Wednesday, January 21, 2015

VELIYANALLORE - வேளியநல்லூர்



Shri MAHAVEERAR  JAIN TEMPLE  -  ஸ்ரீ மஹாவீரர் ஜிநாலயம்


Location:

lies on the map in the coordination of (12.66186, 79.58813 )ie put the latitude, Longitude on the search box

Map for Jain pilgrimage centres:   Click VELIYANALLORE
(Tamil nadu / Kerala)

சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் :  வேளியநல்லூர் கிளிக் செய்யவும் 
(தமிழ்நாடு / கேரளா )




ROUTE:-

Tindivanam → Vandavasi → Cheyyaru → Velianallore = 67 kms.

Kanchipuram → Cheyyaru → Velianallore = 30 kms.

Vellore  → Arcot → Kalavai road → Cheyyaru → Velianallore = 67 kms.

Tiruvannamalai  → Polur → Arni → Cheyyaru → Velianallore = 98 kms.


செல்வழி:-

திண்டிவனம் → வந்தவாசி  → செய்யாறு → வேளியநல்லூர் = 67க் கி.மீ.

காஞ்சிபுரம் → செய்யாறு → வேளியநல்லூர் = 30 கி.மீ.

வேலூர் → ஆற்காடு → கலவை சாலை → செய்யாறு → வேளியநல்லூர்  = 67 கி.மீ.

திருவண்ணாமலை  → போளுர் →  ஆரணி → செய்யாறு → வேளியநல்லூர் = 98 கி.மீ.





 ஓம் ஹ்ரீம் ஸ்ரீ மஹாவீர தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ
அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா



ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து குண்டலபுர நகரத்து நாத வம்சத்து சித்தார்த்த மஹாராஜாவிற்கும், பிர்யகாருணி மஹாதேவிக்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும்,  பொன் வண்ணரும் 7 முழம் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 72 வருடம் ஆயுள் உடையவரும், சிம்ம லாஞ்சனத்தை உடையவரும், மாதங்க யக்ஷ்ன், சித்தாயினி யக்ஷியர்களால் சேவிக்கப்பட்டவரும் கௌதமர் முதலிய 11 கணதர பரமேட்டிகளை உடையவரும் 2 நட்கள் ப்ரதிமா யோகம் கொண்டவரும் பாபாபுரி சரோவர மத்தியில் கார்த்திகை கிருஷ்ண சதுர்தசி திதியில் 26 முனிவர்களுடன் பரிநிர்வாணம் அடைந்த வருமான ஸ்ரீவர்த்தமான தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!



Veliyanallur, a small village is 7 kms from Cheyyar town, travel towards east and getting a south turn at Puliyampakkam in the Kanchipuram road. Since several centuries many Jain families has been living there and built a Jinalaya to Dedicate to Shri Mahaveera Jinar. Subsequent renovations might conceal the antiques.  Now jains are in meager due to emigration towards nearby cities. But native descendants are maintaining the Jinalaya in good manner.

North facing enteranceway crowned by three-tier tower (Rajagopuram) with tall gate and attached with alround fortified walls. Eevey stage of the tower got eight mortar idols of Jinars, four exhibits on each side. Chola architectural design tower has all aspects from Athistana to stupi like Sala, goot, Nasi, Mahanasi, padmam and five Kalashes on the peak.

The Vedi-block is surrounded by beautiful Garden and paved corridor. At front Dwajasthamp and high stage altar were installed. Sanctum got Shri Mahaveera Vardhamana Jinar, black granite plate bas relief has features of Padmam, Ashtamangala and Kumbam in Singadhana bheet, two shamara (whisk) maids, tri-umbrella, Prabha circle which are provide a splendid appearance.

The sanctum is crowned by simple viman with shikhar and Kalash on the peak. On griva stage four Jinar cement idols are exhibits on each direction and at the corner got single head with dual bodys lion mortar idols. .........

வேளியநல்லூர்,  செய்யாறிலிருந்து  7 கிமீ. தொலைவில்   காஞ்சிபுரம் சாலையில் பயணம் சென்று புளியம்பாக்கம் தெற்கு திருப்பத்தில் சென்றால் வரும் சிறிய கிராமம் . பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து வந்த சமண இல்லறத்தார்கள்  ஸ்ரீமகாவீரருக்காக ஒரு ஜிநாலயத்தை நிர்மாணித்துள்ளனர்.  அதன் பிறகு நடந்த சீரமைப்பு பணிகளால் அதன் தொன்மைக்கான ஆதாரங்கள் மறைந்துள்ளன.  தற்போது மிகவும் குறைந்த எண்ணிக்கையில் சமணர்கள் வாழ்ந்தாலும் அங்கு வாழ்ந்து நகரங்களில்  குடியேறிய குடும்பங்களின் வாரிசுகளும் அவர்களோடு இணைந்து அவ்வாலயத்தை  நன்கு பராமரிக்கின்றனர்.

