Shri ADHINATHAR JAIN TEMPLE -- ஸ்ரீ ஆதிநாதர் ஜிநாலயம்
Location:
lies on the Google map in the coordination of (12.42945, 79.60204) ie put the latitude, Longitude on the search box
Map for Jain pilgrimage centres: Click
lies on the Google map in the coordination of (12.42945, 79.60204) ie put the latitude, Longitude on the search box
Map for Jain pilgrimage centres: Click
(Tamil nadu / Kerala)
சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் :
(தமிழ்நாடு / கேரளா )
ROUTE:-
Tindivanam → V. Pettai → Katteri → Mudhalur = 25 kms.
Kanchipuram → Vandavasi → Tindivanam salai → Nedukuppam →Mudhalur = 55 kms.
Vellore → Arani → Vandavasi → Mudhalur = 94 kms.
Tiruvannamalai → Gingee → V.pettai road → Vandavasi → Mudhalur = 76 kms.
Gingee → V.pettai road → Katteri → Mudhalur = 38 kms
செல்வழி:-
திண்டிவனம் → வெ. பேட்டை → காட்டேரி → முதலூர் = 25 கி.மீ.
காஞ்சிபுரம் → வந்தவாசி → திண்டிவனம் சாலை → நடுக்குப்பம் → முதலூர் = 55 கி.மீ.
வேலூர் → ஆரணி → → வந்தவாசி → திண்டிவனம் சாலை → நடுக்குப்பம் → முதலூர் = 94 கி.மீ.
திருவண்ணாமலை → செஞ்சி → வெ. பேட்டை → காட்டேரி → முதலூர் = 82 கி.மீ.
செஞ்சி → வெ. பேட்டை → காட்டேரி → முதலூர் = 38 கி.மீ.
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ விருஷப தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ
அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா
ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து அயோத்தியா நகரத்து இக்ஷூவாகு வம்சத்து நாபி மஹாராஜாவிற்கும், மருதேவி க்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும், பொன் வண்ணரும் 500 வில் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 84 லக்ஷ்ம் பூர்வம் ஆயுள் உடையவரும், விருஷப லாஞ்சனத்தை உடையவரும், கோமுக யக்ஷ்ன், சக்ரேஸ்வரி யக்ஷி யர்களால் சேவிக்கப்பட்டவரும் விருஷப சேனர் முதலிய 84 கணதர பரமேட்டிகளை உடையவரும் 14 நாட்கள் உபவாசத்துடன் பல்லியங்காசனமாக இருந்து கைலாசகிரியில் மாக மாத கிருஷ்ண சதுர்தசியில் ஆயிரம் முனிவர்களுடன் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீவிருஷப தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!
Mudalur is a small village 10 kms south-east
direction from Vandavasi town in Tiruvannamalai district. A Jinalaya was
constructed by the native Jains of this village 600 years back and dedicated to
Shri Adhinatha Jinar. It is a notified
pilgrimage centre and referred in poems like “Adhinathar Pillai Tamil’and etc..
The
small temple consists of all Dravidian style features of Sanctum, Ardhamandap,
Mahamandap and Mugamandap and others. The east entry gate is joined with
alround corridor wall. Inside a tall Manasthamp pillar has beautiful bas relief
figures of Jinars along four directions is installed. And an altar structure
also built adjacently. ............
முதலூர்
என்னும் சிற்றூர் திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வந்தவாசி நகரத்திலிருந்து 10 கி.மீ.
தொலைவில் தென் கிழக்கு திசையில் உள்ளது. ஏறக்குறைய
600 ஆண்டுகளை கடந்துள்ள ஸ்ரீஆதிநாதர் ஜிநாலயம் ஒன்று அங்கு
வாழ்ந்த சமணர்களால் கட்டப்பட்டுள்ளது. அவ்வாலய
மூலவர், ஆதிநாதர் பிள்ளைத்தமிழ் போன்ற நூல்களில்
போற்றிப் பாடப்பெற்றவர் ஆவார்.
திராவிட
பாரம்பரிய முறையில் கட்டப்பட்ட அவ்வாலயத்தில்
கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம், முகமண்டபம் போன்ற அனைத்து அம்சங்களும் கொண்டு
விளங்குகிறது. கீழ்திசை நோக்கிய அவ்வாலய நுழைவு
அதன் திருச்சுற்று மதிற்சுவருடன் இணைக்கப்பட்டு பெரிய கதவுகளோடு பாதுகாக்கப் பட்டுள்ளது. திருச்சுற்றில் நெடிய மனத்தூய்மைக் கம்பம் கீழ்புறம்
நான்கு திசைகளிலும் அழகிய தீர்த்தங்கரர்கள் புடைப்புச் சிற்பங்களோடும், மேற்புறம் உள்ள சிறிய
விமானம் நான்கு அமர்ந்த நிலை ஜிநர் உருவச்
சிலைகளோடும் காட்சி தருகிறது. அதன் அருகில் பலிபீடம்
மேடையுடன் காட்சி தருகிறது. .....
The sanctum sanctorum has a marvelous, gigantic, fully carved granite sculpture of 5 feet high is established on the plinth. The plinth has more than 3.5 feet height. This might be one of the biggest stone idol of the south Jinalayas in the category of absolute-incised. It was crowned by two stage viman shikara with padmam and a kalash upon. Along the first stage four sitting postured Jinars inside the sala and the top tier got standing state Jinars below the nasi position on each directions.
