Mukthagiri Jinalayam and Adhisaya kshetram.
முக்தா கிரி அதிசய க்ஷேத்ர ஜினாலயங்கள்
---------------------------------------------
It lies in the coordination of (21.40137, 77.573) on
the map
----------------------------------------------
முக்தாகிரி சித்த ஸ்தலம் சத்புடா மலைத் தொடரில் உள்ள திருப்பம்
உள்ள இடத்தில் இயற்கை தாவரங்கள் அதிகம் நிறைந்த மலைப்பகுதியாகும். மெந்தாகிரி, மெத்ரகிரி
போன்றும் அழைக்கின்றனர். பிராகிரத நிர்வாண் காண்ட் என்ற நூலின் அடைப்படையில் காணும்
போது ஏறக்குறைய மூன்றரை கோடி முனிவர்கள் தவமிருந்து விடுதலைப் பேறு பெற்ற தலம் என்பதை
அறியலாம்.
பத்தாவது தீர்த்தங்கரரான பகவான் ஸ்ரீதளநாதர் இம்மலையில் தங்கி
இருந்து தவமியற்றியதால் இப்பூமி புனிதம் பெற்றுள்ளது.
பல அற்புதங்கள் இம்மலைப் பிரதேசத்தில் அந்தந்த காலகட்டத்தில்
நடந்துள்ளன. அசல்பூரில் கிடைத்த தாமிரத்தகட்டின் குறிப்பினால் இங்குள்ள குகன் மந்திர்
மகத மாமன்னன் சிரேணிகரால் கட்டப்பட்டதை அறியலாம். அவர் மகாவீரர் காலத்தில் வாழ்ந்த
அரசனானதால் 2500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததை உணரலாம்.
சிரேணிகருக்கு பின்னர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அசல்பூர்
ஐல் ஸ்ரீபால் என்ற அரசரால் வளர்ச்சிப்பணிகள்
ஏற்பட்டுள்ளன. அக்காலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்தலமாக இருந்துள்ளது. பல ஜினாலயங்களூம்,
பிரதிமைகளும் அவ்வரசனது வழிபாட்டில் இருந்துள்ளது. பல மூலவ பிரதிமைகளும், இவ்வரசரால்
அந்தரிக்க்ஷ பார்ஸ்வநாதரும், எல்லோரா குகை ஜினாலயங்களும் உருவாக்கப்பட்டவை.
சென்ற 200 ஆண்டுகளாக கலம்கார் பரம்பரையினர் இவ்வாலயங்களையும்,
தர்மசாலையும் தமது கட்டுப்பாட்டில் வைத்து பராமரித்து வந்துள்ளனர். ஸ்ரீ நாதுச பாசுவ
கலம்கார் என்ற அப்பரம்பரையில் வந்த பவ்யர் இந்த 52 ஜினாலயங்கள் உள்ள சத்புடா மலைப்பகுதியை
விலைக்கு வாங்கியுள்ளார். அவரே அடிவாரத்திலுள்ள மகாவீரர் ஜினாலயத்தை நிறுவி மலைக்கு
செல்லும் பக்தர்களிடம் வரி வசூல் செய்து இவ்விடத்தின் வளர்ச்சிப் பணிக்கு பயன்படுத்தி
வந்துள்ளார்.
1956க்கு பின்னர் பொதுவான டிரஸ்ட் அமைப்பை ஏற்படுத்தி இப்பொழுது
வரை இவ்விடத்தை பராமரித்து வருகின்றனர்.
1983 ம் ஆண்டில் ஆச்சாரிய்ய ஸ்ரீ வித்யாசாகர் முனி மகராஜ்
மழைக்காலத்தங்கலுக்கான விஜயத்திற்குப் பின் புதுப்பொலிவேற்றம் பெற்று பலரும் வந்து
செல்லும் ஸ்தலமாக மாறியுள்ளது.
தீர்த்தங்கரர் ஸ்ரீதளநாதர் இம்மலைப்பகுதியில் சமவசரணத்தில்
அமர்ந்திருந்த காலங்களில் தேவர்களால் முத்து மாரி (மழை) பொழிந்ததினால் முக்தாகிரி என
அழைக்கப்பட்டது.
