Sunday, September 24, 2017

Karanja 2 - Balathar Mandir


Shri Mahaveer digamber jain (balathar) Mandir

ஸ்ரீ மகாவீரர் திகம்பர் ஜைன் பலாத்தார் மந்திர்.

It lies in the google Map with coordination of (20.48235, 77.48768)

பலத்தார் கனா மந்திர்
மிகவும் குறுகலான பாதை. பேருந்து செல்வதே கடினமாக இருந்தது.

ஸ்ரீ மகாவீரருக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஜிநாலயம்.


மிகப் பழமையான ஆகமங்கள் துணியில் ஒரு புறம் வண்ணப் படமாக, மறு பாதியில் எழுத்துருவுவாக உருவாக்கப்பட்டவை.

முதல் தளத்தில் மகாவீரரின் சமவசரணம் , மானஸ்தம்பம்  கந்தகுடியில் நான்முக ஜிநரின் உருவம், விமானத்துடன் 10 அடி உயரத்தில். ஏழடுக்கு வட்ட பூமியுடன் 20 அடி விட்ட சுற்றில் சலவைக் கல் உருவாக்கமாக பரிணமிக்கிறது.


அதனை சுற்றி இந்த புராதன ஆகமங்கள் கண்ணாடி கூட்டில் வைத்துள்ளனர்.

இவ்வாலயத்தில் 1000 வருடங்களை கடந்த பல ஜிநர் பிரதிமைகள் அடுக்கு மேடையில் அமர்த்தப்பட்டுள்ளது-

பல பித்தளை, பஞ்சலோக பிரம்மாண்ட சிலைகள் உள்ளன.

முக்கியமாக சகஸ்ர கூடங்கள் இரண்டு, நந்தீஸ்வரதீப வடிவங்கள், ரத்தினத்திரயம் போன்று பல விக்ரகங்கள் பளிச்சிடுகின்றன.
-----------------------
------------------------

Balathar shri Mahaveer digamber jain mandir


I lies in a narrow street very hard to reach by bus.

Shri Mahaveer is installed on the Garbhagraha. Very old Agamas collection in the ancient temple. They stored in a wall mount almarahs of the First floor of Samavasarana Koodam.

Bhagavan Mahaveer is seated on the on Kandakudi Singadhana. The lashmivara manadam along with 12 slots of seating arrangements for dev, devis, Manus, animal and birds are also created attractive manner. All seven con-centric pradesas are made with appropriate Bhavanam, Theatres, Dance hall, Gardens, Flagmasts and etc. in the places which are indicated in the agamas.Nearly 10 ft high and 20 ft dia of circumbulance  in the first floor. On the top the floor a viman has Shri Mahaveer idol is installed inside.

Apart from that 1000 year old pratimas are arranged in tiered platforms. Brass, panchlok idol are displayed attractively. A metal model of Nandeeswaradweep, Rathnathrayam and individual Jinars are seated on a platform.
 We never see such a rare collection other than this Karanja.

---------------------- 


*********************************************** 


Very near to this place another one kasth Chandraprabu Jinalaya also be there.  They are not allow to take photos there.  So I cannot show the temple visually 


(One video presentation is in You tube by the trust of the temple.
https://www.youtube.com/watch?v=JPd6unUolGc)

 ஸ்ரீ  சந்திரப்ரபு கஸ்த சங்க் மந்திர்.  

இங்கு புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை. (only one shot I had taken)900 ஆண்டுகளைக் கடந்து கம்பீரமாக அமர்ந்திருக்கும் மூன்றடி உயர சலவைக் கல், பத்மாசனத்தில் உருவான ஸ்ரீ சந்திரநாதர் அமர்ந்துள்ளார்.

அவரின் பின்புலத்தில் 4 அடி விட்டத்தில் வட்ட வடிவ பித்தளை பிரபை 1.5 அடி உயர பீடத்தில் நிறுத்தியுள்ளனர். இந்தியாவிலேயே பெரிய பிரபையாக சொல்கின்றனர்.

அவருக்கு பின்புறம் 3 அடுக்கு மேடையில் 800 ஆண்டுகளைக் கடந்த 2 , 3 அடி உயர சலவைக்கல் பத்மாசன ஜிநர் சிலைகள் அழகாக காட்சியளிக்கின்றன.

 சாணைக்கல் ஆதிநாதர், நின்ற நிலையில் , சுற்றிலும் 23 வர் புடைப்பு சிற்பங்கள் அருமை.

பல பித்தளை ராக்ஷஸ வடிவ ஜினர் சிலைகள் பிரபையுடன், சகஸ்ர கூடம், நந்தீஸ்வர தீப வடிவம் முதலியன பாதுகாப்பான இரும்பு தட்டிக்குள் உள்ளன.

மேலும் சிறப்பாக:

மரச்சிற்பத்தில் சகஸ்ர கூடம், ராக்ஷஸ வடிவ பித்தளை மஹா மேரு வடிவம் மற்றும்

தனிப் பொக்கிஷ அறையில் சிந்தாந்த சிலைகள். நீர் ஸ்படிகம், பால் ஸ்படிகம், மாணிக்கம், வைரம், வைடூரியம், மரகதம், கருடமணி போன்ற விலையுயர்ந்த மணிகளில் ஜிநர் உருவங்கள் ஒளியுடன் திகழ்கின்றன.

மேலும் மகாமண்டப கால்கள் அனைத்தும் உயர் ரக ரோஸ்வுட் ல் சிறப்பான நகாசு வேலைப்பாட்டுடன், ஜினர், சமவ சரண அமைப்பு, தேவலோகம், நாரக துன்பக் காட்சிகள்
மிக நுணுக்கமாக நேர்த்தியாக செதுக்கப்பட்டுள்ளது.

இம் மூன்று சிறப்புகளும் வேறு எங்கும் காண இயலாது (என்கின்றனர்).

No comments:

Post a Comment