Thursday, January 22, 2015

NAVAL - நாவல்


Shri  VASUPOOJYAR  JAIN TEMPLE  --  ஸ்ரீ வாசுபூஜ்ய நாதர் ஜிநாலயம்



Location:

lies on the map in the coordination of (12.62643, 79.48368) ie put the latitude, Longitude on the search box


Map for Jain pilgrimage centres:   Click NAVAL
(Tamil nadu / Kerala)

சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் :  நாவல் கிளிக் செய்யவும் 
(தமிழ்நாடு / கேரளா )



ROUTE:-

Tindivanam → Vandavasi → Cheyyaru → Naval = 72 kms.

Kanchipuram → Cheyyaru → Naval = 35 kms.

Vellore  → Arcot → Kalavai road → Cheyyaru → Naval = 72 kms.

Tiruvannamalai  → Polur → Arni → Cheyyaru → Naval = 102 kms.


செல்வழி:-

திண்டிவனம் → வந்தவாசி  → செய்யாறு → நாவல் = 72 கி.மீ.

காஞ்சிபுரம் → செய்யாறு → நாவல் = 35 கி.மீ.

வேலூர் → ஆற்காடு → கலவை சாலை → செய்யாறு → நாவல்  = 72

திருவண்ணாமலை  → போளுர் →  ஆரணி → செய்யாறு → நாவல் = 102 கி.மீ.




 ஓம் ஹ்ரீம் ஸ்ரீவாசுபூஜ்ய தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ அர்க்யம்  நிர்வபாமி ஸ்வாஹா 

     ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து சம்பாபுர நகரத்து இக்ஷ்வாகு வம்சத்து   சுபூஜ்ய மகாராஜாவிற்கும் ஜெயவதி தேவிக்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மகா புருடரும்மாணிக்க வண்ணரும் 70 வில் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 72 லட்சம் வருட ஆயுள் உடையவரும்   மகி­ (எருமைலாஞ்சனத்தை உடையவரும் குமார யக்ஷன் காந்தா யக்ஷியர்களால் சேவிக்கப்பட்டவரும்   தர்மராதி முதலிய 66 கணதர பரமேட்டிகளை உடைய வரும் ஒரு மாதம் பிரதிமா யோகம் கொண்டவரும் சம்பாபுரி நகர மந்தாரகிரியில்   பாத்ரபத சுக்ல  சதுர்த்தசியில் ஒரு ஆயிரம் முனிவர்களுடன் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீவாசுபூஜ்ய தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்துநமோஸ்துநமோஸ்து!



Naval is a small village (near Vellai) 14 kms from Cheyyaru town towards Thavasi route. Accute number of direct descendants of Jains more than 400 years old natives has been living there. In olden days many debates are conducted between Jains and other communities in the presence of Jamun fruit trees (eg. Agalankar verses buddist monk).  So the area had been called as Noval (Jamun fruit tree) village. Many Naval trees are occurred in the area.

A beautiful Jinalaya of 400 years old is there. It was dedicated to Shri Vasupoojya Jinar (very rare main deity in the south) who is the twelfth Jinar of twenty four in no.s. East entranceway (Kudavarai) has tall twin-gates attached with alround corridor enclosure-wall. On the top the temple Bell is supported for swinging. The open corridor is paved by cement concrete.

The Jinalaya layout is as usual Chola temple art design having Sanctum, fore-pathway, Ardhamandap and Mugamandap porch. Shri Vasupoojya Jinar’s white marble absolute-carving sculpture was installed on a plinth.  A silver tri-umbrella is hanging on its over-head. A single stage beautiful Viman with padmam and kalash is crowned upon. Along the Grive section under the Nasi (with Indra face) a Jinar in sitting posture with tri-umbrella and wishk maids exhibits around the four directions.   ...............


நாவல் கிராமம்  திருவண்ணாமலை மாவட்டம் , செய்யாறிலிருந்து 14 கி.மீ. தொலைவில் தவசி சாலையில் (பாராசூருக்கு அருகில் )உள்ளது. (வெள்ளை கிராமத்தின் வழியாக செல்லலாம்).  பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த  சமணர்களின்  வாரிசுக் குடும்பங்கள் தற்போதும் அவ்வூரில் வாழ்ந்து வருகின்றனர்முற்காலத்தில் அப்பகுதியில்  சமணர்களுக்கும் பிற மதத்தின் குருமார்களுக்கும் தர்க்க வாதங்கள்  பல நடந்துள்ளன. அப்போது நாவல் மரக்கிளையை சாட்சியாக வைத்து நடைபெறும்  வழக்கம் (அகளங்கர் மற்றும் பெளத்தர்கள் இடையே) இருந்துள்ளதுஅதனால் அப்பகுதிக்கு நாவல் என்ற பெயர் வந்துள்ளது. தற்போதும் பல நாவல் மரங்கள் சூழ்ந்துள்ளன.