வடக்கு நோக்கிய ஜிநாலயத்தின் நுழைவு வாயில் பெரிய இரும்பு கம்பி கதவுகளுடன், அதன் திருச்சுற்று மதிற்சுவருடன் இணைக்கப்பட்டுள்ளது.  அக்குடகரையின் மேற்புறம் சோழர் கால கலைப்பாணியில் முன்று அடுக்கு  கோபுரம் கட்டப்பட்டுள்ளது.  அதில் ஆதிட்டானத்திலிருந்து  ஸ்தூபி வரை சாலை, கபோதகம், கர்ணகூடம், மகாநாசி, பத்மம் மற்றும் ஐந்து கலசங்கள் போன்ற அனைத்து அம்சங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. 

திருச்சுற்றின் வழித்தடத்தை ஒட்டி  நந்தவனம் அமைக்கப்பட்டு  நடுவே ஆலயப்பகுதி  கட்டப்பட்டுள்ளது.  ஆலயத்தின் முன் துவஜஸ்தம்பம்  மற்றும் பெரிய மேடையுடன் கூடிய பலிபீடமும்  நிர்மாணிக்கப்பட்டுள்ளது. கருவறையில்  கருங்கல் பலகையில் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்ட ஸ்ரீவர்த்தமான ஜிநரின்  திருவுருவம் வேதிகையில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.  அச்சிலை பத்மம், சிங்காதனத்தில் அஷ்டமங்கல பொருட்கள் (பூர்ணகும்பத்துடன்), இரு சாமரைதாரிகள், முக்குடை, பிரபா ஒளி போன்ற அம்சங்களுடன் கம்பீரமான தோற்றத்துடன் காட்சி தருகிறது.

அதன் மேற்புறம் எளிய விமானம் சிகர கலசத்துடன் கட்டப்பட்டுள்ளது.  மேலும் கிரீவப்பகுதியில் நான்கு திசைகளிலும் ஜிநரின் அமர்ந்த கோல சுதைச் சிற்பமும், நான்கு மூலையில் ஒருதலை ஈருடல் சிம்ம உருவங்களும் அலங்கரிக்கின்றன. .....
 





Inside the Arthamandap all metal idols, like some Thirthankars, Panchaparameshti, Nandheeswara dheep model, Yaksh, Yakshi Shri Padmavathy, Shri Dharmadevi, are exhibit inside four gallerys two on either side of aisle. Apart from an open Mugamandap porch offer majestic look. On the fore head of this porch a gallery (sala with devamadam) got Jinar idol in sitting posture at front.

At the western side Shri Jwalamalini shrine with small Viman and Kalash is there.  Adjacent to that two Jinar granite statues are sheltered by concrete terrace. One is predecessor of Moolnayak which got all eight feature of samavasaran jinar (but a mutilation is in tri-umbrella). Another one has no lanchan Thirthankar might be very old one.


Regular poojas and rituals are conducted at the appropriate time. All Jain festivals are celebrated on the relevant dates. 

Contact No. Shri Appandai Jain  -  +91 9842338531
--------------

அர்த்த மண்டபத்தின் இருபுறம் உள்ள மாடங்களில்  முக்கிய தீர்த்தங்கரர்கள்,  பஞ்சபரமேஷ்டிகள்,  நந்தீஸ்வர தீப மாதிரி வடிவம் மற்றும் யக்ஷ, யக்ஷியர் ஸ்ரீபத்மாவதி, ஸ்ரீதர்மதேவி போன்றோரின் உலோகத் திருமேனிகள் அலங்கரிக்கின்றன. அடுத்துள்ள முகமண்டபமும் அதன் முகப்பின் மேற்பகுதியில் உள்ள (சாலையோடுள்ள) தேவமாடத்தில் உள்ள ஜிநரின் அமர்ந்த நிலை சுதைச் சிலையும் பக்கத்தில் இரு கர்ணகூடங்களும் அற்புத தோற்றத்தினை தருகிறது.

ஆலய திருச்சுற்றின் மேற்கு பகுதியில் (பெரிய கர்ணகூட அமைப்பில்) ஸ்ரீஜ்வாலாமாலினி தேவியின் சன்னதி மேல் கலசத்துடன் அமைந்துள்ளது.  அதன் அருகில் உள்ள அறையில் பழைய மூலவரான ஸ்ரீமஹாவீரரின் கற்சிலை எட்டு அம்சத்துடன் உள்ளது. (முக்குடை பின்னமாகியுள்ளது.) பக்கத்தில் மிகவும் பழமையான லாஞ்சனம் பொறிக்கப்படாத ஒரு ஜிநரின் கருங்கல் சிலையும் காட்சி தருகிறது.

 இவ்வாலயத்திலும், வளமைபோல் நடைபெறும் தின பூஜை, விசேஷபூஜைகள், சடங்குகள், பண்டிகைகள் அனைத்தும்  அந்தந்த பருவ நாட்களில் நடைபெற்று வருகிறது. 

தொடர்புக்கு: ஸ்ரீஅப்பாண்டை ஜெயின் -  +91 9842338531



No comments:

Post a Comment