முற்காலத்தில் முனிமகராஜ் ஒருவர் தவமியற்றிய சமயத்தில் அந்த
நீர்வீழ்ச்சியில் கால் தவறி வீழ்ந்து அம்முனிவர் காலடிக்கு வந்து சேர்ந்தது. மிகவும்
குற்றுயிரும் குலையுயிருமாக இருந்த அஜ்ஜீவனிடம் பஞ்சமந்திர உபதேசம் தொடர்ந்து சொல்லியபோது
அது உயிர் பிரிந்ததும் அப்புனித சொல்லின் பயனால் தேவகதியை அடைந்ததாக செவிவழிச் செய்தி
நிலவுகிறது.
பின்னர் அத்தேவன் அம்முனி மகராஜை சந்தித்து வணங்கியபோது முத்து
மழை பொழிந்ததாகவும் கூறப்படுகிறது. அதனால் (ஆண் செம்மறி ஆடு) மேந்தாகிரி என்றும் அழைக்கப்படுகிறது.
தற்காலத்திலும் அஷ்டமி, சதுர்தசி, பெளர்ணமி யன்று முத்துமழை பொழிவது போன்ற ஓசை கேட்பதை
பலரும் உணர்ந்துள்ளனர். அச்சம்பவம் பத்தாவது ஜினாலயத்தில் நடந்துள்ளது.
உலகத்தில் வரும் புரியாத வியாதிகளிலிருந்து விடுபடும் பொருட்டு
26 வது ஜினாலய மூலநாயகரான பகவான் பார்ஸ்வநாதரை தீவிர பக்தர்கள் நம்பிக்கையோடு வணங்கும்
வழக்கம் உள்ளது. அது பற்றிய பல அதிசய நிகழ்வுகளும் இத்தலத்தில் பேசப்படுகிறது.
சிங்கம், புலி, சிறுத்தை, பாம்புகள், விஷ ஊர்வன ஜீவன்கள் பகவான்
காலடியில் வணங்கி தங்களது சினத்தை நீக்க வேண்டுவதாக சொல்லப்படுகிறது. அவைகள் வரும்
பக்தர்களை ஏதும் தீமை செய்தாது இருப்பதிலிருந்தே தமது தீய குணத்தை விட்டொழித்ததை அறியலாம்.
மொத்தம் 52 ஜினாலயங்களைக்கொண்ட முக்தாகிரி மலையில் முக்கியமாக
10வது க்ஷேத்ரமான மேந்தாகிரி (ஆடு தேவனான) 26 வது ஜினாலயம். 40 வது, உச்சியை தோண்டி அமைக்கப்பட்ட ஆலயம் போன்றவை பிரசித்தி
பெற்றவை. பல ஆலயங்கள் 16ம் நூற்றாண்டைச் சார்ந்தவையாகும்.
மேந்தாகிரி – மிகப்புராதன மான ஜிநாலயமான இதனை ஐல் ஸ்ரீபால்
எனும் எலிஸ்பூர் அரசனால் கட்டப்பட்டதாகும். மூன்று கதவுகளில் அரஹந்தர்கள் உருவங்கள்
செதுக்கப்பட்ட குகை ஆலயமாகும். இரண்டு மூடப்பட்டுள்ளது. நடுவே உள்ள கூடம் நான்கு தூண்களின்
மீது அமைக்கப்பட்டுள்ளது. இந்த கூடத்தைச் சுற்றிலும் 72 ஜினர் பிரதிமைகள் மிக அழகாக
செதுக்கப்பட்டுள்ளன. 16.25 அடி பக்கமுள்ள சதுரக்கூடத்தை பத்தாம் நூற்றாண்டில் கட்டி முடித்துள்ளனர். குங்குமப்பூவின் சிதறல்களைக் அதன்
வெளியேயுள்ள பாறைகளில் காணலாம். இவ்வாலய இடத்தில்தான் மேந்தா- ஆடு, தேவகதியைப் பெற்றது.
அதனால் இவ்வாலயம் மேந்தாகிரி என அழைக்கப்படுகிறது.
26ம்; ஜினாலயத்தில்
மூலவராக பகவான் பார்ஸ்வநாதர் 4 அடி யுயர கற்சிலை அமர்ந்த நிலையில் நிறுவப்பட்டுள்ளது.
