Shri VASUPOOJYAR JAIN TEMPLE - ஸ்ரீ வாசுபூஜ்ய நாதர் ஜிநாலயம்
Location:
lies on the map in the coordination of (12.93929, 79.17255 )ie put the latitude, Longitude on the search box
lies on the map in the coordination of (12.93929, 79.17255 )ie put the latitude, Longitude on the search box
Map for Jain pilgrimage centres: Click
(Tamil nadu / Kerala)
சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் : கிளிக் செய்யவும்
(தமிழ்நாடு / கேரளா )
ROUTE:-
Tindivanam → Vandavasi → Arcot → Vellore road → Sathuvacheri = 119 kms.
Kanchipuram → Arcot → Vellore road → Sathuvacheri = 66 kms.
Vellore → Arni road → Sathuvacheri = 6 kms.
Villupuram → Gingee → Chetpet → Arni → Vellore → Sathuvacheri = 136 kms.
Tiruvannamalai → Polur → Vellore → Sathuvacheri = 88 kms.
Vandavasi → Arcot → Vellore road → Sathuvacheri = 81 kms.
செல்வழி:-
திண்டிவனம் → வந்தவாசி → ஆற்காடு → வேலூர் சாலை → சத்துவாச்சேரி = 119 கி.மீ.
காஞ்சிபுரம் → ஆற்காடு → வேலூர் சாலை → சத்துவாச்சேரி = 66 கி.மீ.
வேலூர் → ஆரணி சாலை → சத்துவாச்சேரி = 6 கி.மீ.
விழுப்புரம் → செஞ்சி → சேத்பட் → ஆரணி → வேலூர் சாலை → சத்துவாச்சேரி = 136 கி.மீ.
திருவண்ணாமலை → போளுர் → வேலூர் → சத்துவாச்சேரி = 88 கி.மீ.
வந்தவாசி → ஆற்காடு → வேலூர் சாலை → சத்துவாச்சேரி = 81 கி.மீ.
ஓம் ஹ்ரீம் ஸ்ரீவாசுபூஜ்ய தீர்த்தங்கராதி சகல
முனி கணேப்யோ அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா
ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து சம்பாபுர நகரத்து இக்ஷ்வாகு
வம்சத்து வசுபூஜ்ய மகாராஜாவிற்கும் ஜெயவதி தேவிக்கும் உதித்த திருக்குமாரனும்
ஒப்பிலா மகா புருடரும், மாணிக்க
வண்ணரும் 70 வில் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும்
72 லட்சம் வருட ஆயுள் உடையவரும் மகி (எருமை) லாஞ்சனத்தை உடையவரும்
குமார யக்ஷன் காந்தா யக்ஷியர்களால் சேவிக்கப்பட்டவரும் தர்மராதி முதலிய 66 கணதர பரமேட்டிகளை உடைய வரும் ஒரு மாதம் பிரதிமா யோகம் கொண்டவரும் சம்பாபுரி
நகர மந்தாரகிரியில் பாத்ரபத சுக்ல சதுர்த்தசியில் ஒரு ஆயிரம் முனிவர்களுடன் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீவாசுபூஜ்ய தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி
மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!
Sathuvacheri is located 7 kms from Vellore in the Arcot road. Vallimalai, an ancient monument of bas-reliefs and Jain beds on a hill, is about 15 kms from the holy place. The nearby Jains had been taken earnest effort to construct a Jinalaya there. More than one decade back they built a beautiful Jinalaya and dedicate to Shri Vasupoojya Jinar at Rengapuram area of Sathuvacheri in Vellore district.
The layout of the Vedi-block is in rectangular shape. At the heart of the hall the sanctum and Sri Vasupoojya Jinar, absolutely incised black marble statue was installed on a plinth. On the top of the womb-chamber a two-tier type Viman was crowned with Chola architectural aspects. At griva portion under
the Mahanasi Jinars are in the sitting posture in four directions. A shikara and a kalash on the peak of the Viman, all got golden yellow colour coatings. At the fore-head of the east entranceway a gallery (Shala with Devamadam) got a cement mortar statue of Shri Vasupoojya jinar incide it. ....
