Thursday, January 11, 2018

Sonagiri Hill Jain temples - சோனாகிரி குன்று ஜினாலயங்கள்


Shri Digamber Jain Siddha Shetra Sonagiri

 ஸ்ரீ திகம்பர் ஜைன் சித்தக்ஷேத்ரா, சோனாகிரி.






Name :

Shri Digamber Jain Siddha Shetra Sonagiri.
Is an Siddha Kshetra (Place of Salvation).

Address :

Shri Digamber Jain Siddha Shetra Sonagiri
Place & Post – Sonagiri, Dist. – Datia (M.P.) Pin – 475685
Phone 07522 – 262307, 262310



It lies in the Google Map in the coordination of  (25.71828, 78.37643)


Nearby City :

Datia 15 km (By Road) 15 km (By Train)
Jhansi 45 km (By Road) 48 km (By Train)
Gwalior 75 km (By Road) 72 km (By Train)








About Sonagiri :

This sacred place is popular among devotees & ascetic saints to practice for self discipline, austerity and to attain Nirvana (Salvation) since the time of Bhagwan Chandraprabhu (The 8th Teerthankar), Five & half Crores of ascetic saints have achived salvation (Moksha or Nirvana) from here.

The Samavsharan of Bhagwan Chandraprabhu came here for 17 times. Nang, Anang, Chintagati, Poornachand, Ashoksen, Shridatta, Swarnbhadra and many other saints achieved salvation from here.

This is the unique place known as Laghu Sammed Shikhar covering the area of 132 acres of two hills. There are 77 beautiful Jain temples with sky high spires, Temple No. 57 is main among them.

Acharya Shubh Chandra & Bhartrihari lived and worked here for spiritual achievements. They completed here some texts also.














Main Temple & Idol :

Temple No. 57 on hill is the main temple. This is vast in size, very beautiful, having
attractive artistic spire, in this temple principal deity are Lord Chandraprabhu, 11 feet in height and two other beautiful idols of Lord Sheetalnath & Parsvanath are installed. There is a column of dignity (Manstambh) near temple 43 feet in height and an attractive model of Samavsharan, big in size is also here.
Other Temple :
Other more than 77 temples on hill, there are 26 temples in the village, most of them are old enough.

There is attractive Padma kalash spire Nandeeswara Jinalaya is also constructed in recent years. Pancha meru and 13 jinalayas on four direction are structured in proper manner. Nearby a model Jinalayas at Kailasagiri also found in miniature model. Which is supported by the shoulders of Indra. Sammed sigarji miniature tonks are also constructed adjacent to that.

All the ups and downs of the mountain path with attractive Spires are give us pleasant looking and satisfaction of worship.

---------------------























இப்புனித பூமி ஸ்ரீ சந்திரப்ரபு ஜினரின் காலம் தொட்டே; நல்லொழுக்கத்தை கடைபிடிக்க பக்தர்களிடமும், துறவுநெறியை எளிமையாக கடைபிடித்து நிர்வாண நிலையை எய்தவும் பிரபலமான ஸ்தலமாகும். ஏறத்தாழ ஐந்து கோடியே ஐம்பது லட்சம் தவமியற்றிய துறவிகள் விடுதலைப்பேற்றை எய்திய புண்ணிய பூமியாகும்.

பகவான் சந்திரப்ரவுவின் சமவசரணம் பதினேழு முறை தேவேந்திரனால் அமைக்கப்பட்டு, நங்க், அநங்க், சித்தகதி, பூர்ணசந்த், அசோக்சென், ஸ்ரீதத்தா, ஸ்வர்ணபத்ரா போன்ற பல முனிவர்கள்இங்கு முக்தியடைந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வளவு தனித்தன்மை வாய்ந்த சோனாகிரி, லகு சம்மேத கிரி என்றும் அழைப்பர். 132 ஏக்கர் இரு மலைப்பிரதேசத்தில் அமைந்துள்ள ஜினாலயங்களின் தொகுப்பாகும். இதில் 77 அழகான ஜினாலயங்கள் குன்றில் அழகிய கூம்புவடிவ கோள விமான, கலசத்துடன் காட்சியளிக்கின்றன.  இதில் 57 வது ஸ்ரீசந்திரப்ரபு ஜினாலயம் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.







































ஆச்சார்ய சுபசந்திரர் மற்றும் பார்த்திஹரி இருவரும் இங்கு தவவாழ்வு வாழ்ந்து, ஆன்மீக முன்னேற்றம் கண்டவர்கள். சில ஆகமங்களை இங்கு வாழ்ந்த போது வழங்கியுள்ளனர்.

முக்கிய ஜினாலயமான இலக்கம்  57, அழகாக, விஸ்தாரமாக, கலைநுணுக்கத்துடன் கூடிய விமானங்களைக் கொண்டுள்ளது. ஸ்ரீ சந்திரப்ரபு ஜினரின் 11 அடி சிலையும் இருபுறமும் பகவான் சீதளநாதரும், ஸ்ரீ பார்ஸ்வநாதரும் நிருவப்பட்டுள்ளன. 43 அடியுயர மானஸ்தம்பம் சலகைக்கல்லால் செய்குவிக்கப்பட்டு நிறுவப்பட்டு சுற்றிலும் 24 தீர்த்தங்கரர்கள் கூடமும் அமர்ந்த நிலை சிலைகளுடன் காட்சியளிக்கிறது. மேலும் பெரிய சமவசரண வடிவத்தை கொண்டுள்ள ஜினாலயமும் அலங்கரிக்கிறது.

மேலும் தொன்மையான 77 ஆலயங்கள் குன்றுப்பகுதியிலும், 26 தரைப்பகுதியிலும், கிராமத்திலுமாக உருவாக்கப்பட்டுள்ளன.

























பெரும்பாலான ஜினாலயங்கள் ஸ்ரீ சந்திரப்பிரபு ஜினருக்கும், ஸ்ரீ ஆதிநாதருக்கும் சில ஜினாலயங்கள் சாந்தி ஜினருக்கும், ஸ்ரீ நேமிநாதருக்கும் மற்றும் ஸ்ரீ வர்த்தமானருக்குமானது.
அழகிய நந்தீஸ்வர ஜினாலயம் புதியதாக மாதிரி வடிவத்துடன் வண்ணங்கள் பளிச்சிட காட்சியளிக்கிறது. அதன் விமானம் கமலம் விரிந்த கலசத்துடன் காட்சியளிக்கிறது. அருகில் கைலாசகிரியைப் போன்ற மாதிரி வடிவத்தை இந்திரன் தாங்கி நிற்பது போன்றும், சம்மேத  சிகர பாத கூடங்கள் போன்ற மாதிரி வடிவமும் காட்சி யளிக்கின்றன.


குகைகள் சிலவும், தியான ஸ்தலங்களும் இடையிடையே தென்படுகின்றன. அனைத்தும் மலைபாதையில் ஏற்ற இறக்கத்துடன் அழகிய மரங்களுக்கிடையே விமானகள் கலசத்துடன் காட்சியளிப்பது கண்கொள்ளாக் காட்சியாக உள்ளது.

சம்மேத சிகரத்தின் சிரமம் தெரியாமல் 4.30 மணி நேரத்தில்  சுற்றி வணங்கி மனநிறைவோடு திரும்பலாம்.

---------------------------
















































































































































































No comments:

Post a Comment