Tuesday, January 20, 2015

MOTTUR - மோட்டூர்


Shri CHANDRANATHAR  JAIN TEMPLE  --  ஸ்ரீ சந்திரநாதர் ஜிநாலயம்



Location:

lies on the map in the coordination of (12.65971, 79.32698 )ie put the latitude, Longitude on the search box

Map for Jain pilgrimage centres:   Click MOTTUR
(Tamil nadu / Kerala)

சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் :  மோட்டூர் கிளிக் செய்யவும் 
(தமிழ்நாடு / கேரளா )


ROUTE:-

Tindivanam → Vandavasi → Arni → Mottur = 76 kms.

Kanchipuram → Arcot → Arani → Mottur = 70 kms.

Vellore  → Arni → Mottur = 32 kms.

Villupuram → Gingee → Chetpet → Arni → Mottur = 94 kms.

Tiruvannamalai  → Polur → Arni → Mottur = 61 kms.

Vandavasi → Arni → Mottur = 42 kms.


செல்வழி:-

திண்டிவனம் → வந்தவாசி  → ஆரணி → மோட்டூர் = 76 கி.மீ.

காஞ்சிபுரம் → ஆற்காடு → ஆரணி → மோட்டூர் = 70 கி.மீ.

வேலூர் → ஆரணி → மோட்டூர் = 32 கி.மீ.

விழுப்புரம் → செஞ்சி →  சேத்பட் → ஆரணி → மோட்டூர் = 94 கி.மீ.

திருவண்ணாமலை  → போளுர் → → ஆரணி → மோட்டூர் = 61 கி.மீ.

வந்தவாசி → ஆரணி → மோட்டூர் = 42 கி.மீ.




 ஓம் ஹ்ரீம் ஸ்ரீ சந்திரபிரப தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ 
 அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா 


ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து சந்திரபுர நகரத்து இக்ஷ்வாகு வம்சத்து மஹாசேன மஹாராஜாவிற்கும், லக்ஷ்மணை மஹாதேவிக்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும், வெள்ளை வண்ணரும் 150 வில் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 10 லக்ஷம் பூர்வம் ஆயுள் உடையவரும், சந்திரன் லாஞ்சனத்தை உடையவரும், சாம யக்ஷ்ன், ஜ்வாலாமாலினி யக்ஷியர்களால் சேவிக்கப்பட்டவரும் உத்திராதி முதலிய 99  கணதர பரமேட்டிகளை உடையவரும் ஒரு மாதம் ப்ரதிமா யோகம் கொண்டவரும் சம்மேத கிரியில் பால்குண சுக்ல சப்தமி  திதியில் 2 கோடி 80 லக்ஷத்து 4 ஆயிரத்து 595 முனிவர்களுடன் லலித கூடத்தில் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீசந்திரபிரப தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!




Mottur village is situated 4 kms from Arani town in the Vazhaipandal road. It is also called as Varadharajapuram. A meager number of Jain families in that area had taken more effort to construct the Jinalaya to dedicated to Shri Chandraprabha Jinar in the recent past.

A square layout structure of the Jinalaya has sanctum and a prayer hall. A corrugated semi-bud shaped Viman with Kalash is on the top of the Sanctum. A box type gallery with a Jinar is on the fore-head of the Entranceway. The whole block is secured well with iron grill and gates.  ......


மோட்டூர்  கிராமம் திருவண்ணாமலை மாவட்டம்  ஆரணி நகரிலிருந்து வாழைப்பந்தல் சாலையில் 4 கிமீ தொலைவில் உள்ளது.  வரதராஜபுரம் என்றும்  அப்பகுதியை  அழைக்கின்றனர்.  குறைந்த எண்ணிக்கையில் சமணர்கள் அப்பகுதியில் வாழ்ந்திருப்பினும் சில ஆண்டுகளுக்கு  முன்னர்  ஸ்ரீசந்திரப்பிரப நாதருக்கு  ஒரு  ஜிநாலயத்தை  அர்ப்பணித்துள்ளனர். 