மிகப் புராதனமான இச்சிலை கோடிபட்டா ஸ்ரீபால் எனும் அரசனால் ஒரு குளத்திலிருந்து கண்டு
எடுக்கப்பட்டு, இங்கு நிறுவப்பட்டுள்ளது. ஒரு கோபுரம் போன்று அதன் நெற்றியில் உள்ளது
யானை உருவங்கள் இருபுறமும் செதுக்கப்பட்டுள்ளன.
சாம்வாட் சஹா 1546
ல் சிவந்த நிறமுள்ள நூறு தலையுள்ள படமெடுக்கும் பாம்பு குடையின் கீழ் உள்ள பார்ஸ்வநாதர்
சிலை உருவாக்கப்பட்டது.
40 வது ஜினாலயம் மலையில் தோண்டி எடுக்கப்பட்டது. அதன் வேலைப்பாடுடைய
தூண்கள், மேற்கூரையும் அழகானது. மூலவர் தனித்தன்மையான உருவத்தில் அமைக்கப்பட்டுள்ளார்.
மொத்தம் 52 ஜிநாலயங்களில்:
ஒன்று முதல் 4 வரை முதல் தொகுதியாக ஜிநாலயங்கள் அமைந்துள்ளன.
5 - 9 வரை ஒரு தொகுதியாகவும்
10க்கும் 11ம் ஜிநாலயத்திற்கும்
இடையே அருவி பள்ளத்தாக்கை நோக்கி பாய்வதை இடையில் அமைக்கப்பட்ட பாலத்தின் மீது நடந்து
கொண்டே காண்பது அற்புதமாக இருந்தது.
11 - 26 ஒரு தொகுதி ஏற்ற இறக்கத்துடன் அமைக்கப்பட்டுள்ளதால்
அதன் சிறிய கோபுரங்கள் ஆங்காங்கே தென்படுவது பரவசத்தை அளிக்கிறது.
27-30 வரை ஒரு தொகுதி ஏற்ற இறக்கம்.
31 - 35 அருவியை நெருங்கி அமைந்துள்ளது
ஆங்காங்கு கடந்து செல்ல குறியீடுகள் உள்ளதை கவனிக்க தவறினால்
சில சிற்றாலயங்கள் விடுபட்டு போய் விட வாய்ப்புள்ளது.
36 - 39 வரை ஒரு தொகுதி
40 தனியாலயம்
41-44 ஒரு கூட்டாலயம்
45 - 48 தொகுதி
49,50, 51,52 போன்றவை இறங்கும் மாற்று வழியில் உள்ளன.
ஜினாலயம்
1ல், 3 அடி யுயரமுள்ள
பத்மாசன நிலை பார்ஸ்வநாதர் கருமை நிற சிலை சம்வாட் 1967ல் நிறுவப்பட்டுள்ளது.
2. பார்ஸ்வநாதர் ஜினாலயம்
– நின்ற நிலையில் ஒன்றும், அமர்ந்த நிலையில் ஒன்றுமாக உள்ளது. தூண்களிலும், கூரையிலுமாக
சிலைகள் உள்ளன.
3. ஒரு அடி உயரமுள்ள ஆதினாதர் பிரதிமை உள்ளது.
4. சலவைக்கல்லால் ஆன ஏழு பனாமுடி கொண்ட பார்ஸ்வநாதர் அமர்ந்துள்ளார்.
5. 1.5 உயரமுள்ள பகவான் அரநாதர்.
6. சம்வத் 1549 ல் நிறுவப்பட்ட 2 அடியுயரமுள்ள பகவான் பத்மபிரப,
ஸ்ரீதள, நேமிநாதர் சிலைகள் காண்கின்றன.
7. 5.5 உயர பத்மப்பிரப சிலையுள்ள ஜிநாலயம்.
8. ஆதினாதர் ஜினாலயம். 5.5 உயர சிலையுள்ளது.
9. நேமிநாதர் ஜினாலயம். 2.5 உயர சிலை நிறுவப்பட்டுள்ளது.
11. பகவான் சுபார்ஸ்வநாதர் ஜினாலயம். 3 அடி உயரத்தில் நிறுவப்பட்டுள்ள
ஜிநாலயம்.
12. வாதுமை நிறத்திலுள்ள 1.25 அடி உயர சாந்திநாதர் பிரதிமை
நிறுவப்பட்டுள்ள ஜினாலயம்.
