Sunday, January 25, 2015

NALLUR - நல்லூர்


Shri ADHINATHAR  JAIN TEMPLE  --  ஸ்ரீ ஆதிநாதர்  ஜிநாலயம்Location:

lies on the Google map in the coordination of (12.40958, 79.62169) ie put the latitude, Longitude on the search box


Map for Jain pilgrimage centres:   Click NALLUR
(Tamil nadu / Kerala)

சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் :   நல்லூர் கிளிக் செய்யவும் 
(தமிழ்நாடு / கேரளா )

ROUTE:-

Tindivanam → V. Pettai → Katteri → Nallur  = 28 kms.

Kanchipuram → Vandavasi → Tindivanam salai → Nedukuppam →Nallur = 58 kms.

Vellore  → Arani → Vandavasi → Nallur = 97 kms.

Tiruvannamalai  → Gingee → V.pettai road → Vandavasi → Nallur  = 79 kms.

Gingee → V.pettai road → Katteri → Nallur  = 41 kmsசெல்வழி:-

திண்டிவனம் → வெ. பேட்டை → காட்டேரி → நல்லூர்  = 28 கி.மீ.

காஞ்சிபுரம்  → வந்தவாசி  → திண்டிவனம் சாலை → நடுக்குப்பம் → நல்லூர் = 58 கி.மீ.

வேலூர் → ஆரணி → → வந்தவாசி  → திண்டிவனம் சாலை → நடுக்குப்பம் → நல்லூர்  = 97 கி.மீ.

திருவண்ணாமலை  → செஞ்சி → வெ. பேட்டை → காட்டேரி  → நல்லூர் = 85 கி.மீ.

செஞ்சி → வெ. பேட்டை → காட்டேரி  → நல்லூர் = 41 கி.மீ.
 ஓம் ஹ்ரீம் ஸ்ரீ விருஷப தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ 
 அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா 


ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து அயோத்தியா நகரத்து இக்ஷூவாகு வம்சத்து நாபி மஹாராஜாவிற்கும், மருதேவி க்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும், பொன் வண்ணரும் 500 வில் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 84 லக்ஷ்ம் பூர்வம் ஆயுள் உடையவரும், விருஷப லாஞ்சனத்தை உடையவரும், கோமுக யக்ஷ்ன், சக்ரேஸ்வரி யக்ஷி யர்களால் சேவிக்கப்பட்டவரும் விருஷப சேனர் முதலிய 84 கணதர பரமேட்டிகளை உடையவரும் 14 நாட்கள் உபவாசத்துடன் பல்லியங்காசனமாக இருந்து கைலாசகிரியில் மாக மாத கிருஷ்ண சதுர்தசியில் ஆயிரம் முனிவர்களுடன் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீவிருஷப தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!Nallur a hamlet has a beautiful and ancient Jinalaya built 500 years ago by the native Jains. It is situated in 5 kms towards east of Nadukuppam stopping on the Tindivanam-Vadavasi road. The Jinalaya reflects old Dravidian temple art style and Jains traditional models. The layout consists of all features like Sanctum, Arthamandap, Mahamandap, Mugamandap, Kudagarai, etc..

The east entranceway with iron gates is secured by the alround compound wall. On the top of Kudagarai (entranceway) adjacent a Pandugasilai four pillar mandap lies upon a room.


A Swajasthampam and an altar pedestal are in the open corridor. Also a stone made Manasthamp pillar fasten on a platform with four Jinar bas relief sculptures at the bottom and four Jinar stone idols on the top mini-porch. ........


நல்லூர் என்னும் சிற்றூரில்  500 ஆண்டுகால பழமையான ஜிநாலயம் ஒன்றுள்ளது.  திண்டிவனம் - வந்தவாசி  சாலையிலிருந்து நடுக்குப்பம் பஸ் நிறுத்தத்திலிருந்து  5 கி.மீ. தொலைவில் உள்ளது.  திராவிட ஆலய கலைப்பாணியில்  சமண பாரம்பரியங்களைக்  கொண்டுள்ள சின்னமாக விளங்குகிறது.  அதில் கருவறை, அர்த்தமண்டபம்,  மகாமண்டபம்,  முகமண்டபம் போன்ற  அனைத்து அம்சங்களும்  அடங்கியுள்ளன.


