Shri ANANTHANATHA SWAMY KSHETHRAM - ஸ்ரீ அனந்தநாத ஸ்வாமிஜினாலயம்
LOCATION MAP : Click here
Map for Jain pilgrimage centres: Click ANANTHAKRISHNAPURAM on the list.
(Tamil nadu / Kerala)
(Not fully updated)
சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் : கிளிக் செய்யவும்
(தமிழ்நாடு / கேரளா )
ROUTE: for Kalpetta head quarter of Wayanad
Puduchery → Salem → Chamarajnagar → Gundalurpet → Kalpetta = 516 kms
Trichy → Karur → Erode → Gundalurpet → Kalpetta = 401 kms
Trichy → karur → Coimbatore → Palakkad → Manjeri → Tamaraserry → Kalpetta = 418 kms
Madurai → Dindigal → Udumalpet → Palakkad→ Manjeri → Tamaraserry → Kalpetta = 400 kms
Then
Kalpetta - Kainatty - Puliyarmala = 13 kms.
செல் வழி : கல்பெட்டா, ( வயநாடு மாவட்ட தலைநகர்)
சென்னை → வேலூர் → கிருஷ்ணகிரி → பெங்களுர் → மைசூர் → நஞ்சங்கூடு → குண்டளூர் பேட்டை → கல்பெட்டா = 620 கி.மீ.
புதுச்சேரி → சேலம் → சாம்ராஜ் நகர் → குண்டளூர் பேட்டை → கல்பெட்டா = 516 கி.மீ.
திருச்சி → கரூர் → ஈரோடு → குண்டளூர் பேட்டை → கல்பெட்டா = 401 கி.மீ.
திருச்சி → கரூர் → கோயம்புத்தூர் → பாலக்காடு → மஞ்சேரி → தாமர சேரி → கல்பெட்டா = 418 கி.மீ.
மதுரை → திண்டுக்கல் → உடுமலைப்பேட்டை → பாலக்காடு → மஞ்சேரி → தாமர சேரி → கல்பெட்டா = 400 கி.மீ.
சென்னை → வேலூர் → கிருஷ்ணகிரி → பெங்களுர் → மைசூர் → நஞ்சங்கூடு → குண்டளூர் பேட்டை → கல்பெட்டா = 620 கி.மீ.
புதுச்சேரி → சேலம் → சாம்ராஜ் நகர் → குண்டளூர் பேட்டை → கல்பெட்டா = 516 கி.மீ.
திருச்சி → கரூர் → ஈரோடு → குண்டளூர் பேட்டை → கல்பெட்டா = 401 கி.மீ.
திருச்சி → கரூர் → கோயம்புத்தூர் → பாலக்காடு → மஞ்சேரி → தாமர சேரி → கல்பெட்டா = 418 கி.மீ.
மதுரை → திண்டுக்கல் → உடுமலைப்பேட்டை → பாலக்காடு → மஞ்சேரி → தாமர சேரி → கல்பெட்டா = 400 கி.மீ.
கல்பெட்டா → கைநாட்டி → புளியார்மலா = 13 கி .மீ .
Inside temple no camera zone. - ஜினாலயம் உள்ளே புகைப்பட கருவி அனுமதி இல்லை
Distance from temple to temple
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ விருஷப தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ
அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா
ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத
க்ஷேத்திரத்து அயோத்தியா நகரத்து இக்ஷ்வாகு வம்சத்து சிம்மசேன மஹாராஜாவிற்கும், ஜயஸ்யாமா
மஹாதேவிக்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும், பொன் வண்ணரும் 50
வில் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 30 லக்ஷம் வருடம் ஆயுள்
உடையவரும், வல்லூகம் (கரடி) லாஞ்சனத்தை உடையவரும், பாதாள யக்ஷ்ன், அனந்தமதி
யக்ஷியர்களால் சேவிக்கப்பட்டவரும் ஜெயராதி முதலிய 50 கணதர பரமேட்டிகளை உடையவரும் ஒரு மாதம் ப்ரதிமா
யோகம் கொண்டவரும் சம்மேத கிரியில் சைத்ர அமாவாசை திதியில் 96 கோடா கோடி 70 லட்சத்து 70 ஆயிரத்து
700 முனிவர்களுடன் ஸ்வயம்பிரப கூடத்தில் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீஅனந்த
தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து!
நமோஸ்து! நமோஸ்து!
The temple is situated at
Ananthakrishnapuram (puliyarmalai) on the Kalpetta-Mananthavady road about 5
kms from Kalpetta town( Wayanad district headquarter). This is one of the main temples of Wayanad.