13. 1.3 அடி உயர பத்மாசன நிலை பகவான் சந்திரப்பிரபு பிரதிமை.
14. மிகப்பழமையான அதிநாதர், அரநாதர், முனுசூவிரத நாதர் சிலைகளைக்
கொண்டது.
15. கட்காசன, பத்மாசன நிலை ஜினர் சிலைகள் கொண்டது.
16. ஒரு அடி உயர பகவான் சந்திரப்ரபு வெண்ணிறச் சிலையை கொண்ட
ஜினாலயம்.
17. பத்மாசன ஜினரையும், பாதங்களையும் கொண்டது.
18. 1.25 உயர கருநிற சந்திரப்பிரபு பிரதிமையைக் கொண்டது.
19. வெண்நிற 7 அடி உயர பகவான் பாகுபலி சிலை சம்வாட் 2469 ல்
நிறுவப்பட்டுள்ளது.
21. 3 அடி உயர பத்மாசன பகவான் நேமிநாதர் சிலைக் கொண்டது.
22. சலவைக்கல் பகவான் பார்ஸ்வநாதர் பிரதிமையை கொண்டது.
23. 1.5 உயர பகவான் பார்ஸ்வநாதர் சிலையைக் கொண்டது.
24. 2 அடி உயர பகவான் மகாவீரர் சிலை நிறுவப்பட்டது.
25. 3.3 அடி உயர மூன்று தீர்த்தங்கரர்களைக் கொண்டது.
26. பிரதான ஜினாலயங்களில் ஒன்று. பார்ஸ்வநாதரைக் கொண்டது.
27. 4.5 அடி உயர பகவான் மஹாவீரர் சிலையுடன் பத்து ஜினர் சிலைகளையும்
கொண்டுள்ளது.
28. 1.25 அடி உயர பகவான் சந்திரப்ரபு பிரதிமையுள்ளது.
29. பகவான் பார்ஸ்வநாதர் நிறுவப்பட்டுள்ளது.
30. பகவான் சந்திரப்பிரபு
பிரதிமை உள்ளது.
31-34 வரை பாதங்களைக் கொண்ட ஜினாலயங்கள்.
35. பகவான் சந்திரப்பிரபு வை கொண்டது.
36. பகவான் சுபார்ஸ்வநாதரைக் கொண்டது.
37. அஜிதநாதர் ஜினாலயம்.
38. 1.25 அடு உயர பகவான் ஆதிநாதர் ஜினாலயம்.
39. கட்காசன நிலை ஜினரைக் கொண்டது.
41. ஸ்ரீதளநாதர் ஜிநாலயம்.
42. 3.5 அடிஉயர ஆதிநாதர் சிலைக் கொண்ட வேதிகையுடன், பார்ஸ்வநாதர்
சிலையைக் கொண்ட வேதிகையும், 24 தீர்த்தங்கரர்களைக் கொண்ட வேதிகைகளும் உள்ளன.
43. பகவான் பார்ஸ்வநாதரைக் கொண்டது.
44. சந்திரப்பிரபு ஜினாலயம்.
45. ஆதிநாதரைக் கொண்டது.
46. சந்திரப்பிரபு பிரதிமை கொண்டது.
47. ஸ்ரீ ஆதிநாதரை கொண்டது.
48. 6.9 அடி உயர நின்ற நிலை சாந்திநாதர் மற்றும் குந்துநாதரைக்
கொண்ட ஜிநாலயம்.
49. பகவான் பார்ஸ்வநாதருடன், 23 ஜினர்களைக் கொண்டுள்ளது.
50. நந்தீஸ்வர ஜினாலயம்.
51. சம்பவநாதருக்கானது.
தர்மசாலையும், ஜினாலயம் ஒன்றும் அடிவாரத்தில் உள்ளது. பகவான் ஆதிநாத், பகவான் மஹாவீர், பகவான்
பார்ஸ்வநாதர் போன்ற ஜினரை நிறுவியுள்ளனர். ஒரு பிரார்த்தனைக் கூடமும் உள்ளது.
அது மட்டுமல்ல அழகிய மலையைச் சார்ந்த கண்கவர் வண்ணங்களைக்
கொண்ட மரங்கள், செடிகளைக் தன்னகத்தே கொண்டுள்ள முக்தாகிரி தரிசனம் செய்ய தகுதியான பிரதேசமாக
உள்ளது.
