Shri ADHINATHAR JAIN TEMPLE -- ஸ்ரீ ஆதிநாதர் ஜிநாலயம்
Location:
Map for Jain pilgrimage centres: Click KOLIYANUR
Location:
lies on the Google map in the
coordination of (11.93097, 79.54527) ie put the latitude, Longitude on the search box
Map for Jain pilgrimage centres: Click KOLIYANUR
(Tamil nadu / Kerala)
சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் : கோலியனூர் கிளிக் செய்யவும்
(தமிழ்நாடு / கேரளா )
ROUTE:-
Tindivanam → Vikravandi → Kumbakonam road → Koliyanur = 43 kms.
Kanchipuram → Vandavasi → Tindivanam → Vikravandi → Kumbakonam road → Koliyanur = 115 kms.
Tiruvannamalai → Villupuram → Pudhucherry road → Koliyanur = 69 kms.
Tiruchy → Villupuram → Pudhuchery road → Koliyanur = 170 kms.
Gingee → Villupuram → Pudhuchery road → Koliyanur = 48 kms.
செல்வழி:-
திண்டிவனம் → விக்கிரவாண்டி → கும்பகோணம் சாலை → கோலியனூர் = 43 கி.மீ.
காஞ்சிபுரம் → வந்தவாசி → திண்டிவனம் → விக்கிரவாண்டி → கும்பகோணம் சாலை → கோலியனூர் = 115 கி.மீ.
திருச்சி → விழுப்புரம் → புதுச்சேரி சாலை → கோலியனூர் = 170 கி.மீ.
திருவண்ணாமலை → விழுப்புரம் → புதுச்சேரி சாலை → கோலியனூர் = 69 கி.மீ. = 19 கி.மீ.
செஞ்சி → விழுப்புரம் → புதுச்சேரி சாலை → கோலியனூர் = 48 கி.மீ.
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ விருஷப தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ
அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா
ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து அயோத்தியா நகரத்து இக்ஷூவாகு வம்சத்து நாபி மஹாராஜாவிற்கும், மருதேவி க்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும், பொன் வண்ணரும் 500 வில் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 84 லக்ஷ்ம் பூர்வம் ஆயுள் உடையவரும், விருஷப லாஞ்சனத்தை உடையவரும், கோமுக யக்ஷ்ன், சக்ரேஸ்வரி யக்ஷி யர்களால் சேவிக்கப்பட்டவரும் விருஷப சேனர் முதலிய 84 கணதர பரமேட்டிகளை உடையவரும் 14 நாட்கள் உபவாசத்துடன் பல்லியங்காசனமாக இருந்து கைலாசகிரியில் மாக மாத கிருஷ்ண சதுர்தசியில் ஆயிரம் முனிவர்களுடன் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீவிருஷப தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!
Koliyanur is situated 8 kms from Villupuram town in Puduchery road. A Jinalaya was there from 13th Century AD. After 200 years the structure had been degenerated and demolished in due course of time. Last decade the nearby Jain descendants taking earnest effort to built a new structure at the same place. A beautiful Jinalaya was constructed and dedicate to Shri Adhinatha Jinar.
When we reach the venue a beautiful Manasthamp and a Rath or Chariot welcomes us. The Manasthamp installed on a high pedestal and has four Jinar images at the bottom and another four at top mini-mandap in sitting postures. Adjacent to that a tall chariot with four wheels and a Viman shape top inside a Chadurmugi specimen carvings in granite stone . Four bas-relief Jinars are in standing position decorate that specimen. A Kshetrabalagar individual shrine chamber facing east also lies in the open corridor. ........
விழுப்புரம்
நகரத்திலிருந்து புதுச்சேரி சாலையில் 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது கோலியனூர் என்னும்
சமண ஸ்தலம். அங்கு 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜிநாலயம் ஒன்று இருந்து 15 ம் நூற்றாண்டிற்கு பிறகு அழிந்து விட்டிருக்கிறது. சென்ற சில ஆண்டுகளுக்கு முன்னர் அவ்விடத்தில் அப்பகுதியில் வாழும் சமணக் குடும்பங்கள் பெருமுயற்சி எடுத்து அழகிய ஜிநாலயத்தை
எழுப்பி ஸ்ரீஆதிநாதருக்கு அர்ப்பணித்துள்ளனர்.
நாம் அதன்
வாயிலை அடைந்ததும் ஒரு நெடிய மனத்தூய்மைக்
கம்பமும் அழகிய வடிவில் சுதையினால் செய்யப்பட்ட
தேர் ஒன்றும் வரவேற்கும். அந்த மனத்தூய்மைக்
கம்பம் பெரிய மேடையில் நிறுவப்பட்டு அதன் நாற்
திசைகளிலும் கீழ் புறம் நான்கு ஜிநர்களின் உருவங்களும், மேற்புறம் சிறிய விமானத்தில்
நான்குமாக அமர்ந்த நிலையில் அலங்கரிக்கின்றன.
அடுத்து கீழ்திசை நோக்கிய தேர் வடிவத்தின் நடுவே சதுர்முகி வடிவ கற்சிலை நான்கு
புறமும் நின்ற நிலை அரஹந்தர்களின் புடைப்புச்
சிற்பத்துடன் அழகாக அமைந்துள்ளது. அருகில்
க்ஷேத்ரபாலகர் கற்சிலை தனி சன்னதியில் நிறுவப்பட்டுள்ளது. ........
A broad and long pavilion, a fore-sanctum and sanctum are the sections of the Vedi block. On the top-fore a decorated viman with Shri Adhinathar cement image with two Shamara maids on the gallery. Two set of stair cases also provided on the back, to reach the top of the pavilion. On the three sides of outer wall of the sanctum has three Jinars, seated inside the Devamadam boxes.
