Thursday, July 24, 2014

SEENAPURAM -- சீனாபுரம்


Shri ADHINATHAR JAIN TEMPLE  --  ஸ்ரீ ஆதிநாதர் ஜினாலயம் 



Location map: 

SEENAPURAM lies on the Google map in the coordination of (11.30328, 77.51839) ie put the latitude, Longitude on the search box 


Map for Jain pilgrimage centres:   Click    SEENAPURAM on the list.
(Tamil nadu / Kerala)
(Not fully updated) 

சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் :  கிளிக் செய்யவும் 
(தமிழ்நாடு / கேரளா )

ROUTE:

Chennai → uludurpet → attur → erode → Seenapuram = 422 kms.

Puduchery → uludurpet → attur → erode → Seenapuram  =304 kms

Trichy → Karur → kodumudi → Perundurai Seenapuram = 158 kms

Madurai → Dindigal → Dharapuram → k.chettipalayam Seenapuram = 198 kms


செல் வழி :  


சென்னை  →  உளுந்தூர்பேட்டை → ஆத்தூர்  →  ஈரோடு  →சீனாபுரம்     =  422 கி.மீ. 

புதுச்சேரி → உளுந்தூர்பேட்டை → ஆத்தூர்  →  ஈரோடு சீனாபுரம் =  304கி.மீ.

திருச்சி → கரூர் → கொடுமுடி → பெருந்துறை  → சீனாபுரம்   = 158 கி.மீ.

மதுரை → திண்டுக்கல் → தாராபுரம் → கே.செட்டிபாளையம்  → சீனாபுரம்    = 1 98 கி.மீ.







ஓம் ஹ்ரீம் ஸ்ரீ விருஷப தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ
அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா

ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து அயோத்தியா நகரத்து இக்ஷூவாகு வம்சத்து நாபி மஹாராஜாவிற்கும், மருதேவி க்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும், பொன் வண்ணரும் 500 வில் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 84 லக்ஷ்ம் பூர்வம் ஆயுள் உடையவரும், விருஷப லாஞ்சனத்தை உடையவரும், கோமுக யக்ஷ்ன், சக்ரேஸ்வரி யக்ஷி யர்களால் சேவிக்கப்பட்டவரும் விருஷப சேனர் முதலிய 84 கணதர பரமேட்டிகளை உடையவரும் 14 நாட்கள் உபவாசத்துடன் பல்லியங்காசனமாக இருந்து கைலாசகிரியில் மாக மாத கிருஷ்ண சதுர்தசியில் ஆயிரம் முனிவர்களுடன் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீவிருஷப தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!








 

Between Perundurai and Thingalur road, 2 kms apart from the Higher secondary school , the Seenapuram Jain temple is situated on the rightside.  A sign board on the left side of the road which refers as Shri Bavanandhi saint was worshipped the temple
.
After the work on the grammer of the Tamil language wrote by Tholkappiar in the form noorpa ie short formulaic composition,  Bhavanadhi was the successor of the same work. His birth and living place was sanagapuram called as Jinapuram in ancient days, but now take as Seenapuram. He pray the God of Shri Adhinathar temple, seenapuram is cited in the book of Kongu Mandala Sadagam.


Now the Jain temple is administrated by Hindu Religious and Endowment board.( Near by Devar family taking care of the temple)

**********

பெருந்துறை யிலிருந்து திங்களுர் செல்லும் வழியில் மேல்நிலைப்பள்ளியிலிருந்து 2 கி.மீ. தொலைவில் வலது புறம் அமைந்துள்ளது. ஸ்ரீ ஆதிநாதரை மூலவராக கொண்ட இந்த மிகச் சிறிய ஜிநாலயத்தின் எதிரே ஸ்ரீபவணந்தி முனிவரால் வழிபாடு செய்யப்பட்ட செய்தி பலகை உள்ளது.

தொல்காப்பியத்திற்கு பின் நன்னூல் என்னும் மிகச் சிறந்த இலக்கண நூலை இயற்றி அருளிய பவணந்தி முனிவர் பிறந்து வாழந்த சனகாபுரத்தை அக்கால மக்கள் ஜினபுரம் என அழைத்திருந்தனர். பிற்காலத்தில் சீனபுரம் என மருவி வழங்கப்பட்டுள்ளது.  அவர் போற்றி பாடிய ஸ்ரீஆதிநாதர் திருக் கோவில் இன்றும் வழிபாட்டுக் கென உள்ளது. இவ் வரலாற்றை கொங்கு மண்டல சதகம் போற்றுகிறது.

தற்போது இந்து அறநிலைய துறையினரால் நிர்வகிக்கப் படுகின்றது.







2 comments:

  1. Thank you. If any contact number is available please post it brother.

    ReplyDelete
    Replies
    1. welcome. Sorry i haven't madam, Because I visit the place in the year 2014.

      Delete