Friday, January 5, 2018

JAIN SIDDHA KSHETRA KUNDALGIRI (KUNDALPUR - ஜைன் சித்தக்ஷேத்ரா குண்டல்கிரி (குண்டல்பூர்)


Digamber Jain Siddha Kshetra Kundalpur
திகம்பர் ஜைன் சித்தக்ஷேத்ரா குண்டல்பூர்.




SHRI DIGAMBER JAIN SIDDHA KSHETRA KUNDALGIRI (KUNDALPUR), M.P.

Name :
Shri Digamber Jain Siddha Kshetra Kundalgiri (Kundalpur)
Is an Siddha Kshetra (Place of Salvation).


Address :
Shri Digamber Jain Siddha Kshetra Kundalgiri
Place & Post – Kundalpur, Dist. – Damoh (M.P.)
Phone 07605-272230
Phone (Damoh Office) 07812-225994


It lies in the coordination of (23.99395, 79.69808) on the Google Map.


Nearby City :

Damoh 35 km
Sagar 113 km
Jabalpur 143 km












About Kundalpur (Kundalgiri) :

This Kshetra Kundalpur is a place full of natural attractive beauty famous for miraculous colossus of Bade Baba Bhagwan Adinath in sitting (Padmasana) posture 15 feet in height and is a place of salvation of Antim Kevali Shridhar Kevali.

Here are 63 temples of various types, among them 22nd temple is famous for Bade Baba Bhagwan Adinath the principal deity and 49th is called Jal Mandir, an attractive temple situated in the middle of beautiful pond Vardhaman Sagar.

The colossus of Bade Baba and so many idols of Teerthankars brought letter in the same temple are supposed to be installed in 10th - 11th & 11th - 12th century.
It is clear from inscriptions on idols that Kundalpur was famous about year 1554 A.D. as Teerth Kshetra.

There are 40 temples on hill and remaining 23 in valley. Temples No. 41 to 47 are small in size while No. 48 to 60 are big temples with beautiful spires.




------------------ 
ஸ்ரீ திகம்பர்ஜைன் சித்தக்ஷேத்ர குண்டல்கிரி (குண்டல்பூர்) – ம.பி.

குண்டல்பூர் (குண்டல்கிரி): இந்த ஸ்தலம் இயற்கை எழில் கொஞ்சும் கவர்ச்சியான மலைப்பிரதேசம். அதிசய க்ஷேத்ரமான இங்குதான் 15 அடியுயர படேபாபா பகவான் ஆதிநாதரின் கரும்பளிங்குக்கல், பத்மாசன சிலை நிறுவப்பட்டுள்ளது. மேலும் கடைசி கேவலியான ஸ்ரீதர் கேவலி முக்தி யடைந்த ஸ்தலமாகும். 63 ஜினாலங்களை தன்னகத்தே கொண்ட இப்பூமி, 23 ஜினாலயங்கள், மூலவராக படேபாபா ஸ்ரீஆதிநாதரைக் கொண்டதால் மிகவும் பிரசித்தி பெற்றது. 49 வது ஜினாலயம் அங்குள்ள வர்த்தமான சாகர் எனும் ஏரியில் அமைந்துள்ளதால் ஜலமந்திர் என அழைக்கப்படுகிறது. நாங்கள் சென்றபோது அவ்வேரி முழுவதும் தரைமேகம் இறங்கி விளையாடியது கண்கொள்ளா காட்சியாக இருந்தது.


பிரம்மாண்ட படேபாபா மந்திர் 10-11 நூற்றாண்டில் கட்டப்பட்டது. பெரும்பாலான ஜினாலயங்கள் 11-12 நூற்றாண்டில் நிர்மாணிக்கப்பட்டவை. அங்குள்ள சிலைகளில் உள்ள கல்வெட்டுகள் 1554 AD யாக இருப்பதால் தீர்த்த க்ஷேத்ரம் என்றழைக்கப்படுகிறது.

40 ஆலயங்கள் குன்றில் மீதும், 23 ஜினாலயங்கள் பள்ளத்தாக்கிலும் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 41-47 சிற்றாலயமாகவும், 48-60 படாமந்திராகவும், அழகிய நீண்ட விமானங்களை கொண்டும் காட்சியளிக்கின்றன.