--------------------
Muktagiri Siddha Kshetra is situated in the lap of the ‘Satpuda’ Mountain range and it is surrounded by beautiful natural vegetation. It is ancient Siddha & Atishaya Kshetra. Its another name is also ‘Mendhagiri’ or ‘ Medhrgiri’. According to “Prakrit Nirvan Kand” and other texts, Muktagiri is place of attainment of Nirvan and about 3 & half crores of ‘Muniraj’ (Saints) have done meditation and attained salvation from here.
The Samavsharan of 10th Teerthankar Bhagwan Sheetalnath also arrived here and so it became sacred by footsteps of Bhagwan Sheetalnath.
Many miracles do happen here from time to time. This Kshetra is quite ancient and according to inscription on ‘palate of copper’ (Tamrapatra) got from Achalpur; the ‘Guha (Cave) Mandir’ was got constructed on this hill by the emperor of Magadh ‘Shrenik Bimbasar’. King ‘Shrenik’ was the contemporary of Bhagwan Mahaveer about 2500 years ago.
After Shrenik, about 1000 years ago from today King ‘Ail Shripal’ of Elichpur (Achalpur) developed this Kshetra. Thus Muktagiri became famous Teerth Kshetra at that time. Many temples and idols were reverenced by him. Many idols were got carved artistically by King Ail Shripal at the places like Antariksha Parshvanath & Elora and the cave temples were also got constructed by him. As per the records available at Muktagiri Sansthan the entire Temples and Dharamshala was maintained / and manage from 200 year’s by Kalamkar Family residing at Sultanpur (Achalpur). In 1923 Late. Shri. Nathusa Pasusa Kalamkar purchase the entire range of Satpuda Hill where these 52 Digambar Jain Temple where build from Mr. Khaparde who was holding the malgujari and collecting a surcharge from Jain devotee’s coming for worship. Then Nathusa Pasusa build Dharamshala and Mahavir Temple on the foothill of the holy place. In 1956 the public trust was formed and still today all the entire management is look after from Kalamkar Family. This holy place has given a complete face-lift after 1980 when 108 Shri. Vidyasagar Maharaj completed a chaturmas at “Muktagiri”.
How this place named ‘Muktagiri’: -
It is said that at the time when Samavsharan of 10th Teerthankar Bhagwan Sheetalnath arrived here, there was shower of pearls (Moti, Mukta). It is because of this shower of pearls the name of this holy place became Muktagiri.
The secret behind the name – ‘Mendhagiri’:
It is said that in ancient times one Muniraj was engrossed in meditation & Tapa near waterfall. At that time one Mendha (male sheep - Lamb), which came near waterfall got slipped and fell near Muniraj. The Muniraj recited ‘Namokar Mantra’ to the dying Mendha. As a result of recitation of ‘Namokar Mantra’, Mendha attained eternity & peace and became Dev. This Dev visited for the prayers of Muniraj and showered pearls on this hill. As the Mendha attained eternity here so name of this place became ‘Mendhagiri’ and due to shower of pearls it became ‘Muktagiri’. Even today the shower of saffron takes place on the hill at Ashtami, Chaturdashi & Poornima.
Atishaya: - Though it is Siddha Kshetra, it is also related with many miracles. Many Sensitive devotees do visit the principal deity Bhagwan Parshvanath of 26th temple to get rid from worldly diseases and other types of illness. One foreigner himself felt one such miracle.
Many dangerous animals like Lion, Tiger, Leopard, Snakes & Reptiles are seen visiting at the feet of Bhagwan and it seems that they visit here to get rid of their violent tendencies. These dangerous animals have never proved violent and not even caused harm to any visitor.
Main Temple & Idol :
There are 52 temples on Muktagiri Siddha Kshetra. The separate routes are made for ascending up and descending down the hill. The 10th temple of this Kshetra is known as Mendhagiri temple and 26th temple is called as the main temple. The 40th temple is dug in the lap of mountain and it is quite antique & beautiful. The temples of this Kshetra are generally antique & belong to 16th century.