The sanctum sanctorum has a magnificient stone plate carved sculpture with all features, like Melsithamur Molavar. The sculpture comprises of 24 thirthangars engraving, two Shamara maids, tri-umbrella canopy, padmapeedam and other ornamental top curves. Another small Jinar image also in front of the gigantic is for daily pooja and anointing purposes. The womb-chamber is crowned by two stage Viman shikhar with padmam and a khalash. Along the first stage four sitting postured Jinars on the sala portion and the top tier got standing state Jinars below the nasi portion on each direction decors beautifully. .......
ஆலயம் கருவறை, இடைநாழி மற்றும் அகலமான முன் மண்டபம் ஆகிய பகுதிகளைக் கொண்டு கதவுகளுடன் பாதுகாப்பாக உள்ளது. முன்மண்டபத்தின் மேற்பகுதியில் அலங்கார விமானத்தில் ஸ்ரீஆதிநாதரின் சுதைச்சிலை சாமரைதாரிகளுடன் அமர்த்தப்பட்டுள்ளது. ஆலயத்தின் பின்புறத்தில் இருபுறமும் மண்டபத்தின் மேல் தளத்திற்கு செல்ல மாடிப்படிகள் அமைக்கப்பட்டுள்ளன. கருவறையைச் சுற்றி உள்ள சுவற்றில் தேவமாடங்கள் அமைத்து அதில் ஜிநரின் சிலைகள் அமர்த்தப்பட்டுள்ளன.
கருவறை வேதிகையில் ஸ்ரீஆதிநாதரின் பிரம்மாண்டமான கற்பலகையில் செதுக்கப்பட்ட புடைப்புச் சிலை, மேல்சித்தாமூர் மூலவரின் தோற்றத்துடன், நிறுவப்பட்டுள்ளது. அச்சிலை 24 தீர்த்தங்கரர்களின் உருவங்களுடன், சாமரை தாரிகள், சிரசின் மேல் முக்குடை, பத்ம பீடம் மற்றும் விளிம்புகளில் அலங்கார வேலைப்பாடுகளுடன் விளங்குகிறது. அதன் மேல் அழகிய துவிதள விமான சிகரம் பத்ம கலசத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. அதன் கீழ்தளத்தில் சாலைஅமைப்பின் மேற் நான்கு தீர்த்தங்கரர்கள் சுதைச்சிற்பங்களும், மேற் தளத்தில் நாசிக்கு கீழ் நான்கு ஜிநர்களின் சுதைச்சிற்பங்களும் அமர்ந்த நிலையில் காட்சி அளிக்கின்றன. .......
In front of the sanctum metal alloy images, Shri Komugha Yaksha and Shri Chakreshwari Yakshi stone absolute carved idols are exhibits on either side of aisle. And outside of sanctum, the pavilion has two galleries having twenty four white marble Jinar idols are placed in stepped mannar. Two Dwarabalagar stone statues with pedestal are lies on both side of the entry.
A separate shrine is on the north-west corner. It got the legendary sculpture of Shri Rishabhadev which is brought from Meenampakkam Air port, Madras. A paved corridor, a Munivasam and a guest house are also in the complex.
All poojas, rituals and festivals are conducted and celebrated recurrently at the relevant times.
Contact no. Shri Praveenkumar -+91 9791544199
Contact no. Shri Praveenkumar -
இடைநாழியில் இருபுறமும் உலோகத்தால் ஆன பல தீர்த்தங்கரர்கள் மற்றும் முக்கிய யக்ஷ,யக்ஷியர்களின் சிலைகளும் அவற்றுடன் ஸ்ரீகோமுக யக்ஷன், ஸ்ரீசக்ரேஸ்வரி யக்ஷியின் முழுவடிவ கற்சிலையும் மேடைகளில் அமர்த்தப்பட்டுள்ளன. அடுத்து மண்டபத்தின் இருபுறமும் உள்ள மாடங்களில் 24 தீர்த்தங்கரர்களின் தனி உருவ பளிங்குச் சிலைகள் அழகாக வைக்கப்பட்டுள்ளன. மேலும் மண்டப வாயிலின் இருபுறமும் துவாரபாலகர்களின் கற்சிலைகள் மேடையில் நிறுவப்பட்டுள்ளன.
ஜிநாலயத்தின் வடமேற்கு மூலையில் ஸ்ரீஆதிநாதருக்கான தனி சன்னதியில் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட கற்சிலை வேதிகையில் நிறுவப்பட்டுள்ளது. மேலும் ஆலய திருச்சுற்றில் முனிவாசமும் தங்கும் விடுதியும் கட்டப்பட்டுள்ளது.
ஆலயத்தில் அனைத்து பூஜைகளும், பண்டிகைகளும் அந்தந்த பருவ நாட்களில் செவ்வனே நடைபெற்று வருகிறது.
குறிப்பாக அக்ஷய திரிதியை திருவீதியுலா, தீபாவளி லட்டு பூஜை, நவராத்திரி, விஜயதசமி ஸ்ரீதேவியர் திருவீதியுலா போன்றவை யாகும்.
தொடர்புக்கு: ஸ்ரீபிரவீண்குமார் - +91 9791544199
குறிப்பாக அக்ஷய திரிதியை திருவீதியுலா, தீபாவளி லட்டு பூஜை, நவராத்திரி, விஜயதசமி ஸ்ரீதேவியர் திருவீதியுலா போன்றவை யாகும்.
தொடர்புக்கு: ஸ்ரீபிரவீண்குமார் - +91 9791544199
No comments:
Post a Comment