Monday, July 28, 2014

ONAMPAKKAM - ஓணம்பாக்கம்


ROCK  RELIEF  JAIN TEMPLE -- பாறை சிற்ப ஜினாலயம்  


Location map: 

ONAMPAKKAM lies on the Google map in the coordination of (12.38297,79.9663) ie put the latitude, Longitude on the search box


Map for Jain pilgrimage centres:   Click    ONAMPAKKAM on the list.
(Tamil nadu / Kerala)
(Not fully updated) 

சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் :  கிளிக் செய்யவும் 
(தமிழ்நாடு / கேரளா )


Route:

Chennai → Maduranthagam → Vennangupet road → Marvathur/cheyyur rd → Onampakkam = 98 kms.

Puduchery → Marakkanam → Chyyur → Onampakkam  = 67 kms

Trichy → Tindivanam → Melmaruvathur → cheyyur rd → Onampakkam = 250 kms

Vandavasi → Melmaruvathur → cheyyur rd → Onampakkam  = 44 kms



செல் வழி :  


சென்னை→மதுராந்தகம் → வெண்ணங்குபேட்டை → செய்யூர் சாலை → ஓணம்பாக்கம்  =  98 கி.மீ. 

புதுச்சேரி → மரக்காணம்  → செய்யூர்   →  ஓணம்பாக்கம் =  67 கி.மீ.

திருச்சி → திண்டிவனம்  → மேல்மருவத்தூர்   →  செய்யூர் சாலை   → ஓணம்பாக்கம்  = 250 கி.மீ.

வந்தவாசி  → மேல்மருவத்தூர்   →  செய்யூர் சாலை   → ஓணம்பாக்கம்  = 44 கி.மீ





ஓம் ஹ்ரீம் ஸ்ரீ விருஷப தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ
அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா

ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து அயோத்தியா நகரத்து இக்ஷூவாகு வம்சத்து நாபி மஹாராஜாவிற்கும், மருதேவி க்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும், பொன் வண்ணரும் 500 வில் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 84 லக்ஷ்ம் பூர்வம் ஆயுள் உடையவரும், விருஷப லாஞ்சனத்தை உடையவரும், கோமுக யக்ஷ்ன், சக்ரேஸ்வரி யக்ஷி யர்களால் சேவிக்கப்பட்டவரும் விருஷப சேனர் முதலிய 84 கணதர பரமேட்டிகளை உடையவரும் 14 நாட்கள் உபவாசத்துடன் பல்லியங் காசனமாக இருந்து கைலாசகிரியில் மாக மாத கிருஷ்ண சதுர்தசியில் ஆயிரம் முனிவர் களுடன் பரி நிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீவிருஷப தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!

ஓம் ஹ்ரீம் ஸ்ரீ பார்ஸ்வநாத தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ
அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா

ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து காசி நாட்டு வாரணாசி நகரத்து உக்ர வம்சத்து விஸ்வசேன மஹாராஜாவிற்கும், பிராமி மஹாதேவி க்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும், கரும் பச்சை வண்ணரும் 9 முழம் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 100 வருடம் ஆயுள் உடையவரும், ஸர்ப லாஞ்சனத்தை உடையவரும், தரணேந்திர யக்ஷ்ன், பத்மாவதி யக்ஷியர்களால் சேவிக்கப்பட்ட வரும் சுயம்பு முதலிய 18 கணதர பரமேட்டிகளை உடையவரும் ஒரு மாதம் ப்ரதிமா யோகம் கொண்டவரும் சம்மேத கிரியில் ஸ்ராவண சுக்ல சப்தமி திதியில் 82 கோடி 84 லட்சத்து 41 ஆயிரத்து 742 முனிவர்களுடன் ஸ்வர்ண பத்ர கூடத்தில் பரிநிர்வாணம் அடைந்த வருமான ஸ்ரீபார்ஸ்வ  தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!



ஓம் ஹ்ரீம் ஸ்ரீ மஹாவீர தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ
அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா

ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து குண்டலபுர நகரத்து நாத வம்சத்து சித்தார்த்த மஹாராஜாவிற்கும், பிர்யகாருணி மஹாதேவிக்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும்,  பொன் வண்ணரும் 7 முழம் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 72 வருடம் ஆயுள் உடையவரும், சிம்ம லாஞ்சனத்தை உடையவரும், மாதங்க யக்ஷ்ன், சித்தாயினி யக்ஷியர்களால் சேவிக்கப்பட்டவரும் கௌதமர் முதலிய 11 கணதர பரமேட்டிகளை உடையவரும் 2 நட்கள் ப்ரதிமா யோகம் கொண்டவரும் பாபாபுரி சரோவர மத்தியில் கார்த்திகை கிருஷ்ண சதுர்தசி திதியில் 26 முனிவர்களுடன் பரிநிர்வாணம் அடைந்த வருமான ஸ்ரீவர்த்தமான தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!