Mendhagiri Temple: - This is the oldest temple at Muktagiri and it is believed that this was got constructed by ‘King Ail Shripal’ of Elichpur. It is cave temple on the three doors of which Arihant idols are carved. Two doors are closed. In the center of temple the hall is constructed on four pillars. Around this hall the path of circumambience is also built. The 72 idols of Teerthankaras (three Chaubeesee) are carved beautifully on the walls of this temple. This temple is 16 feet & 3 inch tall and its width is also equal to its length. This temple was built in 10th century. The droplets of saffron can be seen on rocks kept outside the temple. It is that temple only where Mendha attained ‘Devgati’ after hearing precepts from Muniraj. Therefore this temple is called Mendhagiri.
The 26th temple is main temple of Muktagiri and this is temple of principal deity Bhagwan Parshvanath. The 4 feet high black colored Padmasan idol of Bhagwan Parshvanath surmounted by seven serpent hoods is quite ancient & magnificent. It is said that King Kotibhatta Shripal saw the idol of Bhagwan Parshvanath near the pond of Elichpur in his dream and he was given order to take out idol from there. Presently that idol is installed at this place. There is spire above the forehead of the idol and elephants are present on both sides of the idol.
The red ochre colored idol of Bhagwan Parshvanath in Samvat 1546 & 100 serpent-hooded idol of Parshvanath are quite attractive. The idol of Panch Balyati, which was reverenced in the Samvat 1548 on flat stone, is also installed here.
The 40th numbered temple is dug in the lap of mountain. This is quite ancient and the carving the walls of temples are exquisite. The rhythm & symmetry of pillars and roof of temple is superb. The idol of principal deity is quite magnificent and worth seeing.
Digambar
Other Temples :
There are 2 temples on the foot hill one is of Lord Aadinatha and other one is of Lord Mahavir. The group of temples is constructed on the Muktagiri Siddha Kshetra. From No. 1 to 4 there is one group and from No. 5 to 9 there is another group. There is waterfall in between 10th & 11th temple. A bridge is constructed over this waterfall. From the bridge the view of this Kshetra looks quite beautiful.
From No. 11 to No. 26 there is one group of temples; from 27 to 30 is another group. Temple No. 31 to 33 is situated on one side of the waterfall and temple No. 34 & 35 are on the other side. The streams falling in between these two groups together take form of waterfall & the water falls from the height of 100 feet. From No. 36 to 49 are another group of temples. The temple from No. 50 to 52 is established on the return path of the Kshetra.
The description of other temples established on this Muktagiri Kshetra is as follows: -
(1) Temple: - The black colored 3 feet high Padmasana idol of principal deity Bhagwan Parshvanath is established in this temple and this idol was reverenced in Samvat 1967.
Another idol of Bhagwan Parshvanath belonging to 7th-8th century is also installed in this temple. The 1 foot 9 inch high Sarvato – Bhadrika is also present here.
(2) This is also Parshvanath Temple. Along with Parshvanath the 1 Khadgasan & 1 Padmasan idols are also installed. The idols are also carved on the pillars and one idol is also built in the spire.
(3) The 1 foot high idol of Bhagwan Adinath is installed in this temple.
(4) The marble idol of Bhagwan Parshvanath surmounted by seven serpent hoods is established.
(5) The 1½ feet high idol of Bhagwan Arahnath (18th Teerthankar) is established here.
(6) The 2 feet high marble stone idols of Bhagwan Padmaprabhu, Sheetalnath & Neminath are installed here these were reverenced in Samvat 1549.
(7) It is Padmaprabh Mandir and 5½ feet high idol of Bhagwan Padmaprabh made from mountain rock is installed.
(8) It is Adinath Mandir. In this temple 1½ feet high Bhagwan Adinath’s Padmasan idol made of white marble is installed.
(9) The 2½ feet high principal deity Bhagwan Neminath’s Padmasan idol made of black marble is established. According to inscription on idol it was reverenced in Samvat 904.
(10) This is Mendhagiri Temple and its description has been given above.
(11) The 3 feet high Padmasan idol of Bhagwan Suparshvanath is installed here.
(12) The Almond colored 1¼ feet high Padmasan idol of Bhagwan Shantinath is installed along with 7 other idols and foot images. ‘Panch Balyati’ is engraved on one stone.
(13) The 1 foot 4 inch high white colored Padmasan idol of Bhagwan Chandraprabhu is installed in this temple. It was reverenced in Samvat 1548.
(14) The antique marble stone idols of Adinath, Arahnath & Munisuvritnath are installed here.
