Tuesday, January 9, 2018

SANVALIYA PARASNATH KARGUVANJI. Jansi - சன்வாலியா பார்ஸ்வநாத் கர்குவாஞ்ஜி , ஜான்சி


SHRI DIGAMBER JAIN ATISHAYA KSHETRA SANVALIYA PARASNATH KARGUVANJI.

ஸ்ரீ திகம்பர் ஜைன் அதிசய க்ஷேத்ர ஸன்வாலியா பாரஸ்நாத் கார்குவான் ஜி.


Name :Shri Digamber Jain Atishaya Kshetra Sanvaliya Parasnath Karguvanji.Is an Atishaya Kshetra (Place of Miracles).Address :Shri Dig. Jain Atishaya Kshetra Sanvaliya Parasnath Karguvanji


Opposite Gate No. 2 of Medical College, Karguvan, Jhansi (U.P.)


0510, 2320044, 2352529
Gandhi Road, Jhansi (U.P.)
Reservation :Available on Phone 0517 – 2320044

Means of approach :

Road – Busses & Taxies are available from Jhansi city.

Rail – Jhansi – 8 km

Nearby City :

Tatia 30 km
Lalitpur 100 km
Gwalior 110 km
Sonagiri 45 kmAbout Karguvanji :

Shri Karguvanji Atishaya Kshetra is only 5 km ahead from Jhansi city opposite Gate No. 2 of Medical Collage in the beautiful valley of Karguvan Village on Jhansi–Kanpur Road, Kshetra is about 700 years old.

Here 6 idols of Black Stone are installed in a basement, which is situated in the midst 9 acres of land surrounded by a rampart.

200 years ago, at the time of Peshavas, One day in Jansi; a person was carrying broken idols in a bullock cart to drop idols in water, stopped here. After trying again & again the cart did not move ahead. In the same day night a famous man of Balvant Nager, Shri Singhai Nanheju saw dream and came to know that at a place where cart stayed. There were various idols hidden underground. In the next morning Shri Nanheju informed to king about dream of night, after discussion digging at that place was decided and thus the ancient idols were recovered under the basement. The King donated 9 acres of land for temple there, at which rampart & well constructed and a beautiful garden was developed.


Here six ancient idols of V.S. 1345 are installed and a big idol of Lord Mahaveer was also installed by Shri Nanheju with organizing Panch Kalyanaka Pratishtha Mahotsava.

Main Temple & Idol :

At Kargavan the biggest idol is Lord Parsvanath (The 23 rd Teerthankar) and five others worth to be seen. One new is Bhagwan Mahaveer’s big idol installed in V.S. 1851 by Shri Nanheju. Other idols are Shri Adinath, Shantinath, Neminath, & Bahubali are agreeable.


Details in tamil, at the bottom.


ஸ்ரீ கர்குவாஞ்சி அதிசய க்ஷேத்ரா, ஜான்சியிலிருந்து 5 வது கி.மீ. உள்ள மருத்துவக்கல்லூரிக்கு எதிரில் அமைந்துள்ள 700 ஆண்டுகளைக் கடந்து நிற்கும் அழகான ஜினாலயமாகும். கர்குவாஞ்சி கிராமம் ஜான்சி – கான்பூர் சாலையில் உள்ளது. ஆறு கருமைநிற சலவைக்கல் சிலைகளை வேதிகையில் கொண்ட, ஒன்பது ஏக்கர் நிலத்தில் மதிற்சுவருடன், தங்குமிட வசதியுடன் கூடிய ஜினாலயம் ஆகும்.


சற்றொப்ப இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் பேஷ்வாஷ் மன்னர்கள் ஆண்ட காலத்தில், ஒருநாள் ஒரு வண்டிக்காரன் சிதிலமடைந்த கற்சிலைகளை, ஏரியில் தூக்கி எறியும் நோக்கத்தோடு ஏற்றிக் கொண்டு வந்த வண்டி தற்போதைய ஆலயம் கட்டப்பட்டுள்ள பகுதிக்கு வந்ததும் நகராமல் நின்று விட்டதாம். எவ்வளவு போராடியும் நகர மறுத்த வண்டியை அப்படியே விட்டு விட்டு சென்று விட்டான் அந்த வண்டிக்காரன்.

அன்றிரவு பலவந்த நகரின் பெரியவரான ஸ்ரீ சிங்கை நானேஜு என்பவரின் கனவில் ஒரு அசரீது தோன்றி, வண்டி நின்ற இடத்தின் கீழ் ஆறு ஜின பிரதிமைகள் உள்ளது. அவற்றை வெளிக்கொணருமாறு ஆணையிட்டுச் சென்றது .

அப்பெரியவர் மன்னவனிடம் முறையிட , மன்னவனும் அரைமனதுடன் ஏற்றுக் கொண்டு அகழாய்வு செய்கிறான். ஆழத்தில் அத்தெய்வக் குரல் கூறியபடியே சிலைகள் இருப்பதை கண்டு மன்னனும், மக்களும் அதிசயிக்கின்றனர். அரசனும் இந்த 9 ஏக்கர் நிலப்பரப்பை நல்ல மரங்களுடன் தானமாக வணங்கி, இந்த ஜினாலயத்தை நிறுவ உதவுகிறான்.
அதன்படியே அஜ்ஜினாலத்தை உருவாக்கி ஸ்ரீ நானேஜூவும் அந்த 6  புராதன ஜினபிரதிமைகளோடு (விக்ரம் சாகா 1345), பின்னர் பகவான் மஹாவீரரின் சிலை ஒன்றையும் நிறுவினான்.

இந்த அதிசய நிகழ்வே இதன் முக்கியத்திற்கு காரணம்.

கர்கவான் முக்கிய ஜினாலயத்தில் பகவான் பார்ஸ்வநாதருடான், ஐந்து மதிப்புமிக்க சிலைகளை வேதிகையில் காணலாம். பகவான் மஹாவீரர் சில்லை 1851ல் நிறுவப்பட்டது.

மேலும் அழகிய சாந்தி நாதர் வெண்சலவைக்கல் சிலையும். அவரைச் சுற்றி 24 தீர்த்தங்கரர்கள் விமானங்களும் வெண் பளிங்கு கற்கொண்டு செதுக்கி வட்டமாக நிறுவப்பட்டுள்ளன.

இத்தலத்தில் 6 அடியுயர ஆதிநாதர் மற்றும் பாகுபலிநாதரின் நின்ற நிலை வெண் சலவைக் கல் சிலைகள் சன்னதியுடன் அழகாக மெருகூட்டுகின்றன.

அழகிய 20 அடி உயர மானஸ்தம்பமும் முன் நின்று நம்மை வரவேற்கிறது.
1 comment:

  1. ஜான்சி கோயிலைப் பற்றி அறிந்தேன். நன்றி.

    ReplyDelete