Thursday, July 31, 2014

MANJAPATTU - மஞ்சப்பட்டு


Shri MALLINATHAR JAIN TEMPLE  --   ஸ்ரீ மல்லிநாதர் ஜினாலயம் 



Location map: Click here

Map for Jain pilgrimage centres:   Click    MANJAPATTU on the list.
(Tamil nadu / Kerala)
(Not fully updated) 

சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் :  கிளிக் செய்யவும் 
(தமிழ்நாடு / கேரளா )

Route:

Vandavasi →   Thellar  →   Desur →   Manjapattu = 30 k.m.

Tindivanam →  Thellar  →   Desur →   Manjapattu  = 42 k.m.

 Gingee →   Pennagar →   Kallapuliyur →   Manjapattu = 20 k.m.

Chetpet  →   kozhaplur →   kottupakkam →   Manjapattu = 26 k.m.


செல்வழி:

வந்தவாசி →   தெள்ளாறு →   தேசூர் →   மஞ்சப்பட்டு = 30 கி.மீ.

திண்டிவனம் →   தெள்ளாறு →   தேசூர் →  மஞ்சப்பட்டு = 42 கி.மீ.

செஞ்சி →   பென்னகர் →   கள்ளபுலியூர் →   மஞ்சப்பட்டு = 20 கி.மீ.

சேத்பட் →  கொழப்பலூர் →  காட்டுப்பாக்கம் → மஞ்சப்பட்டு = 26 கி.மீ.


 ஓம் ஹ்ரீம் ஸ்ரீ மல்லி தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ 
 அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா 

ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து மிதிலாபுர நகரத்து இக்ஷ்வாகு வம்சத்து கும்பன் மஹாராஜாவிற்கும், ப்ராஜாவதி மஹாதேவிக்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும், பொன் வண்ணரும் 25 வில் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 55 ஆயிரம் வருடம் ஆயுள் உடையவரும், கலசம் (கும்பம்) லாஞ்சனத்தை உடையவரும், குபேர யக்ஷ்ன், அபராஜிதா யக்ஷியர்களால் சேவிக்கப்பட்டவரும் விசாகராத் முதலிய 28  கணதர பரமேட்டிகளை உடையவரும் ஒரு மாதம் ப்ரதிமா யோகம் கொண்டவரும் சம்மேத கிரியில் பால்குண சுக்ல பஞ்சமி  திதியில் 96 கோடி முனிவர்களுடன் சம்பல கூடத்தில் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீமல்லி தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!






The east facing Jain temple of Manjappattu is in the renovation status. Several century aged Dravidian styled construction reveals the antiquity.

Shri Mallinatha swamy is fastened in the sanctum sanctorium.

The Jain temple has several five metal alloy idols. Also has Shri Padmavathy shrine, Navagraha cluster and altar. Daily pooja conducted twice and in the month of Thai a festival is celebrated every year.

The good hearted habitants of the village, took effort to renew the temple early.

contact No. Mr. D. Gunaseharan  -  +918012628635

*********


 ஸ்ரீ மல்லிநாதருக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஜிநாலயம் இக்கிராமத்தில் உள்ளது. அவ்வாலயம் அங்குள்ள சமண வழிக் குடும்பத்தினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது.  பல சீரமைப்புகளைக் கண்டதால் அவ்வாலயத்தின் தொன்மைக்கான ஆதாரங்கள் மறைக்கப்பட்டுள்ளது. 

கீழ்திசை நோக்கிய அவ்வாலயத்தின் நுழைவு வாயிலுடன் அதன் சுற்றுச் சுவர்கள் இணைக்கப்பட்டுள்ளன.  மேலும் திராவிட பாரம்பரிய கலைஅம்சங்களான கருப்பக் கிருஹம்,  அர்த்தமண்டபம், மகாமண்டபம், அதன் முன்புறம் முகமண்டபம், திறந்த திருச்சுற்று, பலிபீடம்  போன்றவற்றுடன் விளங்குகிறது. 

ஜிநாலய கர்ப்பக்கிருஹ வேதிகையில் ஸ்ரீ மல்லிநாதரின் முழுஉருவ கருங்கற் சிலை பீடம், பிரபை வட்டத்துடன் கட்காசன நிலையில் செதுக்கப்பட்டு ஆகம விதிப்படி நிறுவப்பட்டுள்ளது. அதன் மேற்புறம் துவிதள விமானத்துடன், ஒவ்வொரு தளத்தின் நாற்திசையிலும் தீர்த்தங்கரர் சிலைகளும், சிகர கலசங்களுடன் அமைக்கப் பட்டுள்ளன.

கர்ப்பக்கிருஹத்தின் அடுத்த பகுதியில் இருபுறமும் உள்ள மேடைகளில் முக்கிய தீர்த்தங்கரர்கள் பிரபைகளுடன், 24 தீர்த்தங்கரர் தொகுப்பு,  நவதேவதை, பஞ்சபரமேஷ்டிகள், மஹாமேரு, நந்தீஸ்வர  தீபம் மற்றும்  யக்ஷ, யக்ஷியர்கள் உருவ உலோகச் சிலைகள் அலங்கரிக்கின்றன. ஸ்ரீபிரம்ம தேவர் கற்சிலையும், பழைய மூலவரும், ஜினரின் கற்சிலை அமர்ந்த நிலையில் ஒன்றும் உள்ளன.

கிழக்கில்  உள்ள முகமண்டபத்தின்  மேல்தளத்தில்  சிறிய விமானம் போன்ற அமைப்பில்  ஸ்ரீமல்லிநாதரின்  சுதைச் சிற்பம் அழகாக காட்சி தருகிறது.

ஜிநாலய திருச்சுற்றில் ஸ்ரீபத்மாவதிக் கென சிற்றாலயமும் மற்றும் நவகிரஹ சன்னதியும் கொண்ட இவ்வாலயத்தில் பலிபீடமும்  உள்ளன. மேலும் ஒரு சிற்றாலயம் ஒன்றும் கட்டிய நிலையில் தனி பலிபீடத்துடன் உள்ளது.

தின பூஜையும் வழிபாடும் நடைபெறும் இவ்வாலயத்தில் தை திங்களில் திருவிழா எடுக்கின்றனர். நல்ல உபசரிப்புடன் வரவேற்கும் அவ்வூர் சமணர்கள் இந்த ஜினாலயத்தை புதுப்பிக்கும் முயற்சியில் தங்களை ஈடுபடுத்தியுள்ளனர்.

தொடர்பு எண்:   Mr. D .குணசேகரன் -  +918012628635

No comments:

Post a Comment