மிகவும் பழமையான 400 ஆண்டுகளைக்கடந்த  ஜிநாலயம் ஒன்று உள்ளது.  12வது தீர்த்தங்கரரான ஸ்ரீவாசுபூஜ்யருக்காக அர்ப்பணம் செய்யப்பட்டுள்ளதுகிழக்கு நோக்கிய பெரிய குடவரை இரு பெரிய இரும்புக்கதவுகளுடன் , மேல் உள்ள ஆலயமணிக்கான கட்டுமானத்துடன் ஆலயத்தின்   திருச்சுற்று மதிற்சுவருடன் இணைக்கப்பட்டுள்ளதுதிறந்த திருச்சுற்று  சிமெண்ட் காண்கிரீட்  தளத்துடன் அமைக்கப்பட்டுள்ளது.


கருவறை, இடைநாழி, அர்த்தமண்டபம் மற்றும் முகமண்டபம் போன்ற சோழர்கால ஆலய கலைப்பாணியின் அம்சங்களுடன் விளங்குகிறது. வெண்பளிங்கு கல்லால் ஆன முழுஉருவ சிலை அமர்ந்த நிலையில் வேதிகையில் பிரதிஷ்டை  செய்யப்பட்டுள்ளதுஅதன் மேல் வெள்ளியினால் ஆன முக்குடை  தொங்கிக் கொண்டிருக்கிறது. மேற்பகுதியில் அழகிய விமானம்  பத்மம் மற்றும் ஒற்றைக் கலசத்துடன் கட்டப்பட்டுள்ளதுஅதன் கிரீவப்பகுதியை சுற்றி  நாசியின் கீழ்  முக்குடை, இரு சாமரைதாரிகளுடன்  ஜிநரின் சிலைகள் நாற் திசைகளிலும் அலங்கரிக்கின்றன


Inside the Arthamandap daily pooja platform is at the center. On either side alloy idols of Thirthankars for festivals worship, Mahameru, Shruthaskanth, 24 thirthankar mould, Navathevatha, Rathnathriya and Yaksh Shri Brahmadevar, Yakshies Shri Padmavathy, Shri Jwalamalini, Shri Kooshmandini are arranged in order.

In Mugamandap porch two Dhwalabalagar stone sculputures are supported by pedestal is on either side of aisle. On the north-east side of corridor Shri Padmavathy devi shrine is allotted for worship.  On the left side of entrance two legendry stone sculptures of old Moolavars are preserved in a shed.

Regular poojas and rituals are conducted at the appropriate time. All Jain festivals are celebrated on the relevant dates. Recurrent visit by the devotees can safe guard the treasure for future.

For contact: Shri Dharmabalan  -  +91 9710082071
-------------

அர்த்த மண்டபத்தின் நடுமேடையில் தினபூஜை மேடையும்,  அதன் இருபுறம்  உள்ள மேடைகளில் முக்கிய வழிபாட்டிற்கான தீர்த்தங்கரர் கள், மஹாமேரு, ஸ்ருதஸ்கந்தம், 24 தீர்த்தங்கரர்கள் தொகுப்பு, நவதேவதை, ரத்தினத்திரயம், ஸ்ரீபிரம்மதேவர், மற்றும்  ஸ்ரீபத்மாவதி, ஸ்ரீஜ்வாலாமாலினி, ஸ்ரீகூஷ்மாண்டினி போன்ற யக்ஷியர்களின் உலோக சிலைகள்  வரிசைப்படி  வைக்கப்பட்டுள்ளன.

முகமண்டபத்தின்  முடிவின்  இருபுறமும்  துவாரபாலகருக்கான  கற்சிலைகள்  தனி மேடையில் நிறுவப்பட்டுள்ளன.  ஆலய திருச்சுற்றின் ஆரம்பத்தில்  பழைய மூலவர்களின் இரு கற்சிலைகள் மேற்கூரையுடன் மேடையில் அமர்த்தப்பட்டுள்ளன.  மேலும்  திருச்சுற்றின் வடகிழக்கு மூலையில் ஸ்ரீபத்மாவதி தேவிக்கான தனி சன்னதி யயான்று உள் மேடையில்  கற்சிலையுடன் அமைக்கப்பட்டுள்ளது. திருச்சுற்றில் அரைத்தூணில் பலிபீடமும் அருகில்  மரத்தால் ஆன துவஜமரமும் உள்ளன.


குறைந்த அளவில் சமணர்கள் அவ்வூரில் வாழ்ந்திருந்தாலும் தினபூஜை மற்றும் மத சடங்குகள் அனைத்தும் அந்தந்த பருவ நாடகளில் நடைபெறுகிறது.  மெய்அன்பர்கள்  முறையாக விஜயம் செய்வதால் மட்டுமே  அந்த பழமையான நினைவுச் சின்னம் எதிர்கால தலைமுறைக்காக அழியாமல் இருக்கும்.

தொடர்புக்கு: ஸ்ரீதர்மபாலன் - +91 9710082071



No comments:

Post a Comment