Monday, July 21, 2014

Myladipara -- மயிலாடிபாறை

Shri CHANDRANATHA GIRI KSHETRAM   --  ஸ்ரீ சந்திரநாத கிரி க்ஷேத்ரம் 



Location Map : click here

Map for Jain pilgrimage centres:   Click    MYLADIPARA on the list.
(Tamil nadu / Kerala)
(Not fully updated) 

சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் :  கிளிக் செய்யவும் 
(தமிழ்நாடு / கேரளா )


ROUTE:    for  Kalpetta head quarter of  Wayanad

Chennai → vellore→ krishnagiri→ Bangalore → Mysore→ Nanjangud → Gundalurpet → Kalpetta = 620 kms.

Puduchery → Salem → Chamarajnagar → Gundalurpet → Kalpetta  = 516 kms

Trichy → Karur → Erode → Gundalurpet → Kalpetta = 401 kms

Trichy → karur → Coimbatore → Palakkad → Manjeri → Tamaraserry → Kalpetta = 418 kms

Madurai → Dindigal → Udumalpet → Palakkad→ Manjeri → Tamaraserry → Kalpetta = 400 kms

Then 

Kalpetta - Kambalakkad - Padinjarethara Rd - Myladipara = 19 kms



செல் வழி :  கல்பெட்டா, ( வயநாடு மாவட்ட தலைநகர்)


சென்னை  →  வேலூர்  → கிருஷ்ணகிரி → பெங்களுர் → மைசூர் → நஞ்சங்கூடு → குண்டளூர் பேட்டை → கல்பெட்டா  =  620 கி.மீ. 

புதுச்சேரி → சேலம் → சாம்ராஜ் நகர் → குண்டளூர் பேட்டை → கல்பெட்டா  =  516 கி.மீ.

திருச்சி  → கரூர்  → ஈரோடு → குண்டளூர் பேட்டை → கல்பெட்டா  =  401 கி.மீ.

திருச்சி → கரூர் → கோயம்புத்தூர் → பாலக்காடு → மஞ்சேரி → தாமர சேரி → கல்பெட்டா = 418 கி.மீ.

மதுரை → திண்டுக்கல் → உடுமலைப்பேட்டை → பாலக்காடு →  மஞ்சேரி → தாமர சேரி → கல்பெட்டா = 400 கி.மீ.



கல்பேட்டா  -    கம்பலக்காடு - படிஞ்சறதாரா  சாலை  = 19  கி . மீ .


Distance from temple to temple





ஓம் ஹ்ரீம் ஸ்ரீ சந்திரபிரப தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ
அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா


ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து சந்திரபுர நகரத்து இக்ஷ்வாகு வம்சத்து மஹாசேன மஹாராஜாவிற்கும், லக்ஷ்மணை மஹாதேவிக்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும், வெள்ளை வண்ணரும் 150 வில் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 10 லக்ஷம் பூர்வம் ஆயுள் உடையவரும், சந்திரன் லாஞ்சனத்தை உடையவரும், சாம யக்ஷ்ன், ஜ்வாலாமாலினி யக்ஷியர்களால் சேவிக்கப்பட்டவரும் உத்திராதி முதலிய 99  கணதர பரமேட்டிகளை உடையவரும் ஒரு மாதம் ப்ரதிமா யோகம் கொண்டவரும் சம்மேத கிரியில் பால்குண சுக்ல சப்தமி  திதியில் 2 கோடி 80 லக்ஷத்து 4 ஆயிரத்து 595 முனிவர்களுடன் லலித கூடத்தில் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீசந்திரபிரப தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!






This is the site of one of the ancient Jain temples in Wayanad.  It situates in the Kalpetta Bye Pass road of National Highway is passing along the side of Mayladipara ( Chandranath Giri) Hillock. The trekking path is not easy approach, bushes and dense plants are surrounded the way.

  This divine place has an unusual continuation of pilgrimage importance as well as  Panaromic scene beauty. A number of caves are situated behind rock,  Digamber Munis’ took shelter here since centuries. There was a huge idol of Shri Chandranath Thirthankar which was worshipped in early times. The idol was destroyed by miscreants and only remnants of it remain today and the broken idols are under the trust custody. A temple renovation committee was formed about 3 decades back.

 The present  Shri 1008Chandranatha athisaya Kshetra trust planned to develop the spot with Temple, Office, retiring room, Guest house, Preaching hall, library ,Museum, etc. This is the dream project of WAyanad Jain samaj. Every year the Moksha Kalyana day of Shri Chandraprabha Thirthankar is celebrated with special poojas conducted here by the Trust members in the presence of  all Jain peoples of  wayanad.

  The temple is  a living testimony of the cultural heritage of wayanad Jainism.

Contact No. 04936 204153.




இது வயநாட்டின் ஜைன ஆலயங்களில் மிகவும் தொன்மையானதும். முக்கியமானதுமான ஒரு ஸ்தலமாகும்.  கல்பெட்டா புறவழி சாலையில் மைலாடிப்பாறை என்ற சந்திரநாத கிரி யில் அமைந்துள்ள ஆலயமாகும். ஆனால் செல்லும் மலைப் பாதை  ஆங்காங்கே சற்று கடினமாகவும்,  புதர்கள் அடர்ந்தும் உள்ளது.

மிகவும் முக்கியமானது மட்டுமில்லாது அழகான தோற்றத்தையும் உடைய தெய்வீகமான ஸ்தலமாகும். பல குகைகள் நிறைந்த  இப்பாறையில் திகம்பர முனிவர்கள் வாழ்ந்துள்ளனர். ஆரம்ப காலங்களில்  ஸ்ரீசந்திரப்பிரப ஸ்வாமியின் மிகபெரிய கற்சிலையை நிறுவி வணங்கி வந்துள்ளனர். பின்னர் சில விஷமிகளால் சிதலமடைந்து காணப்பட்டது.  அதில் சில பகுதிகளை தற்போதைய  ஆலய நிர்வாகிகள் பாதுகாத்து வருகின்றனர் . தற்போதைய ஆலய நிர்வாகம்  முப்பது ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது.

அந்த இடத்தை மிகவும்  முக்கிய  யாத்ரீக  ஸ்தலமாக மாற்றும் முகமாக அழகிய ஆலயம், அலுவலகம், ஓய்வெடுக்கும் அறை .  பிரவசன கூடம், நூலகம் , அருங்காட்சியகம் போன்றவை நிறுவ திட்டமிட்டுள்ளனர். 

ஆண்டு தோறும்  ஸ்ரீ 1008 சந்திர நாத ஸ்வாமி மோட்ச கல்யாண தினத்தன்று விசேபூஜைகள் அலய நிர்வாகிகளால் அனைத்து மக்களின் முன்னிலையில்  நடைபெறுகிறது.
ஜிநாலயங்கள் அனைத்தும் வயநாட்டின் கலாச்சார பாரம்பரியத்தினை பறைசாட்டும் முகமாக அமைந்துள்ளன.

தொடர்பு எண்:  04936 204153.

No comments:

Post a Comment