Shri ADHINATHAR JAIN TEMPLE - ஸ்ரீ ஆதிநாதர் ஜிநாலயம்
Location:
lies on the map in the coordination of (12.6974, 79.30167)ie put the latitude, Longitude on the search box
Map for Jain pilgrimage centres: Click poondi
lies on the map in the coordination of (12.6974, 79.30167)ie put the latitude, Longitude on the search box
Map for Jain pilgrimage centres: Click poondi
(Tamil nadu / Kerala)
சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் : ஆரணிப்பாளையம் கிளிக் செய்யவும்
(தமிழ்நாடு / கேரளா )
ROUTE:-
(தமிழ்நாடு / கேரளா )
Tindivanam → Vandavasi → Arni → Poondi = 80 kms.
Kanchipuram → Arcot → Arani → Poondi = 72 kms.
Vellore → Arni → Poondi = 33 kms.
Villupuram → Gingee → Chetpet → Arni → Poondi = 93 kms.
Tiruvannamalai → Polur → Arni → Poondi = 62 kms.
Vandavasi → Arni → Poondi = 44 kms.
செல்வழி:-
திண்டிவனம் → வந்தவாசி → ஆரணி → பூண்டி = 80 கி.மீ.
காஞ்சிபுரம் → ஆற்காடு → ஆரணி → பூண்டி = 72 கி.மீ.
வேலூர் → ஆரணி → பூண்டி = 33 கி.மீ.
விழுப்புரம் → செஞ்சி → சேத்பட் → ஆரணி → பூண்டி = 93 கி.மீ.
திருவண்ணாமலை → போளுர் → → ஆரணி → பூண்டி = 62 கி.மீ.
வந்தவாசி → ஆரணி → பூண்டி = 44 கி.மீ.
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ விருஷப தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ
அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா
ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து அயோத்தியா நகரத்து இக்ஷூவாகு வம்சத்து நாபி மஹாராஜாவிற்கும், மருதேவி க்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும், பொன் வண்ணரும் 500 வில் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 84 லக்ஷ்ம் பூர்வம் ஆயுள் உடையவரும், விருஷப லாஞ்சனத்தை உடையவரும், கோமுக யக்ஷ்ன், சக்ரேஸ்வரி யக்ஷி யர்களால் சேவிக்கப்பட்டவரும் விருஷப சேனர் முதலிய 84 கணதர பரமேட்டிகளை உடையவரும் 14 நாட்கள் உபவாசத்துடன் பல்லியங்காசனமாக இருந்து கைலாசகிரியில் மாக மாத கிருஷ்ண சதுர்தசியில் ஆயிரம் முனிவர்களுடன் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீவிருஷப தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ மஹாவீர தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ
அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா
ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து குண்டலபுர நகரத்து நாத வம்சத்து சித்தார்த்த மஹாராஜாவிற்கும், பிர்யகாருணி மஹாதேவிக்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும், பொன் வண்ணரும் 7 முழம் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 72 வருடம் ஆயுள் உடையவரும், சிம்ம லாஞ்சனத்தை உடையவரும், மாதங்க யக்ஷ்ன், சித்தாயினி யக்ஷியர்களால் சேவிக்கப்பட்டவரும் கௌதமர் முதலிய 11 கணதர பரமேட்டிகளை உடையவரும் 2 நட்கள் ப்ரதிமா யோகம் கொண்டவரும் பாபாபுரி சரோவர மத்தியில் கார்த்திகை கிருஷ்ண சதுர்தசி திதியில் 26 முனிவர்களுடன் பரிநிர்வாணம் அடைந்த வருமான ஸ்ரீவர்த்தமான தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!
Poondi, a village at a distance of 3 kms from Arani town in the Arcot road
in Tiruvannamalai dist. A magnificient and legendary Jain temple is there. It was
built in the Chola architectural style. An inscription laid in the sanctum of
the temple by Sambuvarayar king, named as ‘Veeraveera Jinalayam’. King
Veerasamban ruler of the then, 1305 AD was built and to promote Jainism in the
area. He also patronized the temple. So it is called as Veeraveera Jinalayam. So
Jainism was followed by many people in the region before constructing the
Jinalaya.
The complex contains dual sections of Vedi-blocks, one is for Shri
Adhinathar as Ponnezhilnathar and another is for Shri Parswanathar. And shri
Dharmadevi shrine also built by the above said King of Sambuvarayar. And
subsequentely Shri Brahmadevar, Shri Saraswathi, Shri Lakshmi, Shri Chakreshwari,
Shri Padmavathy shrine with vimans and Pandugasilai Mandap on the top of the
fore-pavilion were built by the direct descendants of the
original settlers. ..............