சதுர வடிவிலான அவ்வாலயத்தில் பின்பகுதி கருவறையாகவும் முன்பகுதி  வழிபாட்டுக் கூடமாகவும்  பிரிக்கப்பட்டுள்ளது.  கருவறைக்கு மேல்  பூ மொட்டின் பாதி வடிவம் போல்,   அலைபோன்ற மேற்பரப்புடன், வட இந்திய கோபுர வடிவில் கலசத்துடன், அழகாக விமானம் ஒன்று காட்சியளிக்கிறது.  கிழக்கு வாயிலின்  மேற்பகுதியில்  தேவமாடம் அமைத்து அதில் ஸ்ரீமகாவீரரின் சிமெண்ட் சிலை ஒன்றும் அமைத்துள்ளனர்.  ஆலயம்    இரும்பு கதவுகளினால்  பாதுகாப்புடன் அமைக்கப்பட்டுள்ளன.  .....



A black marble made polished stone image of Shri Chandraprabha Thirthankar of absolutely itched was installed on the plinth. The main deity is flanked between Shri Santhinathar image, made of white marble stone on one side and Shri Mahaveerar image, of same size white marble made is on the other side are established on individual platforms. 

Metal idols of Shri Adhinathar, 24 thirthankars cluster; Navadevatha and Panchaparameshti are arranged on the center platform.

All poojas, rituals and Jain festivals are conducted and celebrated in the Jinalaya at the referring time.

Already the Mottur village was notified by a native Jain of Beloved shri. Santhakumar Jain titled him as ‘Chinthamani Navalar’. He was a famous preacher of Jainism in those days. (Mannargudi people never forget his eloquent and vivid preachings on Seevagachinthamani legend).

 Contact No. Shri Vardhamanan  - +91 9486248187




கருவறை வேதிகையில்  ஸ்ரீசந்திரப்பிரப  ஜிநரின்  கரும்பளிங்குக் கல்  முழுஉருவச்சிலை  மெருகேற்றப்பட்டு நிறுவப்பட்டுள்ளது.  அவரின் இருபுறமும் தனி மேடைகள் அமைக்கப்பட்டு அவற்றில் ஸ்ரீசாந்திநாதரின்  வெண்பளிங்குச் சிலை ஒருபுறமும், ஸ்ரீமகாவீரரின் வெண்பளிங்குச் சிலை மறுபுறமும்  நிறுவப்பட்டுள்ளன. 

உலோகத்தினால்  செய்யப்பட்ட  ஸ்ரீஆதிநாதரின் திருவுருவமும்,  24 தீர்த்தங்கரரின்  ஒருங்கிணைப்பும், நவதேவதை மற்றும்  பஞ்சபரமேஷ்டி சிலைகளும்  நடுமேடையில்  அலங்கரிக்கின்றன.

தினபூஜை மற்றும் மத சடங்குகள், வழிபாடுகளும் அந்தந்த பருவ நாட்களில் செவ்வனே  நடைபெற்று வருகின்றன.


சிந்தாமணி நாவலர்  என்ற பட்டம் பெற்ற மதிப்பிற்குரிய திரு. சாந்தகுமார்  என்கின்ற  சமண மத பிரசாரகர் அவர்களால் மோட்டூர்  கிராமம் இவ்வாலயம்  தோன்றுவதற்கு முன்பே நற்பெயர் பெற்றுள்ளது.  (அவர் இளம் பருவத்தில்  எங்கள் ஊரில் தங்கியிருந்து ஐம்பெரும் காப்பியமான சீவகசிந்தாமணியை  சொற்பொழிவு ஆற்றியதை மன்னார்குடியில் அனைவருக்கும் பசுமையாய்  இன்றும்  நினைவிலுள்ளது.) 

தொடர்புக்கு: ஸ்ரீவர்த்தமாணன் - +91 9486248187



No comments:

Post a Comment