Shri Neminathar Jain temple -- ஸ்ரீ நேமிநாதர் ஜிநாலயம்
lies on the map in the coordination of (12.67927, 79.33785)ie put the latitude, Longitude on the search box
Map for Jain pilgrimage centres: Click NETHAPAKKAM
(Tamil nadu / Kerala)
சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் : நேத்தப்பாக்கம் கிளிக் செய்யவும்
(தமிழ்நாடு / கேரளா )
ROUTE:-
Tindivanam → Vandavasi → Arni → Nethapakkam = 76 kms.
Kanchipuram → Arcot → Arani → Nethapakkam = 70 kms.
Vellore → Arni → Nethapakkam = 32 kms.
Villupuram → Gingee → Chetpet → Arni → Nethapakkam = 94 kms.
Tiruvannamalai → Polur → Arni → Nethapakkam = 61 kms.
Vandavasi → Arni → Nethapakkam = 42 kms.
செல்வழி:-
திண்டிவனம் → வந்தவாசி → ஆரணி → நேத்தப்பாக்கம் = 76 கி.மீ.
காஞ்சிபுரம் → ஆற்காடு → ஆரணி → நேத்தப்பாக்கம் = 70 கி.மீ.
வேலூர் → ஆரணி → நேத்தப்பாக்கம் = 32 கி.மீ.
விழுப்புரம் → செஞ்சி → சேத்பட் → ஆரணி → நேத்தப்பாக்கம் = 94 கி.மீ.
திருவண்ணாமலை → போளுர் → ஆரணி → நேத்தப்பாக்கம் = 61 கி.மீ.
வந்தவாசி → ஆரணி → நேத்தப்பாக்கம் = 42 கி.மீ.
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ நேமி தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ
அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா
ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து
துவாரகாவதி நகரத்து
ஹரி வம்சத்து சமுத்திர
விஜய மகாராஜாவிற்கும் சிவதேவி தேவிக்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மகா
புருடரும், இந்திர
நீலம் (கருப்பு) வண்ணரும் 10 வில் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் ஓரு
ஆயிரம் வருடம் ஆயுள் உடையவரும் சங்கம் (சங்கு) லாஞ்சனத்தை உடையவரும் சர்வான்ன யக்ஷன்
கூஷ்மாண்டி (தர்மதேவி) யக்ஷியர்களால் சேவிக்கப்பட்டவரும் வரதத்தர் முதலிய 11 கணதர பரமேட்டிகளை உடைய வரும் ஒரு மாதம் பிரதிமா யோகம்
கொண்டவரும் ஊர்ஜெயந்தகிரியில் ஆஷாட சுக்ல சப்தமியில் 72 கோடி 700 முனிவர்களுடன் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீ நேமி தீர்த்தங்கர பரம
ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!
Nethapakkam, is a part of Arani town, near Sathyavijayanagaram Garden
locality. A Jinalaya was built by the native Jains of Arani before the ruling of
Arani Jahir period. So it is an ancient temple more than 600 years old. Regular renovation work may conceal the
antiques.
Shri Neminathar is the main deity of the temple. A square shape pavilion supported
by circular-pillars was bifurgated in four segments with outer wall and an
entranceway. No-tower/viman is on the top of the block. Innermost ie Sanctum has
Shri Neminatha Jinar, stone plate carvings with samavasaran Jinar eight
aspects, in the meditating sitting posture, was installed on a Plinth. No-Lanchan
Jinar idol reveals the antiquity of the temple. More metal idols of this
Jinalaya are shifted to the nearby Jain temples in olden days due to security
alert. A beautiful Shri Brahmadevar stone idol is in the Jinalaya. ......
நேத்தப்பாக்கம் என்னும் புண்ணிய ஸ்தலம் ஆரணி யில் சத்தியவிஜய நகரத்தின் நந்தவனத்திற்கு அருகில் உள்ளது. அவ்விடத்தில் ஸ்ரீநேமிநாதருக்காக அர்ப்பணம் செய்யப்பட்ட
ஜிநாலயம் ஒன்று உள்ளது. ஆரணி ஜாகிர் ஆட்சிக்காலத்திற்கு
முற்பட்ட காலத்தில் வசித்து வந்த சமணர்களால் அவ்வாலயம் கட்டப்பட்டுள்ளது. ஆகவே இக்கட்டமைப்பு 600 ஆண்டுகளைக் கடந்து நிற்கிறது. பலமுறை சீரமைப்பு பணி நடந்ததால் அதன் தொன்மைக்கான
அடையாளங்கள் அழிந்துள்ளன.
சதுரமான மண்டபத்தினை பக்கச்சுவர்கள் நுழைவு வாயிலுடன் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ள கட்டுமானமாக உள்ளது.
வட்ட வடிவ தூண்களால் தாங்கி நிற்கும் இவ்வாலயத்தின் மேல் கோபுரங்கள் ஏதும் தற்போது
இல்லாமல் உள்ளது. கருவறையில் ஸ்ரீநேமிநாதரின்
திருவுருவம் கற்பலகையில், சமவசரண ஜினரின் எட்டு அம்சங்களுடன் அமர்ந்த-தியான நிலையில் செதுக்கப்பட்டு
வேதிகையில் நிறுவப்பட்டுள்ளது. அவ்வாலயத்தின்
பல உலோகச் சிலைகள் அருகிலுள்ள ஜிநாலயங்களில்,
பாதுகாப்பின்மை கருதி, வைக்கப்பட்டுள்ளன. அழகிய ஸ்ரீபிரம்மதேவரின் கற்சிலை ஒரு மேடையில் அமர்த்தப்பட்டுள்ளது. .....
Several years back the nearby Mottur, Kalpoondi, Mozhugampundi Jains are assembled here for worshipping. Now regular poojas are conducted by the nearby Jains.
Frequent visit to the Jinalaya might promote the traditional monument.
பல ஆண்டுகளுக்கு முன்னர் அருகில் உள்ள மோட்டூர், கல்பூண்டி, மொழுகம்பூண்டி யில் வசிக்கும் சமணர்கள் இவ்வாலயத்தில் வழிபாடு நடத்தியுள்ளனர். தற்போது அருகில் உள்ள சமணக் குடும்பங்கள் பூசைகள் செய்தும் பாதுகாத்தும் வருகின்றனர்.
அடிக்கடி அவ்வாலயத்திற்கு அனைத்து சமணர்களும்
வந்து வழிபாடு செய்வதன் மூலம் இப்பழமை வாய்ந்த பொக்கிஷத்தை பாதுகாக்கலாம்.
No comments:
Post a Comment