Wednesday, January 21, 2015

VELLAI - வெள்ளை


Shri ADHINATHAR  JAIN TEMPLE  --  ஸ்ரீ ஆதிநாதர் ஜிநாலயம்Location:

lies on the map in the coordination of (12.64636, 79.51028) ie put the latitude, Longitude on the search box

Map for Jain pilgrimage centres:   Click VELLAI
(Tamil nadu / Kerala)

சமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் :  வெள்ளை கிளிக் செய்யவும் 
(தமிழ்நாடு / கேரளா )

ROUTE:-

Tindivanam → Vandavasi → Cheyyaru → Vellai = 70 kms.

Kanchipuram → Cheyyaru → Vellai = 33 kms.

Vellore  → Arcot → Kalavai road → Cheyyaru → Vellai = 70 kms.

Tiruvannamalai  → Polur → Arni → Cheyyaru → Vellai = 101 kms.


செல்வழி:-

திண்டிவனம் → வந்தவாசி  → செய்யாறு → வெள்ளை = 70 கி.மீ.

காஞ்சிபுரம் → செய்யாறு → வெள்ளை = 33 கி.மீ.

வேலூர் → ஆற்காடு → கலவை சாலை → செய்யாறு → வெள்ளை  = 70 கி.மீ.

திருவண்ணாமலை  → போளுர் →  ஆரணி → செய்யாறு → வெள்ளை = 101 கி.மீ. ஓம் ஹ்ரீம் ஸ்ரீ விருஷப தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ 
 அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா 


ஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து அயோத்தியா நகரத்து இக்ஷூவாகு வம்சத்து நாபி மஹாராஜாவிற்கும், மருதேவி க்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும், பொன் வண்ணரும் 500 வில் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 84 லக்ஷ்ம் பூர்வம் ஆயுள் உடையவரும், விருஷப லாஞ்சனத்தை உடையவரும், கோமுக யக்ஷ்ன், சக்ரேஸ்வரி யக்ஷி யர்களால் சேவிக்கப்பட்டவரும் விருஷப சேனர் முதலிய 84 கணதர பரமேட்டிகளை உடையவரும் 14 நாட்கள் உபவாசத்துடன் பல்லியங்காசனமாக இருந்து கைலாசகிரியில் மாக மாத கிருஷ்ண சதுர்தசியில் ஆயிரம் முனிவர்களுடன் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீவிருஷப தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து! நமோஸ்து! நமோஸ்து!Vellai, a hamlet situated nearly 3 kms from Cheyyaru town towards Thavasi route. Very few Jain families are living in the village. But it got 400 years old Jinalaya, Shri Adhinatha Jinar has been worshipped as Main deity.

East facing Jinalaya is surrounded by wall and an entry gate. Outcide of the vedi-block is stacked by plants and bushes. The temple layout is in medium size have features of sanctum, Arthamandap and other features. Incide the womb-chamber Shri Adhinathar stone plate carvings with Samavasaran Jinar eight features etched, without Lanchan, is established on the plinth. The statue carvings are influences the art of 400 years old design.


One more Shri Rishabhadevar stone absolute-carving statue is on a separate platform in the south side of Arthamandap. Shri Padmavathy devi granite statue canopied by dilated five headed snake was also installed on the north side of aisle. .....

வெள்ளை, ஒரு சிறிய கிராமம்  செய்யாறு நகருக்கு  அருகில் 3 கி.மீ. தொலைவில் தவசி சாலையில் உள்ளது. மிகவும்  குறைந்த எண்ணிக்கையில்  சமணர்கள் வசிக்கும்  இவ்வூரில்  400 ஆண்டுகளைக் கடந்த பழமையான ஸ்ரீஆதிநாதருக்கான  ஜிநாலயம் ஒன்றுள்ளது. 

சுற்றுச் சுவருடன்  இரும்பு கம்பி கதவுகளைக் கொண்ட கீழ்திசை நோக்கிய இவ்வாலயத்தின்  மத்தியில் உள்ள  வேதிப்பகுதியைச் சுற்றிலும்  முட்புதர் செடிகள்  அடர்த்தியாக வளர்ந்துள்ளன.  சிறிய ஆலயமே ஆனாலும் கருவறை, இடைநாழி, அர்த்த மண்டபம், மேல் விமானம் போன்ற அனைத்து அம்சங்களும் நிறைந்து விளங்குகிறது.  கருவறை யில் உள்ள மூலவர் சிலை கருங்கல் பலகையில்  புடைப்புச் சிற்பமாக சமவசரண ஜிநரின் எட்டு அம்சங்களுடன் லாஞ்சனம் இன்றி செதுக்கப்பட்டு  வேதிகையில் நிறுவப்பட்டுள்ளது.  அதன் கலை அம்சங்கள் 400 ஆண்டுகளுக்கு முந்திய சிற்பங்களின் தொன்மை தெரிகிறது. 


அர்த்த மண்டபத்தின் தென்புறம் ஸ்ரீரிஷபதேவரின்  முழுஉருவ கற்சிலை ஒன்று மேடையில் உள்ளது.  வடபுறம் ஸ்ரீபத்மாவதி தேவியின் கற்சிலை தலையில் ஐந்து தலை நாகம்   விரிந்த குடை போல் செதுக்கப்பட்டு மேடையில் நிறுவப்பட்டுள்ளது.  


The sanctum is covered by single stage Viman with padmam and kalash on the top. At the Grive section four Jinar mortar idols in sitting posture with tri-umbrella is under mahanasi exhibits on four directions. At the top of the entranceway a Jinar mortar idol in the sitting posture with two whisk maids and tri-umbrella is seated inside a gallery.


Though Jains are in acute number the Daily pooja and rituals are conducted at the appropriate time. 

Regular visit by the devotees can safe guard the treasure for future. 

For contact: Shri Jeevagan -  +91 9751521442

----------

கருவறையின் மேற்புறம் ஏகதள விமானம் சிகர கலசத்துடன் அழகாக அமைக்கப்பட்டுள்ளது.  அதன் கிரீவப்பகுதியின் நாற்திசைகளிலும்  அமர்ந்த நிலையில் ஜிநரின் உருவம் மகாநாசிக்கு கீழ் முக்குடை யுடன் காட்சி தருகிறது.  ஆலய முகப்பின் மேற்தளத்தில்   தேவமாடம் போல் அமைக்கப்பட்டு அதனுள் முக்குடை மற்றும் சாமரைதாரிகளுடன்  ஜிநரின் சுதைச் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

குறைந்த அளவில் சமணர்கள் அவ்வூரில் வாழ்ந்திருந்தாலும் தினபூஜை மற்றும் மத சடங்குகள் அனைத்தும் அந்தந்த பருவ நாடகளில் நடைபெறுகிறது.

மெய்அன்பர்கள்  முறையாக விஜயம் செய்வதால் மட்டுமே  அந்த பழமையான நினைவுச் சின்னம் எதிர்கால தலைமுறைக்காக அழியாமல் இருக்கும். 

தொடர்புக்கு: ஸ்ரீஜீவகன் -  +91 9751521442


No comments:

Post a Comment