பூண்டி, திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணிக்கு அருகில் ஆர்க்காடு சாலையில் 3 கிமீ தொலைவில் உள்ள ஒரு கிராமம். அவ்விடத்தில் பல நூற்றாண்டுகளாக
சமணர்கள் வாழ்ந்துள்ளனர். அவர்களது வேண்டுகோளுக்கிணங்கவும்,
சமண மதத்தை மேம்படுத்தும் முகமாக 14ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வாழ்ந்த வீரசம்பன்
என்னும் சம்புவராய மன்னன் ஒரு ஜிநாலயத்தை
கட்டியுள்ளார். தனது வாரிசுகளுக்கும் சமணப்பெயர்களையும்
சூட்டியுள்ளார். அகவே பூண்டி ஜிநாலயத்தை
வீரவீர ஜிநாலயம் என்றும் அழைத்துள்ளனர்.
அவ்வாலயத்தில் இரு வேதிகையுடன் கட்டமைப்பு உள்ளது. ஸ்ரீஆதிநாதருக்கு ஒன்றும் ஸ்ரீ பாரஸ்வநாதருக்கு ஒன்றுமாக கட்டப்பட்டுள்ளது.
மேலும் தர்மதேவிக்காக ஒரு கோபுரத்துடன் சன்னதியும்
மேற்சொன்ன மன்னரால் கட்டப்பட்டுள்ளது. பிற்காலத்தில்
20 ம் நூற்றாண்டிலும் ஸ்ரீபிரமம்மதேவர், ஸ்ரீசரஸ்வதி
தேவி, ஸ்ரீலக்ஷ்மி தேவி, ஸ்ரீசக்ரேஸ்வரி தேவி, ஸ்ரீபத்மாவதி தேவி போன்ற சன்னதிகளும்
முன்மண்டபத்தின் மேல் தளத்தில் ஒரு பாண்டுக சிலை மண்டபமும் அங்கு வாழும் சமணக் குடும்பத்தினரால்
கட்டப்பட்டுள்ளன. ..........
|
||
Now the renovation work is going on with the guidelines of ASI. The entranceway was attached with the alround fortified wall of the temple. To the fore, Shri Parshwanathar Vedi-block was built with Sanctum, fore-sanctum, Arthamandap, Mahamandap and Mugamandap porch. A standing posture of Shri Parswanathar stone plate bas-relief is established on the Plinth. The five feet statue has beautiful carving of the Lord figure with dilated five headed snake over the head and its long tail reach the bottom. That was crowned by two tiers Viman with all features of Chola temple towers. Each tier got one sitting posture Thirthankar idol on four directions. One standing Jinar is in the west direction differently.
Two 24 Thirthankars assembly stone plate incision statues and a Navadevatha stone carvings are in the pavilion. Some alloy pantheons are also present in the portion.
Adjacent to that another block has the same sections with Shri Adhinathar, named as ‘Ponezhilnathar’ / ‘Ponneyilnathar’ in the poems, stone plate encraving with Jinar features was installed on the Vedi-platform. On left side room Shri Chandraprabhanathar stone idol with Samavasaran Jinar eight aspects engravings was seated. On the otherside Shri Jwalamalini Devi stone idol is placed on a separate platform. In front of the chamber a Manasthamp is installed gigantically with four Jinars at the bottom in sitting posture and in standing Jinars at the top viman. .......
தற்போது ஆலயத் திருப்பணி வேலைகள் இந்திய தொல் பொருள் இலாகாவினரின் வழிகாட்டுதலில் நடந்து கொண்டிருக்கின்றன. ஆலயத்தின் சுற்றுச்சுவர்கள் அதன் கிழக்கில் உள்ள நுழைவு வாயிலுடன் இணைக்கப் பட்டுள்ளன. ஆலயத்தின் முன்பகுதியில் ஸ்ரீபார்ஸ்வநாதர் ஆலயம் கருவறை, அர்த்த மண்டபம், மகாமண்டபம், முகமண்டபம் போன்ற வற்றுடன் அமைக்கப்பட்டுள்ளது. கருவறை வேதிகையில் ஸ்ரீபார்ஸ்வநாதரின் கற்பலகையில் செதுக்கப்பட்ட நின்ற நிலை புடைப்புச் சிற்பம் நிறுவப்பட்டுள்ளது. ஐந்தடி உயர அந்த அழகிய சிலையின் தலையின் மேற்புறம் ஐந்து தலைநாகம் நன்கு விரிந்த நிலையில் காட்டப்பட்டு அதன் வால்பகுதி அச்சிலையின் கால்பகுதி வரை யுள்ளது. அக் கருவறையின் மேல் துவிதள விமானம் சிகர கலசங்களுடன் சோழர் கால கோபுர கலையம்சங்களுடன் கட்டப்பட்டுள்ளது. மேலும் அதன் நாற்திசைகளிலும் தளத்திற்கு நான்கு தீர்த்தங்கரர்கள் அமர்ந்த நிலையிலும் தென்பகுதியின் கீழ் புறம் ஒரு சிலை நின்ற நிலையிலும் அமைக்கப்பட்டுள்ளது.
