Tuesday, July 15, 2014

PUTHANANGADI - புத்தானங்காடி


Shri CHANDRNATHASWAMI JAIN TEMPLE - ஸ்ரீ சந்திரநாதஸ்வாமி  ஜினாலயம் 



 TEMPLE VIEW -- ஆலய தோற்றம் 


Location map : click here


  PUTHANANGADI  Navigator GPS coordinates is (11.751948, 76.095293)


சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் :  கிளிக் செய்யவும் 
(தமிழ்நாடு / கேரளா )



ROUTE:    for  Kalpetta head quarter of  Wayanad

Chennai → vellore→ krishnagiri→ Bangalore → Mysore→ Nanjangud → Gundalurpet → Kalpetta = 620 kms.

Puduchery → Salem → Chamarajnagar → Gundalurpet → Kalpetta  = 516 kms

Trichy → Karur → Erode → Gundalurpet → Kalpetta = 401 kms

Trichy → karur → Coimbatore → Palakkad → Manjeri → Tamaraserry → Kalpetta = 418 kms

Madurai → Dindigal → Udumalpet → Palakkad→ Manjeri → Tamaraserry → Kalpetta = 400 kms

Then 

Kalpetta - panamaram/ road - Puthanangadi  =  28 kms.


செல் வழி :  கல்பெட்டா, ( வயநாடு மாவட்ட தலைநகர்)


சென்னை  →  வேலூர்  → கிருஷ்ணகிரி → பெங்களுர் → மைசூர் → நஞ்சங்கூடு → குண்டளூர் பேட்டை → கல்பெட்டா  =  620 கி.மீ. 

புதுச்சேரி → சேலம் → சாம்ராஜ் நகர் → குண்டளூர் பேட்டை → கல்பெட்டா  =  516 கி.மீ.

திருச்சி  → கரூர்  → ஈரோடு → குண்டளூர் பேட்டை → கல்பெட்டா  =  401 கி.மீ.

திருச்சி → கரூர் → கோயம்புத்தூர் → பாலக்காடு → மஞ்சேரி → தாமர சேரி → கல்பெட்டா = 418 கி.மீ.

மதுரை → திண்டுக்கல் → உடுமலைப்பேட்டை → பாலக்காடு →  மஞ்சேரி → தாமர சேரி → கல்பெட்டா = 400 கி.மீ.


கல்பேட்டா  - பனமரம்  சாலை - புத்தனங்காடி    =  28 கி . மீ .


Distance from temple to temple



Main deity  -  மூலவர் 


ஓம் ஹ்ரீம் ஸ்ரீ சந்திரபிரப தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ
அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா



ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து சந்திரபுர நகரத்து இக்ஷ்வாகு வம்சத்து மஹாசேன மஹாராஜாவிற்கும், லக்ஷ்மணை மஹாதேவிக்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும், வெள்ளை வண்ணரும் 150 வில் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 10 லக்ஷம் பூர்வம் ஆயுள் உடையவரும், சந்திரன் லாஞ்சனத்தை உடையவரும், சாம யக்ஷ்ன், ஜ்வாலாமாலினி யக்ஷியர்களால் சேவிக்கப்பட்டவரும் உத்திராதி முதலிய 99  கணதர பரமேட்டிகளை உடையவரும் ஒரு மாதம் ப்ரதிமா யோகம் கொண்டவரும் சம்மேத கிரியில் பால்குண சுக்ல சப்தமி  திதியில் 2 கோடி 80 லக்ஷத்து 4 ஆயிரத்து 595 முனிவர்களுடன் லலித கூடத்தில் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீசந்திரபிரப தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!



corridor - திருச்சுற்று 









This is very ancient  Jain temple which according to  archaeological findings dates back to the 8th Century A.D. A number of old and dilapidated ruins of other Jain temples are found around this temple in the Hoysala dynasty period.  This temple is situated on the Panamaram- Nadavayal road about 5 kms from  Panamaram Town.  The place was originally known as a trade centre of Gems and Pearls. So it was called as Muthanangadi then becomes Puthanangadi. In 1950 a trust was formed to develop this  temple under the leadership of Shri Ramachandra Gowder of Neervaram who renovated the temple.  Later new idol was installed and Panchakalyan was conducted in 1958.

