ஸ்ரீ மஹாவீரர் ஜினாலயம்
Sri Mahaveerar Jinalaya
It lies on the google map with coordination of (20.04883, 73.80663)
கஜபந்தா விலிருந்து 6 கி.மீ. தொலைவில் மஸ்ருல் (பஞ்சவடி) எனும்
கிராமத்தில் சமவசரண மந்திர் என்னும் ஸ்ரீ மஹாவிரர் திகம்பர் ஜைன் மந்திர் புதிய பொலிவுடன்
காட்சி யளிக்கிறது. மூல நாயகராக பகவான் மஹாவீரர்
அர்த்த பத்மாசன நிலையில் அமர்ந்து அருள் பாலிக்கிறார். 2 அடி உயர அச்சலவைக் கல் சிலையை
தவிர பல ஜினர் சிலைகளும், சிறிய உலோகச்சிலைகளும் உள்ளன.
முன் வாயிலுக்கு எதிரில் 20 அடி உயர சலவைக்கல் மானஸ்தம்பம்
நிற்கிறது. அதன் இடது, வலது புறம் 24 தீர்த்தங்கரர் சிலைகள் சில நின்ற நிலையிலும்,
சில தேவமாடம் போன்ற விமானத்திலும் அமர்த்தப்பட்டு வரவேற்கின்றன.
மேல் தளத்தில் மூல கோபுரம் 3 அடுக்கின் கீழ் ஸ்ரீபார்ஸ்வ ஜினரின் சன்னதியும், நாற்திசைகளிலும்
அடுக்கான மாடங்களில் ஜினர் சிலைகளும் அலங்கரிக்கின்றன. அதன் எதிரில் கைப்பிடிச் சுவருக்கு அருகில் தீர்த்தங்கரர்
பாதங்கள் விமானத்துடன் அமைத்துள்ளனர்.
-------------
Masrul village is 6 km from Gajpantha. Here is
beautiful jain temple name Samvsharan jain temple.
Main idol of this temple is Lord Mahaveer of 2 feet
height in suhasan posture is the Mool nayak of the kshetra. Except this idol
there are more metal idols. On this temple there are marble standing posture
with viman and sitting 24 thirthankars in small gallery in the front of the
temple with a 20 ft Manasthamp at the centre.
Many art pictures of jain stories are framed with
glass. The roof and surrounding walls of the ground floor lined by coloured
glass piece oblique work.
On the top of the garpagriha a Storied conical shape viman
with jinar idols in gallery and a shrine room of Shri Parswanath at roof level.
24 Jinar foot print with viman are decorated on both
side of the parapet wall.
**********************
அஜ்ஜினாலயத்திற்கு எதிரில் 300 மீட்டர் தொலைவில் திருப்பணமூரை சார்ந்த பவ்யர் முனி தீக்ஷை ஏற்று சுதர்மசாகரராக தமது அந்திம காலத்தில் வாழ்ந்த ஆசிரமும், நிஷாதி மண்டபமும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
On toward opposite side of the road about 300 meter
distance a Ashram is there. Jain saint Muni Sudarmasagar, belongs to Thirupanamur, Tamil Nadu has lead
his last life there.
After attaing the last stage of life, through
Sallekhana, A Nishathi mandap also built on memory of the sacred saint.
என் இளமைக்காலத்து நினைவலைகளை எழுப்பி விட்டீர்கள். என் தந்தை இக்கிராமத்து ஆசிரியராகப் பணியாற்றிய போது நண்பர்களாக இருந்தவர்களில் பார்ச வநாதன் என்ற பெயரில் சுதர்ம சாகர் குடும்ப நண்பர் போன்று பழகியவர். நன்றி.
ReplyDelete