It was originally in Kalpavathy or old Kalpetta, around 1000 years ago. It was
originally managed by hereditary trustee. Then it was managed by a formed
trustees. Then the temple was shifted to this
place in 1933 after which was in dilapidated condition. Under the leader
ship of Late shri Maniyankode Krishna
Gowder.
There is a pool and a cave near to the temple. Mahatma Gandhi rested
here in his visit to Wayanad in 1934. In memory of Gandhi a museum is
functioning adjacent to the temple. There
is a Kalyana Mandapam naming Krishna Gowder Hall near to the temple.
Shri Ananthanatha swamy is Main deity.
Though it is situated in Kerala. All the
idols of God, Goddess, demi-gods, Symbols, layout and way of rituals and
customs are the replica of Karnataka. A separate priest is appointed for the
Poojas and rituals. All the Jain temples are in the same layout in Wayanad area, ie chandrasala, Manasthampa, altar, Front
mantap, Semi mandap, sanctum sanctorum with top tower and circuitous corridor
with Naga, Kshetrabalagar shrine were there.
These temples are the living testimony of the cultural heritage of Wayanad.
Contact No. 04936 202089.
வயநாடு மாவட்டத்தின் தலைநகரான
கல்பெட்டாவிலிருந்து மானந்தவாடி சாலையில் 5 கி.மீ. தொலைவில் அனந்தகிருஷ்ணபுரம் (புளியார்மலா) என்ற இடத்தில் இச் ஜிநாலயம் அமைந்துள்ளது. வயநாட்டின்
முக்கிய ஜிநாலயத்தில் இது ஒன்றாகும். ஒரு ஆயிரம்
ஆண்டுகளுக்கு முன் அவ்விடம் கல்பாவதி என அழைக்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் பரம்பரை தர்மகர்த்தாக்களால்
பராமரிக்கப்பட்ட இந்த ஜிநாலயம் பின்னர் அவர்களால் நியமிக்கப்பட்ட தர்மகர்த்தா குழுவினரால்
நடத்தப்பட்டது. சில காலங்களுக்கு பின்னர் திருவாளர் மனியன்கோடு கிருஷ்ணன் கெளடரால்
பழைய ஜிநாலயம் மிகவும் சிதைந்த நிலையில் இருந்ததால்
தற்போதைய இடத்தில் புதியதாக நிர்மாணிக்கப்பட்டது.
ஒரு குளமும், ஒரு குகையும் அருகாமையில்
உள்ளன. 1934 ம் ஆண்டு மகாத்மா காந்தி அவர்கள் அந்நகருக்கு விஜயம் செய்த போது இந்த ஜிநாயத்திற்கு அருகில் தங்கியுள்ளார்,
அதன் நினைவாக அங்கு ஒரு அருங்காட்சியகம் உருவாக்கியுள்ளனர். கிருஷ்ண கவுடர் பெயரில் ஒரு திருமண கூடம் கட்டப்பட்டு பலருக்கும் பயனளிக்கிறது.
ஸ்ரீஅனந்தநாத ஸ்வாமியை மூலவராக
கொண்டது இந்த ஜிநாலயம்.
ஆலயத்தின் அமைப்பு , மூலவர்
நிர்மாணம், தேவதைகளின் சன்னதிகள், உலோக பிம்பங்கள் மற்றும் பூஜை பொருட்கள், பூஜை முறைகள்,
ஆலய விழாக்கள் அனைத்தும் கர்நாடகா ஜைன சமூத்தின்
வழி முறையிலேயே அமைந்துள்ளது. அனைத்து ஜினாலயங்களும் சந்திர சாலை, மானஸ்தம்பம், பலிபீடம்,
மகாமண்டபம், அர்த்த மண்டபம், கருவறை, ஆலய திருச்சுற்றில் தரணேந்திரர்/நாகம், க்ஷேத்ர பாலகர் சன்னதி
போன்றவைகளுடன் பாங்காக அமைத்துள்ளனர், தினமும் பால், கந்த அபிஷேகம், மற்றும் நெய்வேத்தியத்துடன்
இரு வேளை பூஜைகள் வளமை போல் நடைபெற்று வருகின்றன.
ஜிநாலயங்கள் அனைத்தும் வயநாட்டின்
கலாச்சார பாரம்பரியத்தினை பறைசாட்டும் முகமாக அமைந்துள்ளன.
தொடர்பு எண்: 04936 202089
Good work Sir, any other temples in other districts of Kerala?
ReplyDeleteNo detail statistic on my hand, But more jains are living in Wayanad district. One ancient Jain temple in Jainmedu, Palakkad. Cochin had one. But so many traces in the kerala, specially in southern part.
ReplyDelete