சத்துவாச்சேரி, வேலூரிலிருந்து ஆர்க்காடு
சாலையில் 7 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. சமண நினைவுச்சின்னங்கள் அடங்கிய வள்ளிமலைக்கு
15 கி.மீ. தொலைவில் உள்ளது. சத்துவாச்சேரிக்கு
அருகில் உள்ள வேலூரைச் சார்ந்த சமணர்களின் பெருமுயற்சியால் ரெங்கபுரம் என்னும் இடத்தில்
புதிய ஆலயம் ஒன்றை நிறுவி கி.பி. 2002 ம் ஆண்டு
ஸ்ரீவாசுபூஜ்ய ஜிநருக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
செவ்வக வடிவில் உள்ள அவ்வாலயத்தின் இதயம் போன்ற பகுதியில் கருவறை அமைத்து அதில்
ஸ்ரீவாசுபூஜ்ய தீர்த்தங்கரரின் கரும்பளிங்குச் சிலையினை முழுமையான உருவத்துடன்,
அமர்ந்த நிலையில் செய்வித்து, வேதிகையில் நிறுவியுள்ளனர். அதன் மேற்பகுதியில் விமானம் அமைத்து அதன் கிரீவப்பகுதியில் மஹாநாசியின் கீழ் நாற்திசைகளிலும் ஜிநரின் அமர்ந்த நிலை திருவுருவங்களை அமைத்துள்ளனர். மேலும் ஆலய வாசலின் மேற்புறம் சாலையில்
தேவமாடம் போல் அமைத்து அதனுள் ஸ்ரீவாசுபூஜ்யரின் உருவத்தினை வைத்துள்ளனர். ......
In front of the Vedi-block a tall Manasthamp with four Shri Vasupujya Jinar
bas-reliefs at the bottom and four stone idols at the top viman. An altar is
placed at front of the open corridor.
Several Thirthankar alloy idols, 24 Jinars cluster, Navadevatha,
Panchparameshi, Siddha model are placed on the center platform.
Regular poojas and rituals are conducted at the appropriate time. All Jain
festivals are celebrated on the relevant dates. Contact No. Shri Dhananjayan - +91 8148532540
உலோகத்தினால் செய்யப்பட்ட முக்கிய தீர்த்தங்கரர்கள், 24 தீர்த்தங்கரர்கள் தொகுப்பு, நவதேவதை, பஞ்சபரமேஷ்டி, சித்த பரமேஷ்டி போன்றவற்றையும் நடுமேடையில் வைத்து அலங்கரித்துள்ளனர்.
அந்த ஆலயத்தின் முன் உயரமான மனத்தூய்மைக் கம்பம் அமைத்து அதன் கீழ்புறம் புடைப்புச்சிற்பமாக மூலவரின் உருவத்தை நான்குபுறமும் அமைத்து, கம்பத்தின் மேற்புறம் அழகிய விமானத்தில் நான்கு உருவச்சிலைகளையும் வைத்துள்ளனர். மேலும் அதன் முன் பலிபீடம் ஒன்றும் உள்ளது. திறந்த வெளி திருச்சுற்றில் நந்தவனமும் உள்ளது.
இவ்வாலயத்திலும், வளமைபோல் நடைபெறும் தின பூஜை, விசேஷபூஜைகள், சடங்குகள், பண்டிகைகள் அனைத்தும் அந்தந்த பருவ நாட்களில் நடைபெற்று வருகிறது.
தொடர்புக்கு: ஸ்ரீதனஞ்சயன் உபாத்தியாயர்: - +91 8148532540
தொடர்புக்கு: ஸ்ரீதனஞ்சயன் உபாத்தியாயர்: - +91 8148532540
No comments:
Post a Comment