Shri SANTHINATHAR JAIN TEMPLE -- ஸ்ரீசாந்திநாதர் ஜிநாலயம்
Location:
lies on the map in the coordination of (12.43063, 79.0905) put the latitude, Longitude on the search box
Map for Jain pilgrimage centres: Click PILLUR
lies on the map in the coordination of (12.43063, 79.0905) put the latitude, Longitude on the search box
Map for Jain pilgrimage centres: Click PILLUR
(Tamil nadu / Kerala)
சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் : பில்லூர் கிளிக் செய்யவும்
(தமிழ்நாடு / கேரளா )
ROUTE:-
Tindivanam → Gingee → Chetpet → Polur → Pillur = 85 kms.
chetpet → Polur → Tiruvannamalai road → Pillur = 32 kms.
Arni → Polur → Tiruvannamalai road → Pillur = 33 kms.
Villupuram → Gingee → Chetpet → Polur → Tiruvannamalai road → Pillur = 89 kms.
Tiruvannamalai → Polur road → Pillur = 34 kms.
Vandavasi → Chetpet → Polur → Tiruvannamalai road → Pillur = 62 kms.
செல்வழி:-
திண்டிவனம் → செஞ்சி → சேத்பட் → போளூர் → தி. மலை சாலை → பில்லூர் = 85 கி.மீ.
சேத்பட் → போளூர் → தி. மலை சாலை → பில்லூர் = 32 கி.மீ.
ஆரணி → போளூர் சாலை → தி. மலை சாலை → பில்லூர் = 33 கி.மீ.
விழுப்புரம் → செஞ்சி → சேத்பட் → போளூர் → தி. மலை சாலை → பில்லூர் = 89 கி.மீ.
திருவண்ணாமலை → போளுர் சாலை → பில்லூர் = 34 கி.மீ.
வந்தவாசி → சேத்பட் → போளூர் → தி. மலை சாலை → பில்லூர் = 62 கி.மீ.
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ சாந்திநாத
தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ
அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா
ஓம் ஹ்ரீம்
அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து ஹஸ்திநாபுர நகரத்து குரு வம்சத்து விஸ்வசேன
மஹாராஜாவிற்கும், ஜரா மஹாதேவிக்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா
புருடரும், பொன் வண்ணரும் 40 வில் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் ஒரு
லக்ஷம் வருடம் ஆயுள் உடையவரும், ஹரினம் (மான்) லாஞ்சனத்தை உடையவரும், கருட
யக்ஷ்ன், மஹாமாலை யக்ஷியர்களால் சேவிக்கப்பட்டவரும் சக்ராயுதராதி முதலிய 36 கணதர
பரமேட்டிகளை உடையவரும் ஒரு மாதம் ப்ரதிமா யோகம் கொண்டவரும் சம்மேத கிரியில் ஜேஷ்ட
க்ருஷ்ண சப்தமி திதியில் 9 கோடா கோடி 9 லட்சத்து 9 ஆயிரத்து 999 முனிவர்களுடன் சுப்ரபாச
கூடத்தில் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீசாந்தி தீர்த்தங்கர பரம ஜிநேந்திர
சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!
திருவண்ணாமலை
மாவட்டத்தில் போளுர் சாலையில் 11 கி.மீ.
பயணம் செய்து, மேற்கு
திருப்பத்தில் உள்ள சாலையில் 2 கி.மீ.
சென்றால் பில்லூர் என்னும் சமணக் கிராமம் வரும்.
சமணர்கள்
மதிப்பதற்கும், வணங்குவதற்கும்
உரிய ஸ்தலமாக கருதப்படும் இடம் புனிதமானதும், புண்ணியமானதுமான
ஜிநாலயமாகும். அவ்வாலயமும், ஜிநரின்
பிம்பங்களும், அங்கு
வழிநடத்தப்படும் அனைத்து அம்சங்களும் சமணர்களால் உருவாக்கியவை யாகும். அவ்வழியில்
பில்லூரில் ஒரு ஜிநாலயம் தற்போது தோன்றி வருகிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன்னர்
அதிக எண்ணிக்கையில் சமணர்கள் வாழ்ந்து வந்திருந்தாலும் , பலரும்
தொழில் நிமித்தம் வெளியேறி விட்டனர். தற்போது பழைய பரம்பரையில் எஞ்சியவர்கள்
வசித்து வருகின்றனர்
One Jain Village in
Tiruvannamalai district near kappalur
is Pillur, 11 kms travelling in the Tiruvannamalai
- polur road and 2 kms diversion towards west.
Holy and sacred Jinalaya (Jain temple) is most revered
and worshipped kshetra for Jains. All
the Jina temples, Idols and Conduct are made and developed by the Jains. As per
information passed on by the village ancestors, a historic Jain temple is alive
more than a thousand year. Though a large number of Jains had lived here before
but they had moved to many other parts of the state. Now, few families are the
remaining of direct descendants of the original settlers.
முற்காலத்தில் வாழ்ந்ததற்கு சான்றாக ஸ்ரீசாந்திநாதர் மற்றும் ஸ்ரீபிரம்மதேவரின் கற்சிலைகள் பூமிக்கடியில் இருப்பதைக் கண்டு வெளிக்கொண்டு வந்துள்ளனர். அவர்களின் பெருமுயற்சியால் அச்சிலைகளுக்காக ஒரு கருவறையும், அதன் மேல் எளிய விமானமும், அதன் முன்னர் அர்த்தமண்டபமும், மதகுருமார்களான மேல்சித்தாமூர் மடாதிபதியவர்கள் மற்றும் திருமலை மடாதிபதியவர்கள் வழிகாட்டுதலில் கட்டியுள்ளனர். அதனைச் சுற்றி பாதுகாப்பும் செய்யப்பட்டுள்ளது.
தரைத்தளவரிசையும், பூச்சு வேலைகளும் மீதம் உள்ளன. மேலும் மனத்தூய்மைக்கம்பமும், பலிபீடமும் நிறுவ உள்ளனர். (ஆயினும் வேலைதாமதத்தாலும், தற்போது ஆட்கூலி உயர்வாலும் வேலை தடைப்பட்டுள்ளது.)
ஜிநாலயங்கள் அனைத்தும் நமது மதிப்பிற்கும், தெய்வ நம்பிக்கைக்கும், மேலும் ஆன்மீகத்தினை வெளிப்படுத்தும் ஸ்தலமாகவும், கலாச்சாரத்தின் நினைவுச்சின்னங்களாகவும் உள்ளன. ஆகவே உங்கள் காணிக்கைகளை தேவைகளுக்கு அவ்வப்போது கொடுத்து உதவி பாராட்டை பெறுவது ஆன்மீக நலமாகும்.
As the evidence of above captioned two idols of Shree Shanthinath and shree Brahmadeva found under the earth of the village. The natives unearth the idols and proposed to build a new Jinalaya. After taking substantial efforts they built a Sanctum crowned by a Viman, Arthamandap with the guidance of “Shri Lakshmisena Swamiji, Melsithamur” and “Shri Dhavalakeerthi swamiji, Kshethra Arihanthagiri, Tirumalai”. A fence also surrounded.
Now plastering work and pavement of floor is remaining. A Manasthamp and Altar is going to be installed in near future. The initial estimate is crossing the limits, because of delayed work, escalation of price and labour charges.
Jain temples are core of our spirituality and symbol of our culture, values and beliefs. Please contribute to save one of Jain Temple. Your generous donations from time to time are always appreciated.
No comments:
Post a Comment