Monday, January 26, 2015

ERAMALUR - எரமலூர்


Shri  MAHAVEERAR  JAIN TEMPLE  --  ஸ்ரீ மஹாவீரர் ஜிநாலயம்




lies on the Google map in the coordination of (12.40443, 79.63658) ie put the latitude, Longitude on the search box

Map for Jain pilgrimage centres:   Click ERAMALUR
(Tamil nadu / Kerala)

சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் :   எரமலூர் கிளிக் செய்யவும் 
(தமிழ்நாடு / கேரளா )

ROUTE:-

Tindivanam → V. Pettai → Katteri → Eramalur  = 30 kms.

Kanchipuram → Vandavasi → Tindivanam salai → Nedukuppam →Eramalur  = 61 kms.

Vellore  → Arani → Vandavasi → Eramalur  = 99 kms.

Tiruvannamalai  → Gingee → V.pettai road → Vandavasi → Eramalur   = 81 kms.

Gingee → V.pettai road → Katteri → Eramalur   = 43 kms


செல்வழி:-

திண்டிவனம் → வெ. பேட்டை → காட்டேரி → எரமலூர்  = 30 கி.மீ.

காஞ்சிபுரம்  → வந்தவாசி  → திண்டிவனம் சாலை → நடுக்குப்பம் → எரமலூர் = 61 கி.மீ.

வேலூர் → ஆரணி → → வந்தவாசி  → திண்டிவனம் சாலை → நடுக்குப்பம் → எரமலூர்  = 99 கி.மீ.

திருவண்ணாமலை  → செஞ்சி → வெ. பேட்டை → காட்டேரி  → எரமலூர் = 87 கி.மீ.

செஞ்சி → வெ. பேட்டை → காட்டேரி  → எரமலூர் = 43 கி.மீ.




 ஓம் ஹ்ரீம் ஸ்ரீ மஹாவீர தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ
அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா



ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து குண்டலபுர நகரத்து நாத வம்சத்து சித்தார்த்த மஹாராஜாவிற்கும், பிர்யகாருணி மஹாதேவிக்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும்,  பொன் வண்ணரும் 7 முழம் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 72 வருடம் ஆயுள் உடையவரும், சிம்ம லாஞ்சனத்தை உடையவரும், மாதங்க யக்ஷ்ன், சித்தாயினி யக்ஷியர்களால் சேவிக்கப்பட்டவரும் கௌதமர் முதலிய 11 கணதர பரமேட்டிகளை உடையவரும் 2 நட்கள் ப்ரதிமா யோகம் கொண்டவரும் பாபாபுரி சரோவர மத்தியில் கார்த்திகை கிருஷ்ண சதுர்தசி திதியில் 26 முனிவர்களுடன் பரிநிர்வாணம் அடைந்த வருமான ஸ்ரீவர்த்தமான தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!





Eramalur is also a Jains living hamlet (near Nallur) 8 kms from Nadukuppam bus stop on Vandhavasi-Tindivanam road. Recent past a new Janalaya was built by the native Jain descendants had been dedicated to Shri Mahaveer Jinar. A small and compact structure with alround wall is found while we are entering the spot.

The square type pavilion has back-end sanctum plinth and a square prism plus sphere ball shaped viman on the top. A kalash also installed on the top. The fore-edge top shows a gallery with Shri Mahaveerar cement idol seated inside the box shelter. The pavilion was secured with Iron gate tightly. On either side of the gate two Dwarabalagar stone statues are placed on an individual pedestals.  ...........

எரமலூர்  என்னும் கிராமம்  திருவண்ணாமலை மாவட்டத்தில்   வந்தவாசி திண்டிவனம் சாலையில் நடுக்குப்பம் என்னும் பஸ்நிறுத்தத்திலிருந்து 8 கி.மீ. (நல்லூருக்கு அருகில்) தொலைவில் அமைந்துள்ளது. அங்கே அவ்வூரைச் சார்ந்த மிகச் சொற்ப சமணர்களின்  வாரிசுக் குடும்பங்களால்  சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு ஆலயத்தை கட்டி ஸ்ரீமகாவீரருக்கு அர்ப்பணம் செய்துள்ளனர்.  அழகிய கச்சிதமான அளவில் சுற்று சுவருடன் அவ்வூருக்கு சென்றதும் கண்ணில் படும் ஒரு ஆலயம் ஆகும்.