----------------- 

















Atishaya – The warrior of Bundelkhand Maharaj Chhatrasal succeeded in capturing his lost kingdom after Darshan (Prayer – worship) of miraculous Bade Baba. Then Maharaj Chhatrasal helped in reconstruction of the temple. One Mugal Emperor tried to destroy Bade Baba, when he stroked on the thumb of colossus, milk flooded out from thumb and at the same time dense flocks of honey bees attacked on invaders and pushed them to run away. Then Mughal Emperor bagged pardon there and went shamefully.





அதிசய க்ஷேத்ரம்: புத்தல்கண்ட் மகாராஜா சகத்ராசல் இங்குள்ள படே பாபா பகவான் ஆதிநாதரை வணங்கி விட்டு போருக்கு சென்றதால் இழந்த தன் நாட்டைமீட்க முடிந்தது. அன்றிலிருந்து அவர் மீது பக்தி கொண்டு, தனி ஆலயமும் அமைத்து வணங்கி வந்தார். மேலும் முகலாய பேரரசில் படையெருப்பின் போது படே  பாபா மந்திரை அழிக்க முற்பட்டனர். அவரது பெரிய கட்டை விரலில் தாக்க முற்பட்டபோது பால் அருவிபோல் பெருகி வந்ததை கண்டு அதிசயித்து நின்று விட்டனர். அவ்வமயம் தேனீக் கூட்டம் எங்கிருந்தோ பறந்து வந்து தாக்க முற்பட்டதும், அனைத்து சிப்பாய்களும் அங்கிருந்து ஓடிவிட்டனர். அதற்கான முகல் பேரரசர் மன்னிப்பை கோரியதோடு, வெட்கத்துடன் திரும்பினார் என்பது வரலாறு.

















Main Temple & Idol :

Main temple at Kundalpur is Bade Baba Adinath’s Temple. The colossus is a piece of art rare in the world and two idols of Gomukha Yaksha and Chakreshwary Devi are carved in the back.


On the both sides of Bade Baba idols of Bhagwan Parsvanath 12 feet in height are installed, really magnificent and artistic. So many other Teerthankar idols are also here installed in 10th to 12th century. Images of foot of Antim Shridhar Kevali are also installed in this temple who achieved salvation (Nirvan) from Kundalgiri.


Temples from No. 48 to 60 are big temples with attractive spires. Sky high Manstambha (Column of dignity) situated in the middle of the field of Dharmshala as is worth being seen. Another temple is new Samavsharan Mandir, circular in design really a jewel among the series of temples. In this temple 4 Black attractive idols of Teerthankar Bhagwan, 2 feet in height are installed, 12 assemblies are constructed here beautiful according to Jain Texts.



பிரதான ஜினாலயமான ஸ்ரீஆதிநாதர் ஆலயத்தில், பிரம்மாண்ட உருவமான படேபாபா ரிஷபநாதர் அழகிய சிற்ப வேலைப்பாட்டுடன் செதுக்கப்பட்டு அமர்த்தப்படுள்ளார். பின்புறம் சக்ரேஷ்வரி யக்ஷியும், கோமுக யக்ஷனும் செதுக்கப்பட்டுள்ளனர். அந்த 12 அடி  சிலையைத் தவிர, 10-12ம் நூற்றாண்டளவில் ஜினர் உருவங்கள் மேலும் பல ஜினாலயங்களில் வேதிகையில் அமர்த்தப்பட்டுள்ளனர். விடுதலைப் பேறு பெற்ற கடைசி கேவலி ஸ்ரீதர் முனி மகராஜின் பாதங்கள் தனி ஆலயத்தில் நிறுவப்பட்டுள்ளது.


ஆலயம் 48-60 வரையிலானவை பெரிய விமானங்களைத் தாங்கி கவரும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளன. 35 அடியுயர அழகிய சலவைக்கல்லால் ஆன மானஸ்தம்பம் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் சமவசரண ஜினாலயம் வட்ட வடிவில் மிக நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளது  குறிப்பிடத்தக்கது. இதில் நாற்புறமும் அமர்ந்தநிலையில் 2 அடி யுயர கருமைநிற ஜினர்கள் உருவமும், அனைத்து ஜிவராசிகளும் அமரும் 12 கூடங்களும் ஆகமத்தில் உள்ளபடி அழகாக காட்சியளிக்கின்றன.








































































##########################

No comments:

Post a Comment