கிழக்கு  நோக்கிய நுழைவு பாதுகாப்பு கதவுகளுடன்  திருச்சுற்று மதிற்சுவர்களுடன் இணைந்துள்ளது.  அக்குடகரை வாயிலுக்கு அருகில் உள்ள  அறையின்  மேல்தளத்தில் பாண்டுகசிலை  மண்டபம் ஒன்று  காட்சி தருகிறது.  

அவ்வாலயத்தின் முன் துவஜ மரமும், ஒரு பலிபீடமும் மற்றும் அழகிய நெடிய  கருங்கல்லினால் ஆன மனத்தூய்மைக் கம்பம்,  அதன்  பீடத்தினை அடுத்து நாற்புறமும் ஜிநரின் புடைப்புச் சிற்பங்களுன்,  மேல் சிறிய மண்டப வடிவில்  நான்கு ஜிநர்களின் அமர்ந்த நிலை வடிவங்களுடன் நிறுவப்பட்டு காட்சி தருகின்றன. ........The sanctum has a gigantic Shri Adhinathar stone plate bas relief with shamara maids, tri-umbrella canopy, prabha circle behind the head is installed on a plinth. The Jinar and the singathathana are protruding from the other back carvings, is unique one. It is crowned by two stage Viman shikhar with padmam and uni-kalash on the top. Along the first stage four sitting postured Jinars on the sala portion and the top tier got standing state Jinars below the nasi position on each directions and also with supporting idols, Devars, Kandharvars are decors beautifully. 

The arthamandap back-end, Daily pooja platform got a stone plate carving of Shri Rishabhdev and also an old Jinar in depreciated condition (gotten from other community clash) are seated. Apart from many metal alloy idols of all category ie Thirthankars with prabha circles, 24 thirthankar mould, Navadevatha, Panchaparameshti, Mahameru, Nandheeswara dheeba and some Yaksh, Yakshies are also decorated on either side platforms. Stone idols of Shri Brahmadevar seated on an elephant and Shri Kooshmandini Devi was installed on individual pedestals of the aisle. The wing is secured tightly by strong doors.  .......


ஆலய கருவறையின் வேதிகையில்  ஸ்ரீஆதிநாதரின்  கரும்பலகை புடைப்பு சிற்பம் ஒன்று சாமரைதாரிகள், மேல் முக்குடை, பிரபை ஒளிவட்டம் போன்ற கலை அம்சங்களுடன் நிறுவப்பட்டுள்ளது.  அதில்  திருவின் உருவம் அதன் மேடையுடன் சற்று பிதுக்கத்துடன்  செதுக்கப்பட்டுள்ளது  அதன் தனித்தன்மையை காட்டுகிறது.  அதன் மேற் இருதள விமானம் ஒன்று  பழைய முறைப்படி சிகர கலசத்துடன் கட்டப்பட்டுள்ளது.  அதன் கீழ்தளத்தின்  நாற்திசையிலும்  சாலைஅமைப்பின் மேல்  அமர்ந்த நிலை ஜிநரின் சுதைச் சிற்பங்களும்,   மேல் தளத்தின் நாசிக்கடியில்  நின்ற நிலை உருவங்களின் சுதைகளும், தேவர்கள், கந்தர்வர்கள், தாங்கும் சிலைகளும் அழகுடன் காட்சி அளிக்கின்றன.


அர்த்த மண்டபத்தின் தின பூஜை மேடையில் ஸ்ரீஆதிநாதரின் கற்சிலை  அபிஷேகத்திற்காகவும் மேலும் ஒரு ஜிநரின் உருவச்சிலையும் அமர்த்தப்பட்டுள்ளன.  (அது கடந்த காலத்தில் பிறமத ஆக்கிர மிப்பிலிருந்து மீட்கப்பட்டதாகும்.)  அதன் இருபுற  மேடைகளில் பல தீர்த்தங்கரரின் உலோகச்சிலைகள் பிரபையுடனும்,24 தீர்த்தங்கரர்களின் தொகுப்பு, நவதேவதை, பஞ்சபரமேஷ்டிகள், மகாமேரு, நந்தீஸ்வர தீபம் மற்றும் சில முக்கிய யக்ஷ, யக்ஷியர்களின் உருவச்சிலைகளும் அலங்கரிக்கின்றன.  அதன் இருபுறம் உள்ள மேடையில் ஸ்ரீபிரம்மதேவரின் கற்சிலை யானைமீதமர்ந்த நிலையிலும்,  ஸ்ரீதர்மதேவியின் கற்சிலை தனி மேடையில் நிறுவப்பட்டுள்ளன. அந்த பகுதி  நல்ல கனமான கதவுகளுடன்  பாதுகாப்பாக உள்ளது. ..........
The Mahamandap south and north pillars has bas-reliefs of Shri Vardhamanar and Shri Rishabadevar images. At top of the fore-porch is decorated by a gallery, inside the curved box a mortar image of Shri Adhinathar with two whisk maids.
On the northside of corridor got a pavilion, there were the miniature arrangements of Jinar preaching venue ie reflections of Samavaran model, having all the specimans at the traditional arena. This is one of the beautiful diminutive models of the Jain monuments.

