Shri ADHINATHAR JAIN TEMPLE -- ஸ்ரீ ஆதிநாதர் ஜிநாலயம்
Location:
lies on the map in the coordination of (12.53713, 79.62993 ie put the latitude, Longitude on the search box
Map for Jain pilgrimage centres: Click SALUKKAI
lies on the map in the coordination of (12.53713, 79.62993 ie put the latitude, Longitude on the search box
Map for Jain pilgrimage centres: Click SALUKKAI
(Tamil nadu / Kerala)
சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் : சளுக்கை கிளிக் செய்யவும்
(தமிழ்நாடு / கேரளா )
ROUTE:-
Tindivanam → Vandavasi → Salukkai = 45 kms.
Kanchipuram → Vandavasi salai → Salukkai = 39 kms.
Vellore → Arcot → Kalavai road → Cheyyaru → Salukkai = 83 kms.
Tiruvannamalai → Kilpennathur → Chetpet → Vandavasi → Salukkai = 84 kms.
Gingee → V.pettai road → Vandavasi → Salukkai = 56 kms
செல்வழி:-
திண்டிவனம் → வந்தவாசி → சளுக்கை = 45 கி.மீ.
காஞ்சிபுரம் → வந்தவாசி சாலை → சளுக்கை= 39 கி.மீ.
வேலூர் → ஆற்காடு → கலவை சாலை → செய்யாறு → சளுக்கை = 83 கி.மீ.
திருவண்ணாமலை → கீழ்பென்னாத்தூர் → சேத்பட் → வந்தவாசி → சளுக்கை = 84 கி.மீ.
செஞ்சி → வெ. பேட்டை சாலை → வந்தவாசி → சளுக்கை = 56 கி.மீ.
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ விருஷப தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ
அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா
ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து அயோத்தியா நகரத்து இக்ஷூவாகு வம்சத்து நாபி மஹாராஜாவிற்கும், மருதேவி க்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும், பொன் வண்ணரும் 500 வில் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 84 லக்ஷ்ம் பூர்வம் ஆயுள் உடையவரும், விருஷப லாஞ்சனத்தை உடையவரும், கோமுக யக்ஷ்ன், சக்ரேஸ்வரி யக்ஷி யர்களால் சேவிக்கப்பட்டவரும் விருஷப சேனர் முதலிய 84 கணதர பரமேட்டிகளை உடையவரும் 14 நாட்கள் உபவாசத்துடன் பல்லியங்காசனமாக இருந்து கைலாசகிரியில் மாக மாத கிருஷ்ண சதுர்தசியில் ஆயிரம் முனிவர்களுடன் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீவிருஷப தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!
Salukkai is a village 4 kms from
Vandavasi towards Kanchipuram route. It was referred as VeeraKeralaperumPalli during 11th
Century AD and a Jinalaya is there in an inscription laid near a temple can
revealed the matter. Salukki alias Salukkai is an historical importance place
of Chola dynasty.
A new
temple structure was built upon the ancient basement. East facing Jinalaya has
north entrance gate and a pathway. A guest house is also inside the complex. A
square structure is also attached with the old sanctum has viman on the top.
Inside the wome-chamber nearly 5 feet high, Shri Adhinathar granite statue with
anoint-corrosion is established over the plinch. The predecessor moolavar of no-lanchan
statues are also placed in a shelter on the back of the temple corridor.
சளுக்கை
என்னும் கிராமம் காஞ்சிபுரம் சாலையில்
4 கி.மீ. தொலைவில் உள்ளது. அந்த ஸ்தலம் கி.பி. 11ம் நூற்றாண்டில் வீரகேரளபெரும் பள்ளி என்ற பெயருடன் ஒரு ஜிநாலயம்
இருந்ததாக அருகில் உள்ள ஆலயக் கல்வெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சளுக்கி
என்ற சளுக்கை சோழ ஆட்சிக் காலத்தில் சரித்திர முக்கியத்வம் வாய்ந்தது.
பழைய ஆலய
கருவறையின் அஸ்திவாரத்தின் மேல் புதிய ஜிநாலய கருவறை கட்டப்பட்டதுடன் முன்னால் ஒரு வழிபாட்டு மண்டபத்துடன் காட்சி
தருகிறது. கிழக்கு நோக்கிய ஆலய வளாகம் வடக்கு நோக்கிய வாயில், தங்கும் விடுதியுடன் அமைந்துள்ளது. ஆலய கருவறையில் 5 அடி உயரமுள்ள கருங்கல் சிலை
(அபிஷேக
அரிமாணங்களுடன்) வேதிகையில் அமர்த்தப்பட்டுள்ளது. ஆலயத்தின் பழைய மூலவர் சிலைகள் இரண்டு
(லாஞ்சனம்
இன்றி) ஆலயத்தின் பின்புறம் உள்ள சிறு கூரையுடன் திருச்சுற்றில்
உள்ளது.
A simple single stage Viman is crowned the sanctum with shikhara and a Kalash on the peak. At the Grive circle below the Nasi, sitting postured Jinars were exhibit around the four directions.
Few alloy idols Thirthankar, 24 Jinars mould, mini Ashtamangal set are placed in front of the Moolavar. Total vedi-block is secured well by iron grill gates.
Regular poojas and rituals are conducted at the appropriate time. All Jain festivals are celebrated on the relevant dates.
Recurrent visit by the devotees can safe guard the treasure for future.
For
contact: Mr. Selvarasu - +91 9894568176
அதன் மேல் புறம் சிறிய அழகிய ஏகதள விமானம் பத்மம் கலசத்துடன் காட்சி தருகிறது. மேலும் கிரீவ சுற்றில் நாசிக்கு அடியில் அமர்ந்த நிலையில் ஜிநர் சிலைகள் நான்கு திசைகளிலும் அலங்கரிக்கின்றன.
சில உலோகத்தினால் ஆன தீர்த்தங்கரர், 24 ஜிநர்களின் தொகுப்பு , சிறிய அஷ்டமங்கல வடிவங்கள் போன்றவை மூலவரின் முன்பு உள்ள தின பூஜை மேடையில் உள்ளன. அவ் வேதிப் பகுதி யின் வாயில் இரும்புக் கதவுகளுடன் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
சமணர்கள் அவ்வூரில் வாழ்ந்திரா விட்டாலும் தினபூஜை மற்றும் மத சடங்குகள் அனைத்தும் அந்தந்த பருவ நாடகளில் நடைபெறுகிறது.
மெய்அன்பர்கள் முறையாக விஜயம் செய்வதால் மட்டுமே அந்த பழமையான நினைவுச் சின்னம் எதிர்கால தலைமுறைக்காக அழியாமல் இருக்கும்.
தொடர்புக்கு:
ஸ்ரீசெல்வராசு - +91 9894568176
No comments:
Post a Comment