Tuesday, July 29, 2014

DEEPANGUDI - தீபங்குடி


Shri ADINATHAR JAIN TEMPLE  -  ஸ்ரீ ஆதிநாதர் ஜினாலயம் 



Location map


DEEPANGUDI lies on the map in the coordination of (10.8298, 79.55805) ie put the latitude, Longitude on the search box

Map for Jain pilgrimage centres:   Click    DEEPANGUDI on the list.
(Tamil nadu / Kerala)
(Not fully updated) 

சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் :  கிளிக் செய்யவும் 
(தமிழ்நாடு / கேரளா )

Route:

Chennai → Kumbakonam → Arasavanangadu → Deepangudi = 305 kms.

Puduchery → Cuddalore → Vadalore → Kumbakonam → Deepangudi = 163 kms

Trichy →Thanjavur → Needamangalam → Engan →Deepangudi = 114 kms

Madurai → Thanjavur → Needamangalam → Engan →Deepangudi  = 257 kms


செல் வழி :  


சென்னை  →  கும்பகோணம்  → அரசவனங்காடு   →  தீபங்குடி    =  305 கி.மீ. 

புதுச்சேரி → கடலூர்  → வடலூர்   →   கும்பகோணம்  → அரசவனங்காடு   →  தீபங்குடி  =  163கி.மீ.

திருச்சி → தஞ்சாவூர்  → நீடாமங்கலம்  →   என்கண்    → தீபங்குடி  =  114 கி.மீ.

மதுரை → திருச்சி → தஞ்சாவூர்  → நீடாமங்கலம்  →   என்கண்    → தீபங்குடி  =  257 கி.மீ..





ஓம் ஹ்ரீம் ஸ்ரீ விருஷப தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ
அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா

ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து அயோத்தியா நகரத்து இக்ஷூவாகு வம்சத்து நாபி மஹாராஜாவிற்கும், மருதேவி க்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும், பொன் வண்ணரும் 500 வில் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 84 லக்ஷ்ம் பூர்வம் ஆயுள் உடையவரும், விருஷப லாஞ்சனத்தை உடையவரும், கோமுக யக்ஷ்ன், சக்ரேஸ்வரி யக்ஷி யர்களால் சேவிக்கப்பட்டவரும் விருஷப சேனர் முதலிய 84 கணதர பரமேட்டிகளை உடையவரும் 14 நாட்கள் உபவாசத்துடன் பல்லியங்காசனமாக இருந்து கைலாசகிரியில் மாக மாத கிருஷ்ண சதுர்தசியில் ஆயிரம் முனிவர்களுடன் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீவிருஷப தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!








Deepangudi Jain temple: One of the ancient jain temple, style of 11th Century Dravidian architecture , of medium layout. Main deity Sri Adhinathar is called as “Deepanayagaswamy” , so the village is called as Deepangudi. Sons of Sri Rama, hero of epic Ramayana, Shri Lavan and Shri kusalavan were worshipped the Lord Adinathar of this temple mentioned in a lyric.

Sri Jayamkondar, a tamil Jain poet, written the Kalingathubarani poem, is belongs to this village. His highness Kundavai, the sister of Chola Emperor “Rajarajacholan” worshipped the Lord and gave offerings.  



Recently it is totally renovated by the local habitants and get a beautiful look. Daily two times Nithayapooja is going on. Apart from all Jain festivals, Nalgnanavizha, Audi festivals are celebrated every year.
Now it is under the control of tamilnadu Government.


contact No. Mr. Seethalaprasad jain - +91 9698456887



சிறிய செங்கற்களால் (சித்துக்கல்) கட்டப்பட்ட இப்புராதண ஜிநாலயம் 11 ம் நூற்றாண்டைச் சார்ந்த திராவிடக் கலையினைச் சார்ந்தது. மூலவரான ஸ்ரீஆதிநாதரை ஸ்ரீதீபநாயக ஸ்வாமி என அழைக்கப் பட்டு வந்ததனால் அக்கிராமத்தை தீபங்குடி என பெயரிப்பட்டுள்ளனர். 

ஸ்ரீராமரின் புதல்வர்களான லவன் மற்றும் குசலவனால் வணங்கப்பட்டதாக போற்றிப் பாடப்பட்ட ஸ்தலமாகும். கலிங்கத்துப் பரணி பாடிய சமண புலவர் ஸ்ரீஜெயம் கொணடனார் பிறந்து வாழ்ந்ததற்கான சாற்றுகள் உள்ளன. 

மேலும் மன்னர் ராஜராஜசோழனின் சகோதரியார் ஸ்ரீகுந்தவை நாச்சியார் அவர்களால் வணங்கப்பட்டு. மானியங்களும் வழங்கப்பட்ட தாக கல்வெட்டு உள்ளது.


சமிபத்தில் தீபங்குடி வாழ் சமணக் குடும்பத்தினரால் முழுவதுமாக புதிப்பிக்கப் பட்டு புதிய பொலிவுடன் காணப்படுகிறது.  தினமும் இருவேளை நித்திய பூஜையுடன், ஆண்டு தோறும் முக்கிய ஜைன பண்டிகைகளும், நல்ஞான விழா மற்றும் ஆடித் திருவிழாவும் விமரிசையாக கொண்டாடப் படுகிறது. 

தொடர்பு எண் :  திரு. சீதள பிரசாத் -- +91 9698456887




SEPARATE  BRAHMADEVAR TEMPLE  -  ஸ்ரீ பிரம்மதேவர் தனி ஆலயம் 

(4 k.m.s from Deepangudi Jain temple)



2 comments:

  1. சமணத்திருத்தலங்களைப் பற்றித் தெரிந்து கொள்ளத் தாங்கள் அளித்துள்ள செய்திகளும் புகைப்படங்களும் மிகவும் பயனுடையன.வாழ்த்துக்கள்.
    கி.நாச்சிமுத்து

    ReplyDelete