Also a Navagraha idols shrine is adjacent to the pavilion. The lotus type pedestal having nine metal alloy images of Navagraha images is distinct one.
All poojas, rituals and festivals are conducted and celebrated recurrently at the relevant times.

These are all the places where memories of yesteryears thrive. They are the reflections of bygone days where the images are. So the devotees and passersby should visit the places can safeguard the valuble treasures from the further deterioration. 


For contact: Shri Mahaveer Upathiayar - +91 9894026907

************
  
மகாமண்டபத்தின் இரு தூண்களில் ஸ்ரீவர்த்தமாணர் மற்றும்  ஸ்ரீஆதிநாதரின் புடைப்புச் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. முகமண்டபத்தின் வாயிலின் மேற்தளத்தில் அழகிய அரைவட்ட மாடத்தில் ஒரு ஜிநரின் சுதைச்சிற்பம் சாமரைதாரிகளுடன்  காட்சி அளிக்கிறது.

திருச்சுற்றின் வடபுறத்தில் உள்ள மண்டபத்தின் உள்ளே  சமவசரணத்தின்  சிறிய மாதிரி வடிவமைப்பின் அம்சங்களுடன்  அழகாக அமைக்கப்பட்டுள்ளது.  அவ்வறங்கூறும் மன்றத்தில் உள்ள அனைத்து வடிவமைப்பும், உருவங்களும் அழகிய வண்ணம் தீட்டி  அமைக்கப்பட்டுள்ளது.  அந்த பாரம்பரிய அமைப்பு மிகச்சில ஆலயங்களில் மட்டுமே நினைவுச் சின்னமாக நிறுவப்பட்டுள்ளன.  அதன் அருகில் உள்ள சன்னதியில் நவகிரகங்களின்  உலோகச் சிலைகள்  மேடையில்  நிறுவப்பட்டுள்ளது. அவ்வமைப்பு தனித்துவம் வாய்ந்ததாகும்.

அனைத்து சமண ஆலய பூஜைகளும்,   சடங்குகளும்  மற்றும் அனைத்து பண்டிகைகளும்  அந்தந்த பருவ தினங்களில் நடைபெறுகிறது.


இதுபோன்ற ஸ்தலங்கள் அனைத்தும் நமது நினைவுச்சின்னங்களாக விளங்கின்றன.  அவை நமது கடந்த கால பாரம்பரியத்தை  வெளிப்படுத்தும்  உருவங்களைக் கொண்டுள்ளது.  கவே அவ்வழியே செல்லும் மெய்யன்பர்கள்  விஜயம் செய்வதினால் மட்டுமே அப்பொக்கிஷங்களை வருங்கால சீரழிவிலிருந்து பாதுகாக்கமுடியும்.


குறிப்பாக அக்ஷய திரிதியை ரிஷபநாதர் வீதியுலா, ஸ்ரீமஹாவீர ஜெயந்தி ஸ்ரீமஹாவீரர் வீதியுலா, காணும் பொங்கல் ஸ்ரீபத்மாவதி வீதியுலா, நவராத்திரி விழா, மார்கழி முக்குடை, தீபாவளி விதானம் போன்றவை யாகும்.

தொடர்புக்கு: ஸ்ரீ ஸ்ரீமஹாவீர உபாத்தியாயர் -  +91 9894026907


2 comments:

  1. Sir
    Nallur is my native village. Excellent pictures and good spiritual experience. These photos motivate to meet our desire to visit our native frequently. Thanks for the wonderful service.

    ReplyDelete