Monday, December 15, 2014

MULLIPATTU - முள்ளிப்பட்டு


Shri MAHAVEERAR  JAIN TEMPLE  -  ஸ்ரீ மகாவீரர் ஜிநாலயம்






Location:


lies on the map in the coordination of (12.6705, 79.26028) put the latitude, Longitude on the search box


Map for Jain pilgrimage centres:   Click MULLIPATTU
(Tamil nadu / Kerala)

சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் :  முள்ளிப்பட்டு கிளிக் செய்யவும் 
(தமிழ்நாடு / கேரளா )

ROUTE:-

Tindivanam → Vandavasi → Arni → Mullipattu = 85 kms.

Kanchipuram → Arcot → Arani → Mullipattu = 77 kms.

Vellore  → Arni → Mullipattu = 38 kms.

Villupuram → Gingee → Chetpet → Arni → Mullipattu = 96 kms.

Tiruvannamalai  → Polur → Arni → Mullipattu = 61 kms.

Vandavasi → Arni → Mullipattu = 47 kms.


செல்வழி:-

திண்டிவனம் → வந்தவாசி  → ஆரணி → முள்ளிப்பட்டு = 85 கி.மீ.

காஞ்சிபுரம் → ஆற்காடு → ஆரணி → முள்ளிப்பட்டு = 77 கி.மீ.

வேலூர் → ஆரணி → முள்ளிப்பட்டு = 38 கி.மீ.

விழுப்புரம் → செஞ்சி →  சேத்பட் → ஆரணி → முள்ளிப்பட்டு = 96 கி.மீ.

திருவண்ணாமலை  → போளுர் →  ஆரணி → முள்ளிப்பட்டு = 61 கி.மீ.

வந்தவாசி → ஆரணி → முள்ளிப்பட்டு = 47 கி.மீ.


 ஓம் ஹ்ரீம் ஸ்ரீ மஹாவீர தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ
அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா



ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து குண்டலபுர நகரத்து நாத வம்சத்து சித்தார்த்த மஹாராஜாவிற்கும், பிர்யகாருணி மஹாதேவிக்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும்,  பொன் வண்ணரும் 7 முழம் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 72 வருடம் ஆயுள் உடையவரும், சிம்ம லாஞ்சனத்தை உடையவரும், மாதங்க யக்ஷ்ன், சித்தாயினி யக்ஷியர்களால் சேவிக்கப்பட்டவரும் கௌதமர் முதலிய 11 கணதர பரமேட்டிகளை உடையவரும் 2 நட்கள் ப்ரதிமா யோகம் கொண்டவரும் பாபாபுரி சரோவர மத்தியில் கார்த்திகை கிருஷ்ண சதுர்தசி திதியில் 26 முனிவர்களுடன் பரிநிர்வாணம் அடைந்த வருமான ஸ்ரீவர்த்தமான தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!




Mullipattu is a nearby village of Arani town. Now it is an extension area of the town. Few families of Jains are living many centuries. They built a Jinalaya many years back and installed Shri Mahaveerar in the Sanctum. The craving of the Jinar idol might belong to 15-16th Century AD. Now the renovation and repair works are taken place by the native Jains. So the moolavar was shifted from sanctum to the Mahamandap pavilion. The regular poojas and rituals were interrupted and postponed to future dates after the Panchakalyan celebrations.

The Jinalaya comprises of Garbhagriha, Ardhamandap, Mahamandap and Mugamandap like Dravidian temple art.  An open corridor, altar and compound wall are around it.

ஆரணி நகரின் வடக்கு புறமாக வளர்ச்சியடைந்து வரும் பகுதியாக மாறி வரும் முள்ளிப்பட்டு என்னும் பகுதியில் ஒரு பழைய ஜிநாலயம் கட்டப்பட்டுள்ளது. மிகவும் குறைந்த அளவில் தற்போது சமணர்கள் வசித்து வந்தாலும் மிகவும் பழைமையான ஸ்ரீமகாவீரர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.  அதன் வடிவம் 400600 ஆண்டுகளின் கலைப்பாணியை ஒத்துள்ளது. ஆலயத்தில் முழுசீரமைப்பு பணி நடைபெற்று வருவதால் மூலவர் பிம்பம் மகாமண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளது. தினபூஜை மற்ற சடங்குகள் அனைத்தும் பஞ்சகல்யாண பிரதிஷ்டைக்கு பின் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

பாரம்பரிய திராவிட ஆலய கலைப்பாணியை கொண்ட இவ்வாலயத்தில் கருப்பகிருஹம், அர்த்தமண்டபம், மகாமண்டபம் மற்றும் முகமண்டபம் போன்ற அனைத்து அம்சங்களும் கொண்டுள்ளது. திறந்த திருச்சுற்று, பலிபீடம் மற்றும் சுற்றுசுவர்களும் உள்ளது.





The main deity Shri Mahaveerar made of stone carving with eight Jinar features and has a semi circular top. There is no Lanchanam at the bottom so it belongs to 400-600 years back age. It is crowned by a two tier viman having two Thirthankar statues on each direction attached on two stages.  A Brhamadevar stone statue over an elephant with back arch (Thiruvatshi) also shifted from its base. After finishing the construction and flooring work all pantheons are installed at their appropriate places.

On the top of the fore porch Jinar lime mortar idols of Shri Rishabhar, Shri Mahaveerar and Shri Parswanathar in sitting posture were placed incide a small gallery.


The pillars of pavilions had Thirthankar, Dwalabalagar bas-relief figures in the two sections. The Jinalaya is waiting for Panchakalyan celebrations in near future.


 Contact No. Shri Rajaperumal  -  +91 9840181012

மூலவர் ஸ்ரீமகாவீரர் கற்பலகையில் புடைப்புச் சிற்பமாக, சமவசரண ஜிநரின் எட்டு அம்சங்களுடன் மேல்பகுதி அரைவட்டமாக செதுக்கப்பட்டுள்ளது.  லாஞ்சனம் ஏதுமில்லாததினால் 600 ஆண்டுகளை கடந்த கலைப்பாணியை கொண்டுள்ளது. அதன் மேற்பகுதியில் இருதள விமானமும் தளத்திற்கு நான்கு ஜினர்களின் உருவங்களுடன் இருதளமும் சிகர, கலசங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீபிரம்மதேவர் திருவுருவம் யானைமீது அமர்ந்த கோலத்தில் பின் பிரபையுடன் அழகாக வடிக்கப்பட்டுள்ளதும் தற்போது மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளது. பின்னர் அந்தந்த மேடைகளில் திருவுருங்கள் அனைத்தும் பஞ்சகல்யாணத்திற்கு பின் பிரதிஷ்டை செய்யப்படும்.

முகமண்டபத்தின் மேல்பகுதியில் அரைவட்ட மாடங்கள் அமைக்கப்பட்டு அவற்றில் ஸ்ரீரிஷபர், ஸ்ரீமகாவீரர் மற்றும் ஸ்ரீபார்ஸ்வநாதர் சுண்ணாம்புச் சுதை சிலைகள் வைக்கப்பட்டுள்ளது.

பஞ்சகல்யாண வைபோகத்திற்காக காத்திருக்கும் இவ்வாலயத்தின் மண்டப தூண்களில் தீர்த்தங்கரர்கள், துவாரபாலகர்கள் புடைப்பு சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. 

தொடர்புக்கு: ஸ்ரீராஜபெருமாள் - +91 9840181012




No comments:

Post a Comment