The Arthamandap center platform consists of stone idol of Shri Adhinathar for daily pooja. All metal images are arranged in stepped platform on either side. A stone made Shri Parshwanathar statue and Chadurmugi speciman also included. Old Moolavar with mutilation on right thamp also seated on the northside pedestal and Shri Brahmadevar stone sculpture on an elephant placed on the southside. Alloy idols of important Jinars, Navadevatha, Shruthaskandh, Mahameru, Nandeeswara model and some Yaksh, Yakshies are secured tightly. ......
கருவறையில் ஸ்ரீஆதிநாதரின் ஐந்து அடி உயர அழகிய பெரிய முழுஉருவ கற்சிலை மூன்றரை அடி உயரமுள்ள வேதிகையில் நிறுவப்பட்டுள்ளது. தென்னிந்திய முழுஉருவ ஜிநர் சிற்பத்தில் பெரிய வடிவம் கொண்டதாக இருக்கும் என்றால் மிகையாகாது. அதன் மேற் துவிதள விமானம் கிரீவம், பத்மம், ஏக கலசத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. அதன் முதற் தளத்தின் நாற்புற சாலைஅமைப்பில் அமர்ந்த நிலையில் ஜிநரின் சுதைச்சிலைகளும், மேற்தளத்தின் மகாநாசியில் நின்றநிலையில் நான்கு ஜிநரின் சுதைச்சிலைகளும் அலங்கரிக்கின்றன.
அர்த்தமண்டப தின பூஜை மேடையில் அபிஷேக ஆதிநாதரின் கற்சிலை அமர்த்தப்பட்டுள்ளது. மற்ற உலோகச் சிலைகள் அனைத்தும் படிமேடையில் இருபுறமும் அமைக்கப்பட்டுள்ளன. வழிபாட்டிற்கான தீர்த்தங்கரர்கள், நவதேவதை, ஸ்ருதஸ்கந்தம், மகாமேரு, நந்தீஸ்வர தீப மாதிரி, மற்றும் சில யக்ஷ,யக்ஷியர்களின் உலோகச்சிலைகளும்; மேலும் அவற்றுடன் ஸ்ரீபார்ஸ்வநாதர் பனாமுடியுடன் உள்ள கற்சிலையும், சதுர்முகி அமைப்பின் கற்சிலையும் உள்ளன. பழைய மூலவரின் கற்சிலை (வலதுகை கட்டைவிரல் பின்னத்துடன்) மேடையுடன் வடபுறமும், ஸ்ரீபிரம்மதேவரின் கற்சிலை யானை வாகனத்துடன் தென்புற மேடையிலும் நிறுவப்பட்டுள்ளன. அனைத்தும் பாதுகாப்பான கதவுகளுடன் மண்டபத்தில் உள்ளன. .......
A separate small temple with viman has Shri Chakreshwari devi stone sculpture in sitting posture with twelve arms is in the north-east corner of the corridor facing south. The top viman has four goddess mortar idols on each direction. And a shrine also built for Shri Kshetrabalagar, a demi-god, in the corridor.
Regular poojas and rituals are conducted at the appropriate time. All Jain festivals are celebrated on the relevant dates.
Recurrent visit by the devotees can safe guard the treasure for future.
Contact
No. Shri Jeyachandran - - +91 9442055390
ஆலய திருச்சுற்றின் வடகிழக்கில் ஸ்ரீசக்ரேஸ்வரிக்கான சிற்றாலயம் விமான கலசத்துடன் உள்ளது. அதில் ஸ்ரீஅம்மனின் அமர்ந்த நிலை கற்சிற்பம் பன்னிரு கைகளுடன் வடிக்கப்பட்டு நிறுவப்பட்டுள்ளது. அதன் மேலுள்ள விமானத்தில் நான்கு யக்ஷியர்களின் உருவ சுதை சிற்பங்களும் காட்சி யளிக்கின்றன. மேலும் ஸ்ரீக்ஷேத்ரபாலகரின் கற்சிலை தனி சன்னதியாக திருச்சுற்றில் நிறுவப்பட்டுள்ளது.
குறைந்த அளவில் சமணர்கள் அவ்வூரில் வாழ்ந்திருந்தாலும் தினபூஜை மற்றும் மத சடங்குகள் அனைத்தும் அந்தந்த பருவ நாட்களில் நடைபெறுகிறது.
மெய்அன்பர்கள் முறையாக விஜயம் செய்வதால் மட்டுமே அந்த பழமையான நினைவுச் சின்னம் எதிர்கால தலைமுறைக்காக அழியாமல் இருக்கும்.
தொடர்புக்கு: ஸ்ரீஜெயச்சந்திரன் - +91 9442055390
அக்ஷய
திரிதியை, திபாவளி வலம், காணும் பொங்கல் ஸ்ரீரிஷபர் வீதியுலா, ஆடி வெள்ளி
ஸ்ரீபத்மாவதி வீதியுலா போன்றவை குறிப்பிட தக்கதாகும்.
தொடர்புக்கு: ஸ்ரீஜெயச்சந்திரன் - +91 9442055390
No comments:
Post a Comment