24 தீர்த்தங்கரர்களின் கற்சிலைகள் இரண்டும், நவதேவதை கற்சிலையும் ஆலய மண்டபத்தில் (ஆலய சீரமைப்பினால்) வைக்கப்பட்டுள்ளன. மேலும் சில உலோகச்சிலைகளும் பாதுகாக்கப் பட்டுள்ளன.
அந்த ஆலயத்தின் அருகில் ஸ்ரீஆதிநாதருக்கான தனியாலயம் அதே கலையம்சங்களுடன், ஒரு மனத்தூய்மைக் கம்பத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. அம்மூலவரை 'பொன்னெழில் நாதர் (பொன்னெயில் நாதர்)' என்று பாமாலைகளில் போற்றி பாடப்பட்டுள்ளது. வேதிகையில் உள்ள ஸ்ரீஆதிநாதர் சிலை அமர்ந்த நிலையில் முக்குடை, பிண்டி மரம், சாமரை தாரிகளுடன் அழகாக ஒரு கற்பலகையில் செதுக்கப்பட்டு நிறுவப்பட்டுள்ளது. அடுத்து ஸ்ரீஜ்வாலாமாலினி கற்சிலை ஒன்றும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் ஒரு சந்திரப்பிரப நாதர் சிலையும் தனி மேடையில் அமர்த்தப்பட்டுள்ளது. முன்பகுதியில் உள்ள மனத்தூய்மைக் கம்பத்தின் கீழ்புறம் நான்கு தீர்த்தங்கரர்கள் சிலைகள் அமர்ந்த நிலையிலும் மேற்புறம் உள்ள சிறிய விமானத்தில் நின்ற நிலையிலும் நாற்திசை களில் வடிக்கப்பட்டுள்ளன. ......
Both two sanctum block has separate altars at front in the corridor. On the back of the Chambers two shrine rooms has separate plinth and Viman, shikhar and Kalash on the top arranged in the either corner of the corridor. The two mini-temples consist of Shri Brahmadevar and Shri Dharmadevi stone statues were installed. Between the two mini-temples four non-crowned shrines were built which has Shri Sarawathi Devi, Shir Lakshmi devi, Shri Chakreswari devi, Shri Padmavathi devi arranged in order. These are belongs to 20th Century structures. ........
இரு ஆலயத்தின் முன்பகுதியிலும் தனியாக ஒரு பலிபீடம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. ஆலயத்தின் பின்புற இருமூலைகளிலும் சிற்றாலயம் அமைத்து தென்மேற்கில் ஸ்ரீபிரம்மதேவர் வேதிகையிலும், வடமேற்கில் ஸ்ரீதர்மதேவி கற்சிலையும் நிறுவப்பட்டுள்ளன. அவை மேற்புறம் சிறிய விமானம் கலசங்களுடனும் , முன்மண்டபத்துடனும் காட்சியளிக்கின்றன. அவற்றிற்கு இடையே நான்கு சன்னதிகள் மேல்விமானம் இன்றி ஸ்ரீசரஸ்வதி தேவி, ஸ்ரீலக்ஷ்மி தேவி, ஸ்ரீசக்ரேஸ்வரி தேவி, ஸ்ரீபத்மாவதி தேவி போன்ற சாசன தேவியர்கள் நிறுவப்பட்டுள்ளனர். அவ்வமைப்புகள் சென்ற நூற்றாண்டில் கட்டப்பட்டவையாகும். ......
A staircase is for Kalash Mandap of fore-porch. On the top floor a Pandugasilai pavilion with four pillars is also constructed.
All the above are maintained by Archeology Survey of India and Poojas of daily has been conducted by state government staff. All periodical rituals and festivals are conducted and celebrated by the Jain community people. .......
மேலும் ஆலய முன்மண்டபத்தின் மேல் தளத்திற்கு செல்ல கிணற்றிற்கு அருகிலிருந்து படிகள் அமைக்கப்பட்டு பாண்டுக சிலை மண்டபம் நான்கு தூண்களுடன் கட்டப்பட்டுள்ளது.
இந்திய தொல்பொருள் இலாகாவினரால் பாதுகாக்கப்பட்டு வரும் இவ்வாலயத்தில் பூஜைகள்
அனைத்தும் மற்ற ஆலயங்கள் போல் செவ்வனே நடைபெறுகின்றன. மேலும் சிறப்பு வழிபாடுகளும்,
பண்டிகைகளும் அருகில் உள்ள சமணக்குடும்பங்களால் அந்தந்த பருவ நாட்களில் நடைபெற்றும்
வருகிறது.
No comments:
Post a Comment