After that Chandrasala also built.  A beautiful Manasthamba was erected in 2005 and  with four Shri Chandranathasamy statues are built in four direction. A New 11 feet Bahubali statue was built with shelter in the year 2008.

The main deity is Shri Chandrapraba nathar.

  Though it is situated in Kerala. All the idols of God, Goddess, demi-gods, Symbols, layout  and way of rituals and customs are the replica of Karnataka. A separate priest is appointed for the Poojas and rituals. All the Jain temples are in the same layout in  Wayanad area, ie  chandrasala, Manasthampa, altar, Front mantap, Semi mandap, sanctum sanctorum with top tower and circuitous corridor with Naga, Kshetrabalagar shrine were there.

 These temples are the living testimony of the cultural heritage of Wayanad.

Contact No. 04936 220740.


*****


இந்திய தொல்பொருள் துறையினரின் கூற்றின் படி இவ்வாலயம் 8ம் நூற்றாண்டைச் சார்ந்துள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. இதன்  அருகில் பல சிதிலமடைந்த ஆலங்களின் இடிபாடுகளைக் கொண்டும், அவை ஹாய்சளர் காலத்தை ச் சார்ந்துள்ளதாகவும் கண்டுள்ளனர். பனமரம் - நடாவயல் சாலையில் பனமரம் நகரத்திலிருந்து 5 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. முற்காலத்தில் இந்த இடத்தில் முத்து மற்றும் மணிகள் வியாபாரம் செய்யப்பட்ட  இடமாக  இருந்துள்ளது. அதனால் முத்தங்காடி என்றும் பின்னர் புத்தங்காடி எனவும் மருவி வழங்கி வரப்பட்டுள்ளது. 1950 ம் ஆண்டில் நீர்வாரம் ஸ்ரீராமச்சந்திர கவுடர் அவர்கள் தலைமையில் ஒரு தர்மகர்த்தா குழு ஏற்படுத்தப்பட்டு புதுப்பிக்கப் பட்டு உள்ளது.  பின்னர் 1958ல் புதிய மூலவர் நிர்மானிக்கப்பட்டு பஞ்சகல்யாணமும் நடந்தேறியுள்ளது.

பிற்காலத்தில் சந்திரசாலையும் கட்டியுள்ளனர். 2005 ல் புதிய மனத்தூய்மைக் கம்பமும் அதன் உச்சியில் ஸ்ரீசந்திரநாத ஸ்வாமியின் சதுர்முக பிம்பமும் அழகாக அமைத்துள்ளனர். 2008 ம் ஆண்டு  11 அடி உயரமுள்ள ஸ்ரீபாகுபலி சலவைக்கல் சிலையும் ஆலயத்திற்கு முன்னர் இடப்பக்கம் நிர்மாணித்துள்ளர் .

ஸ்ரீசந்திரப்பிரப நாதரை மூலவரை கருவறையில் அமைத்துள்ளனர்.

ஆலயத்தின் அமைப்பு , மூலவர் நிர்மாணம், தேவதைகளின் சன்னதிகள், உலோக பிம்பங்கள் மற்றும் பூஜை பொருட்கள், பூஜை முறைகள், ஆலய விழாக்கள் அனைத்தும்  கர்நாடகா ஜைன சமூத்தின் வழி முறையிலேயே அமைந்துள்ளது. அனைத்து ஜினாலயங்களும் சந்திர சாலை, மானஸ்தம்பம், பலிபீடம், மகாமண்டபம், அர்த்த மண்டபம், கருவறை, ஆலய திருச்சுற்றில் நாகம், க்ஷேத்ர பாலகர் சன்னதி போன்றவைகளுடன் பாங்காக அமைத்துள்ளனர், தினமும் பால், கந்த அபிஷேகம், மற்றும் நெய்வேத்தியத்துடன் இரு வேளை பூஜைகள் வளமை போல் நடைபெற்று வருகின்றன.

ஜிநாலயங்கள் அனைத்தும் வயநாட்டின் கலாச்சார பாரம்பரியத்தினை பறைசாட்டும் முகமாக அமைந்துள்ளன.


தொடர்பு எண்: 04936 220740











No comments:

Post a Comment