சதுர வடிவில் கட்டப்பட்ட மண்டபத்தின்  பின்கட்டில் கருவறை வேதிகையும்,  அதன்  மீது  சதுர கூம்பு  (பிரிசம்) வடிவின் மேல் கோளம் போன்ற அமைப்பினைக் கொண்ட விமானமும்,  மேற் கலசமும் கொண்டுள்ளன.  ஆலயத்தின் முன் மேல்தளத்தில் அழகிய  மாடம் அமைத்து அதில் ஸ்ரீவர்த்தமாணரின் சுதைச்சிற்பம் காட்சித்தருகிறது.  அவ்வாலயம் கனமான கதவுகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பாக உள்ளது.  வாயிலின் இருபுறமும் இரு துவாரபாலகர் சிலைகள் தனி மேடைகளில் நிறுவப்பட்டுள்ளன. 


Shri Mahaveerar marble purple race colour stone sculpture in sitting posture was installed on the plinth. The top tri-imbrella and two whisks on either side engraving is brought from an ancient temple. In front of the plinth white marble made idols of Shri Adhinather, Shri Parswanather, Shri Shanthinathar and Shri Chandraprabhar were displayed decorately on a separate platform. On the side a pedestal got Shri Padmavathy devi white marble beautiful carvings with dilated state five headed snake canopied the head. A portrait having the images of Shri Adhinathar and Shri Mahavaeerar is in decorated ornamental back is taken from the British museum is also displayed in the temple.

Regular poojas and festivals are celebrated regularly by the devotees of the village.


They are the reflections of bygone day’s traditions and customs through the images. So the devotees and passersby should visit the places can safeguard the valuble treasures for future generations.

For Contact : Mr. Vijayakeethi +91-8754201441
-----------

அமர்ந்த நிலையில் உள்ள ஸ்ரீமகாவீரரின் சிலை,  பழுப்பு நிறம் கலந்த பளிங்குக்கல்லால் சிரசின்மீது முக்குடையுடன்,  இருபுறமும் சாமரைகளுடன் செய்யப்பட்டுள்ளது. முன்னர் வேறு ஆலயத்தில் மூலவராக இருந்தவர் ஆவார்.  மேலும் அதன் முன்புறம் உள்ள மேடையில்  வெண்பளிங்கு கல்லால் ஆன ஸ்ரீஆதிநாதர், ஸ்ரீபாரஸ்வநாதர், ஸ்ரீசாந்திநாதர் மற்றும் ஸ்ரீசந்திரப்பிரப நாதரின் சிலைகளும் அமர்த்தப் பட்டுள்ளன.  அதன் அருகில் தென்திசை நோக்கி ஸ்ரீபத்மாவதி தேவியின் சலவைக்கல் சிலை ஐந்து தலைநாகம்  தலைமீது விரிந்த கோலத்துடன் செய்விக்கப்பட்டு நிறுவப்பட்டுள்ளன. இங்கிலாந்து அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த ஸ்ரீஆதிநாதர் மற்றும் ஸ்ரீமகாவீரர் இருவரின் உருவ புகைப்படம் ஒன்று அதன் விவரங்களுடன் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

அனைத்து ஆலயங்களில் நடைபெறும் தினபூஜை மற்றும் அனைத்து பண்டிகைகளும் இவ்வாலயத்திலும் அந்தந்த பருவ நாட்களில் செவ்வனே அருகிலுள்ள மெய்யன்பர்களால் நடைபெற்று வருகின்றது. 

இதுபோன்ற பழங்கால நினைவுச் சின்னங்கள் நமது பாரம்பரியத்தை   உருவத்தின் வழியே வெளிக்காட்டு கின்றன. ஆகவே அதனை பாதுகாக்கும் முகமாக அவ்வழியே ஒருமுறை சென்று தரிசித்து வந்தால் அப்பொக்கிஷங்கள் வருங்கால சந்ததிக்காக அழியாமல் இருக்கும்.


தொடர்புக்கு: ஸ்ரீவிஜயகீர்த்தி -  +91 8754201441

No comments:

Post a Comment