபவாசத்துடன் பல்லியங்காசனமாக இருந்து கைலாசகிரியில் மாக மாத கிருஷ்ண சதுர்தசியில் ஆயிரம் முனிவர்களுடன் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீவிருஷப தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!




Kunnathur, a small village about 2 kms from Polur in the Arani road in Tiruvannamalai dist. In ancient days it was called as Rajakampera nallur in the Sampuvarayar jurisdiction and Kuntrathur then Kunnathur now.

Under the ruling of Devarayar II, during 1441 AD, a beautiful Jinalaya was built by the native Jains Dedicate to Shri Adhinatha Thirthankar in the village. Then it was patroned by the Arcor Navaab, the ruler of the old time.

But the old temple is completely renovated now and getting a glory. Residual work is still remaining. The small Jinalaya consists of Garbagriha, Anthralam, Prayar mandap (a new annexture). The temple is surrounded by compound wall.

Shri Adhinathar, black stone plate carving has eight feature of samavasarn Jinar, having no Lanchan at the bottom, denotes as old sculpture, and was established on the vedi-dias. The garbagriha crowned by small viman comprises of Thrithankar statues in sitting posture, on each directions. Lions mortar idol are placed at the corner of the statues. A small altar is also in the front porch.


All Jain poojas and rituals are conducted regularly. The nearby Hindu people also participate the temple festivals is unique. 

Contact  No. Shri Devadoss  -  +91 9566768181



குன்னத்தூர்திருவண்ணாமலை மாவட்டத்தின் போளுர் நகரத்திற்கு அருகில் ஆரணி சாலையில் 2 கி.மீ. தொலைவில் உள்ள சிறிய கிராமம் ஆகும். முற்காலத்தில் சம்புவராயர் ஆட்சிக்காலத்தில் ராஜகம்பீர நல்லூர் எனவும், பின்னர் குன்றத்தூர், குன்னத்தூர் எனவும் மருவி வந்துள்ளது.

இரண்டாம் தேவராய மன்னர் காலத்தில், கி.பி.1441ல், அங்கு வசித்து வந்த சமணர்களால் சிறிய ஜிநாலயம் கட்டப்பட்டிருந்தது. அவ்வாலயத்திற்கு ஆர்காடு நவாப் மன்னரிடமிருந்து மான்யங்கள் கிடைத்துள்ளதற்கான கல்வெட்டு உள்ளது. அதன் பின்னர் முழுவதுமாக பிரித்து கட்டியுள்ளனர். தற்போது முழுவதும் முடிக்கப்படாத நிலையிலும் அழகாக காட்சித்தருகிறது. பிரதிஷ்டை செய்ய வேண்டிய பிம்பங்களும் அறையில் உள்ளன.

ஸ்ரீஆதிநாதர் ஜிநாலய மூலவராக வேதிகையில் நிறுவப்பட்டுள்ளார் . கற்பலகையில்சமவசரண ஜினரின் எட்டு அம்சங்களுடன் செதுக்கப்பட்டுள்ள அச்சிலையில் லாஞ்சனம் இன்றி உள்ளதால் மிகவும் பழமை வாய்ந்ததாக தெரிகிறது. அதன் மேற்புறம்  ஏக தள விமானம் நாற்திசைகளிலும் தீர்த்தங்கரர் சிலைகளுடனும்மூலையில் சிம்ம பொம்மைகளுடனும் அமைக்கப்பட்டுள்ளது. சிறிய சிகரத்தில் அழகிய கலசமும் வைக்கப்பட்டு காட்சி தருகிறது.

அடுத்து அந்தராளமும், தற்காலத்தில் கட்டப்பட்ட  வழிபாட்டு மண்டபமும் அதில் சிறிய பலிபீடமும் உள்ளன. அனைத்தும் வாயில் கதவுகள், சுற்றுச் சுவருடன் பாதுகாப்பாக அமைக்கப்பட்டுள்ளது.


அனைத்து ஜிநாலயங்களிலும் நடைபெறும் பூஜைகளும், பண்டிகைகளும் செவ்வனே நடைபெறுகிறது. அனைத்து விசேஷ காலங்களிலும் அருகில் உள்ள இந்துக்களும் கலந்து கொள்வது மேலும் சிறப்பாகும். 

தொடர்புக்கு: ஸ்ரீதேவதாஸ் -  +91 9566768181


No comments:

Post a Comment