(15) The Khadgasan & Padmasan ancient idols are installed in this temple.
(16) It is Chandraprabhu Mandir. 1 foot high white colored idol of Bhagwan Chandraprabhu is installed in this temple.
(17) The one ancient Padmasan idol & ancient foot images are established here.
(18) The 1¼ feet high black colored stone idol of Bhagwan Chandraprabhu is established.
(19) The white colored, 7 feet high idol of Bhagwan Bahubali is installed in this temple & it was reverenced in Veer Samvat 2469.
(21) The 3 feet high Padmasan idol of Bhagwan Neminath is established here.
(22) The marble stone idol of Bhagwan Parshvanath is installed here.
(23) In this also 1½ feet high marble stone idol of Bhagwan Parshvanath is installed.
(24) Mahaveer Mandir – the 2 feet 10 inch high idol of principal deity Bhagwan Mahaveer is established here. It was reverenced in Veer Nirvan Samvat 2500. The 1 foot 3 inch high idols of Bhagwan Chandraprabhu & Parshvanath reverenced in Samvat 1548 and an artistic idol of Devi Padmavati is worth seeing.
(25) The Khadgasan idols of 3 Teerthankars are artistically carved on 3 feet 4 inch high stone slab.
(26) This is the main temple (Bada Mandir). This temple is famous for its miraculous & artistic idol of Bhagwan Parshvanath.
(27) The 4½ feet high idol of Bhagwan Mahaveer made in white stone and 10 other idols made in black stone are installed in this temple.
(28) The 1¼ feet high idol of Bhagwan Chandraprabhu is installed in this temple.
(29) The idol of Bhagwan Parshvanath is installed in this temple.
(30) The idol of Bhagwan Chandraprabhu is installed in this temple.
31st to 34th temple – the foot images are installed in these temples.
(35) The idol of Bhagwan Chandraprabhu is installed in this temple.
(36) The idol of Bhagwan Suparshvanath is installed in this temple.
(37) Ajitnath Mandir – the 2½ feet high white colored idol of Bhagwan Ajitnath which was reverenced in Samvat 1968.
(38) The 1¼ feet high idol of Bhagwan Adinath is installed here.
(39) One ancient Khadgasan idol is installed here.
(41) Sheetalnath Mandir – the 1 foot high white colored Padmasan idol is installed here and it was reverenced in Samvat 1548.
(42) It is ancient & artistic temple in which there are three altars. The magnificent idol of Bhagwan Adinath made in granite stone is installed on middle one altar, the 23 Teerthankars are carved in Padmasan along the three sides of Altar.
In left altar (Vedi) the Khadgasan idol is carved on 3 feet 6 inch high stone slab. The stone slab is ornamented. The 3 feet high Khadgasan idol of Bhagwan Parshvanath is installed on altar present on right hand side. This idol is fine specimen of Art. The Ardha Mandap is built in front of the temple. The idols are carved on pillars & the bells are also carved on them. The magnificent lotus flower is created on the roof of the temple.
(43) It is Parshvanath Temple.
(44) It is Chandraprabhu Temple.
(45) It is Adinath Temple.
(46) It is Chandraprabhu Temple.
(47) It is Adinath Temple.
(48) It is constructed in basement and 6 feet 10 inch high Khadgasan idol of Bhagwan Shantinath and Kunthunath are installed here.
(49) This is present above basement and in this Padmasan idol of Bhagwan Parshvanath & 23 idols of other Teerthankars are carved on white colored stone slab.
(50) Nandishwar Jinalaya is constructed in this temple.
(51) It is Sambhavnath Temple.
(52) It is Chandraprabhu Temple and white colored Padmasan idol is installed in this Temple; it is 1 foot in height.
Dharmashala & Jain Temple are situated in laps of mountain. The ‘Mahadvar’ & huge column of dignity is seen when one enters inside Teerth Kshetra. The idols of Bhagwan Adinath, Bhagwan Mahaveer, Bhagwan Parshvanath are installed in this temple. The one assembly hall is built in front of the temple.
Natural Scenerio :
The Muktagiri Kshetra is situated in laps of mountains of Satpura Mountain Range. These mountains are clad with beautiful natural greenery, falling rivers & waterfalls. The environment & sight is breath taking & eye catching.
-------------------------------
No comments:
Post a Comment