Onampakkam is located 22 k.ms south east of Marudanthagam / take diversion left at chitamur and join melmaruvathur – cheyyur road and 28 kilometres  northwest of marakkanam.
To reach the Jain hillocks,near  Ayyanar kovil bus stop turn left . From here, the site is one km distant. It was a Jain centre during 8th century C.E. There are four hillocks namely Kurathimalai( northeast of Onampakkam), Koosamalai, Pattimalai and Venmanimalai. ( Also called as Karupankundru and Osimalai, near devanur). Among these hillocks, Kurathimalai and Koosamalai are having historical importance and were extensively used by jain Monks and tamiljains. Parshavanthar image facing east, is nicely carved on a small rock and was built like a small temple. An image of five headed snake which is covering the head of Parshavanathar and yakshan & yakshi  the either side are also seen. On the right side, an inscription  states that Vasudeva Siddhantha Pattarahar, a jain monk who governed the "Irupathi Irandu" (twenty two) branch of tamil jains, had built this temple. Rock carved images of Adhinathar and Mahaveerar are also seen in two places at a few feet distance. The sculputures were engraved by the Pallava kings because the style of art is like that.
One group of five stone beds are seen on the top of the hill. Above these beds, on a rock, a long narrow line were carved to protect the beds from water inflow. On the east of this hillock, another group of five stone beds are seen facing north. All these beds are belongs to 3rd century C.E.  A dried pond is also seen on the hillock.
Koosamalai: This hillock is located exactly west of Kurathimalai, where five stone beds are seen. On the south of this hillock, a deep cave is seen. Another dried pond is also seen a few feet above this cave.
Recently, some group of Tamil jains headed by Shri Jeevakumar,  mainly belonging to Kanchipuram district have built steps to reach the top of the Kurathimalai Hillock. The presence of a stone quarry near to these hillocks is a threat to this valuable place.




மதுராந்தகத்திற்கு தென் கிழக்கில் 22 கி.மீ. தொலைவில்,  வெண்ணாங்குப் பேட்டை சாலையில் சித்தாமூர் என்ற கிராமத்தில் இடது புறமாக திரும்பி சென்றால் ஓணம் பாக்கம் உள்ளது. (மேல் மருவத்தூர் செய்யூர் சாலையில் உள்ளது சித்தாமூர் கிராமம்.) மரக்காணத்திலிருந்து வடமேற்கில் 28 கி.மீ. ல் உள்ளது.

அய்யனார் கோவில் பஸ்ஸ்டாப் கிற்கு அருகில் இடது புறமாக திரும்பி வடகிழக்கு திசையில் 1 கி.மீ. சென்றால் 8 ம் நூற்றாண்டைச் சார்ந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சமண சிற்பங்கள் உள்ள குறத்தி மலை ( கருப்பங்குன்று  என்ற), அதன் மேற்கு பக்கத்தில் கூசாமலையும் உள்ளது. 

மலைப்படிக்கட்டுகளில் ஏறியவுடன் ஒரு மாடத்தில் ஐந்து தலை நாகத்தின் குடைகீழ் ஸ்ரீபார்ஸ்வநாதர் சிலை சாமரம் வீசும் தேவர்கள், யக்ஷ, யக்ஷியர்களுடன் அழகாக காட்சியளிக்கும். அவருக்கு வலது பக்கத்தில் உள்ள கல்வெட்டில் இருபத்திரண்டு குழுவை சார்ந்த வாசுதேவ சித்தார்த்த பட்டாரகர் இவ்வாலயத்தை கட்டியதாக செதுக்கப் பட்டுள்ளது.  அச் சிலைக்கு மேல் சில அடி உயரத்தில் ஸ்ரீஆதிநாதர் மற்றும் ஸ்ரீமகாவீரர் புடைப்புச் சிற்பங்களும் மிக அழகாக செதுக்கப்ட்டுள்ளன. அவ்வடிவங்களை காணும்போது அவை பல்லவ காலத்தைச் சார்ந்ததாக தெரிகிறது. ஆனால் மன்னரின் பெயர் காணப்படவில்லை.

அவற்றுக்கும் மேலே சென்றால் ஐந்து கற் படுக்கைகள் ஒரு குகைப்பகுதியில் உள்ளன. மேலிருந்து நீர் வழியா வண்ணம் ஒரு பள்ளம் வெட்டப்பட்டுள்ளது. அதன் கிழக்குப் பகுதியில் மேலும் ஐந்து படுக்கைகள் வடக்கு நோக்கி அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து பத்து படுக்கைகளும் கி.பி. 3 ம் நூற்றாண்டைச் சார்ந்தது. அதன் அருகில் ஒரு நீர்வரண்டு போன குட்டையும் குன்றின் மேல் உள்ளது.

கூசாமலை: இந்தக் குன்று குறத்தி மலைக்கு மேற்கில் உள்ளது. ஒரு குகையும் ஐந்து சமண படுக்கைகளும் தென்பகுதியில் உள்ளது.  மற்றுமொரு நீர்  அற்ற குட்டையும் அக்குகைக்கருகில்  உள்ளது.  
சில ஆண்டுகளாக காஞ்சிபுரத்தைச் சேர்ந்த திரு. ஜீவக்குமார் தலமையில் குன்றின் மேற் செல்ல அழகான படிக்கட்டுகளும் சில புணருதாரன பணிகளும் மேற் கொண்டு வருகின்றனர். ஆகவே ஏறிச் செல்வதில் எந்தச் சிரமமும் இல்லை. ஆனால் அருகில் உள்ள கற்குழியை காணும் போது பிற்காலத்தில் இந்த நினைவுச் சின்னங்களுக்கும்,செல்லும் பாதைக்கும் பாதகம் நேரிடலாம் எனத் தோன்றுகிறது.

No comments:

Post a Comment