Tuesday, January 20, 2015

CHEYYARU - செய்யாறு


Shri PARSWANATHAR  JAIN TEMPLE  -  ஸ்ரீ பார்ஸ்வநாதர்  ஜிநாலயம்Location:

lies on the map in the coordination of (12.67255, 79.53567 )ie put the latitude, Longitude on the search box

Map for Jain pilgrimage centres:   Click CHEYYARU
(Tamil nadu / Kerala)

சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் :   செய்யாறு கிளிக் செய்யவும் 
(தமிழ்நாடு / கேரளா )


ROUTE:-

Tindivanam → Vandavasi → Cheyyaru = 61 kms.

Kanchipuram → Cheyyaru = 33 kms.

Vellore  → Arcot → Kalavai road → Cheyyaru = 61 kms.

Tiruvannamalai  → Polur → Arni → Cheyyaru = 91 kms.

செல்வழி:-

திண்டிவனம் → வந்தவாசி  → செய்யாறு = 61 கி.மீ.

காஞ்சிபுரம் → செய்யாறு = 33 கி.மீ.

வேலூர் → ஆற்காடு → கலவை சாலை → செய்யாறு  = 61 கி.மீ.

திருவண்ணாமலை  → போளுர் →  ஆரணி → செய்யாறு = 91 கி.மீ.
 ஓம் ஹ்ரீம் ஸ்ரீ பார்ஸ்வநாத தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ 
 அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா 
ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து காசி நாட்டு வாரணாசி நகரத்து உக்ர வம்சத்து விஸ்வசேன மஹாராஜாவிற்கும், பிராமி மஹாதேவிக்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும், கரும் பச்சை வண்ணரும் 9 முழம் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 100 வருடம் ஆயுள் உடையவரும், ஸர்ப லாஞ்சனத்தை உடையவரும், தரணேந்திர யக்ஷ்ன், பத்மாவதி யக்ஷியர்களால் சேவிக்கப்பட்டவரும் சுயம்பு முதலிய 18 கணதர பரமேட்டிகளை உடையவரும் ஒரு மாதம் ப்ரதிமா யோகம் கொண்டவரும் சம்மேத கிரியில் ஸ்ராவண சுக்ல சப்தமி திதியில் 82 கோடி 84 லட்சத்து 41 ஆயிரத்து 742 முனிவர்களுடன் ஸ்வர்ண பத்ர கூடத்தில் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீபார்ஸ்வ  தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!

Cheyyaru, a small town in Tiruvannamalai dist. In olden days it was called as Saiyaru, Thiruvathipuram. Many Jain families are living there.  They built a Jinalaya in 1996 and dedicate to Shri Parshwa Jinar.

A rectangular shape of structure is bifurcated into two sections. The rear one has the sanctum plinth at the center. Shri Parswanathar, absolutely incised black marble, polished statue was installed on the plinth. Moolavar idol is canopied by dilated seven headed snake over the head. The main deity flanked between two white marble idols of Shri Santhinathar and Shri Mahaveerar on either side platforms.

Metal idols of important Thirthankar images, 24 thirthankar cluster, Navagraha jinars, Navadevatha, Panchaparameshti, Yaksha, Yashies are arranged on a stepped platform. The rear section is secured well by iron grill gates. The fore segment is assigned for whorshipping.  .......

செய்யாறு, திருவண்ணாமçலை மாவட்டத்தில் உள்ள சிற்றூர். சேய் ஆறு, திருவத்திபுரம் என்றும் அழைக்கப்படுகிறது.  அநேக சமணர்கள் வாழ்ந்து வருகின்றனர்.  1996 ம் ஆண்டில் ஸ்ரீபார்ஸ்வ ஜிநருக்கு  ஒரு ஜிநாலயத்தை நிறுவியுள்ளனர். 

செவ்வக வடிவமான அவ்வாலயத்தை இரு பகுதிகளாக  பிரித்து ,  பின் பகுதியின் நடுவில் கருவறை வேதிகையை  கட்டியுள்ளனர்.  அதன் மீது ஸ்ரீபார்ஸ்வநாதரின்  கரும்பளிங்கினால் ஆன முழு வடிவ சிலை அமர்ந்த நிலையில் பிரதிஷ்டை செய்துள்ளனர்.  மெருகூட்டப்பட்ட  அச்சிலையின் சிரசின் மேல் விரிந்தபடத்துடன் ஏழுதலை நாகம் குடைபோல் அமைக்கப்பட்டுள்ளது.  அதன்  வலது புறம்    ஸ்ரீசாந்திநாதர் வெண்பளிங்கு  சிலையும் , இடது புறம்   ஸ்ரீமகாவீரர் வெண்பளிங்கு சிலையும்  மேடைகளில்  நிறுவப்பட்டுள்ளன.

பின்புறம் உள்ள படிமேடையில்  முக்கிய தீர்த்தங்கரர்கள், 24 தீர்த்தங்கரர் தொகுப்பு,  நவதேவதை, பஞ்சபரமேஷ்டி மற்றும்  யக்ஷ, யக்ஷியர்கள் உருவ உலோகச் சிலைகள் அலங்கரிக்கின்றன. .....
The center plinth portion was crowned by two-tier Viman with shikhara and a kalash on the peak. Four thirthankar cement statues, in the sitting posture, are exhibit on the Grive section along four directions. On the over-head of the entranceway Shri Parshwanathar cement idol was seated incide a viman shape gallery.

The Vedi-block is surrounded by walls. On the north-west corner has Shri Padmavathy shrine with front shed and on the north side corridor a Navagraha stone idols with platform was installed. Two Dwarabalagar stone statues were installed on either side of the entranceway.


Regular poojas and rituals are conducted at the appropriate time. All Jain festivals are celebrated on the relevant dates. 

Contact No. Shri Nemiraj Upathiyayar - +91 9597649340


------------------

மூலவர் வேதிகைக்கு மேல்  துவிதள விமானம் சிகர கலசங்களுடன் அழகாக அமைக்கப்பட்டுள்ளது. அதன் கிரீவப்பகுதியில் நான்கு திசைகளிலும் தீர்த்தங்கரர் அமர்ந்த நிலை சிலைகள்  அலங்கரிக்கின்றன.  கிழக்கில்  உள்ள நுழைவுவாயிலின்  மேல் தளத்தில்  சிறிய விமானம் போன்ற அமைப்பில்  ஸ்ரீபார்ஸ்வநாதரின்  சுதைச் சிற்பம் அழகாக காட்சி தருகிறது.

சுற்றுச் சுவருடன்  உள்ள  திருச்சுற்றின்  வடமேற்கு திசையில்  ஸ்ரீபத்மாவதி தேவி சன்னதி  முன் கூரையுடனும்   வடபுற திருசுற்றில்  நவக்கிரஹ மேடையும்   அமைந்துள்ளது.

இவ்வாலயத்திலும், வளமைபோல் நடைபெறும் தின பூஜை,  விசேஷபூஜைகள்,  சடங்குகள், பண்டிகைகள் அனைத்தும்  அந்தந்த பருவ நாட்களில் நடைபெற்று வருகிறது. 

தொடர்புக்கு: ஸ்ரீநேமிராஜ் உபாத்தியாயர் - +91 9597649340


No comments:

Post a Comment